ஏர் இந்தியா

 1. சௌதிக் பிஸ்வாஸ்

  பிபிசி செய்தியாளர்

  Air India plane

  ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தான் சென்ற ஏர் இந்தியாவின் ஒரே விமானம் தலைநகர் காபூல் மீது ஒன்றரை மணி நேரம் சுற்றிக்கொண்டிருக்க நேர்ந்தது.

  மேலும் படிக்க
  next
 2. மயூரேஷ் கொன்னூர்

  பிபிசி மராத்தி

  இந்தியா

  1990-ம் ஆண்டுக்கு பிறகு பிறந்த தலைமுறையினருக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இந்தியாவை ஊகிப்பது கடினமாக இருக்கும். அந்த அளவிற்கு மாற்றங்கள் இந்தியாவில் நிகழ்ந்துள்ளன.

  மேலும் படிக்க
  next
 3. ஏ.டி.எம் இயந்திரங்களில் நூதன பண மோசடி - டெல்லி கும்பலை தேடும் சென்னை போலீஸ்

  BANK
  Image caption: கோப்புப்படம்

  சென்னையில் இந்திய ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட வகை ஏ.டி.எம் இயந்திரங்களை குறிவைத்து நடந்த பண மோசடியால் வங்கி நிர்வாகம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. டெல்லியை சேர்ந்த வடமாநில கும்பல் சென்னையில் தங்கியிருந்து இந்தச் செயலில் ஈடுபட்டு வந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியின் டெபாசிட் வசதியுள்ள ஏ.டி.எம் (Cash deposit machine) இயந்திரங்களில், அண்மைக்காலமாக பணம் குறைந்து வருவது தொடர்பாக வங்கி அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதிலும், கீழ்பாக்கம், வடபழனி, விருகம்பாக்கம், தரமணி, வேளச்சேரி எனப் பரவலாக ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் குறைந்து வந்துள்ளது. அதாவது, 10 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டால் அதில் இருந்து ஒன்றரை லட்சம் முதல் 2 லட்சம் வரையில் பணம் குறைவது கண்டறியப்பட்டது.இதுதொடர்பாக, மேற்கண்ட பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசாரின் தீவிர விசாரணையில் ஹெல்மெட் அணிந்த நபர் ஒருவரும் இன்னொரு இளைஞரும் கடந்த 17 ஆம் தேதி ஏ.டி.எம் இயந்திரத்துக்குள் செல்வதும் பின்னர் வேறு யாரும் வருகிறார்களா என நோட்டமிட்ட பின்னர் பணத்தை எடுத்துச் செல்வதும் பதிவாகியுள்ளது.

  அந்த வகையில் தற்போது வரையில் 48 லட்ச ரூபாய் பணம் மோசடியாக எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.இந்தச் சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ள எஸ்.பி.ஐ வங்கி அதிகாரிகள், ` பணத்தை டெபாசிட் செய்யும் வசதியுள்ள இயந்திரங்களில் மட்டும் இந்த மோசடி நடைபெற்றுள்ளது. அதிலும், குறிப்பிட்ட மாடல் இயந்திரத்தை மட்டும் இலக்காக வைத்து மோசடி நடந்துள்ளது' எனத் தெரிவித்துள்ளனர். ``டெல்லியில் உள்ள வங்கி ஒன்றின் ஏ.டி.எம் அட்டைகளை மோசடிக்காக பயன்படுத்தியுள்ளனர். ஏ.டி.எம் மையத்துக்குள் சென்றதும், எவ்வளவு தொகை வேண்டும் என டைப் செய்வார்கள். இதன்பின்னர் பணம் வரும்போது அதனை எடுக்காமல் இருந்துவிட்டு, மீண்டும் அந்தப் பணம் பெட்டிக்குள் செல்லும் நேரத்தில் ஷட்டரை அழுத்திப் பிடித்துள்ளனர்.

  இதன் காரணமாக பணம் உள்ளே சென்றுவிட்டதாக வங்கிக்குத் தகவல் சென்றுவிடும். ஆனால், அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு மோசடிக் கும்பல் பறந்து விடும். இதன் பின்னர், அடுத்த ஏ.டி.எம் இயந்திரம் எனத் தொடர்ந்து முறைகேடு செய்துள்ளனர்.

  இப்படியொரு மோசடி தொழில்நுட்பம் மூலம் எஸ்.பி.ஐ வங்கிக்கு 48 லட்ச ரூபாய் வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மோசடிக்காக ஏராளமான ஏ.டி.எம் அட்டைகளையும் பயன்படுத்தியுள்ளனர்.

  குறிப்பிட்ட அந்த ஏ.டி.எம் கார்டின் வங்கிக் கணக்குகள், டெல்லியில் உள்ள ஒரு வங்கியின் முகவரியைக் காட்டுகிறது" என்கின்றனர் சென்னை மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள்.மேலும், ``ஏ.டி.எம்களில் நடந்த இந்த மோசடி குறித்து தொடக்கத்தில் வங்கிகளுக்கு தெரியவில்லை. தொடர்ச்சியாக பணம் குறைவதைக் கண்டறிந்த பின்னர்தான் காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். கடந்த நான்கு நாட்களாக கொள்ளையில் ஈடுபட்டு வந்த இந்தக் கும்பல், தற்போது ஹிரியானாவில் உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள்" என்கின்றனர்.இது தொடர்பாக, எஸ்.பி.ஐ வங்கி நிர்வாகம் சி.சி.டி.வி காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பதிவாகியுள்ள இரண்டு பேர் தான் மோசடியில் ஈடுபட்டவர்கள் என வங்கி நிர்வாகம் உறுதியாகத் தெரிவித்துள்ளது. ``பணம் டெபாசிட் இயந்திரத்தில் நடந்த மோசடி காரணமாக, குறிப்பிட்ட வகை ஏ.டி.எம் இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு எஸ்.பி.ஐ வங்கி நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஹிரியானாவில் உள்ள மோசடிக் கும்பல் சிக்கிய பிறகுதான், எத்தனை வங்கிகளில் இதே பாணியில் மோசடி செய்துள்ளனர் என்பது தெரிய வரும்" என்கின்றனர் சென்னை காவல்துறை மத்திய குற்றப் பிரிவின் வங்கி மோசடிப் பிரிவு காவலர்கள்.

 4. ஏர் இந்தியாவின் டேட்டா சர்வரில் சைபர் தாக்குல் – திருட்டுப்போன வாடிக்கையாளர்கள் தகவல்கள்

  ஏர் இந்தியா

  தனது தகவல் சர்வரில்சைபர் தாக்குதல் நடைபெற்றுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

  இதனால் உலகம் முழுவதும் உள்ள 4.5 மில்லியன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த தகவல் திருட்டு முதலில் பிப்ரவரி மாதம் ஏர் இந்தியா நிறுவனத்திற்குத் தெரியப்படுத்தப்பட்டது.

  வாடிக்கையாளர்களின் கடவுச்சீட்டு, பயணச்சீட்டு தகவல்கள் மற்றும் க்ரெடிட்கார்ட் தகவல்கள் திருடப்பட்டுள்ளன.

  இருப்பினும் இலக்கு வைக்கப்பட்ட சர்வரில் வாடிக்கையாளர்களின் கிரெடிட்கார்டில்உள்ள சிவிவி அல்லது சிவிசி எண்கள் சேமிக்கப்படவில்லை என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

  இந்த தாக்குதலுக்கு யார் காரணம் என்பது தெரியவில்லை.

  2011ஆம் ஆண்டு ஆகஸ்டு 26 தேதி முதல் 2021ஆம் ஆண்டு 20ஆம் தேதி வரை பதியப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

  தற்போது ஏர் இந்தியா தனது வாடிக்கையாளர்களை, தங்களது வலைத்தள கணக்கின் கடவுச் சொல்லை மாற்ற வேண்டும் எனக் கோரியுள்ளது.

 5. Video content

  Video caption: Boeing 737 Max சதி வழக்கு - 'அபராதம் செலுத்த நாங்க ரெடி' போயிங் அறிவிப்பின் பின்னணி என்ன?
 6. Video content

  Video caption: கொரோனா புதிய திரிபு: வெளிநாடுகளில் இருந்து வந்தால் சுய தனிமை, கண்காணிப்பு

  கொரோனா புதிய திரிபு: வெளிநாடுகளில் இருந்து வந்தால் சுய தனிமை, கண்காணிப்பு - இந்திய அரசின் புதிய உத்தரவு

 7. விவசாயிகள் போராட்டம்

  விஷம் அருந்தும் முன்பாக அவர் தனது தற்கொலைக்கான காரணத்தை ஒரு கடிதத்தில் எழுதியிருக்கிறார். அதை சரிபார்க்கும் பணியும் சம்பவம் தொடர்பாக அந்த விவசாயியின் வாக்குமூலத்தை பெறவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் கூறினார்கள்.

  மேலும் படிக்க
  next
 8. Video content

  Video caption: ஏர் இந்தியாவை ஏலம் விடும் நரேந்திர மோதி அரசு: ஊழியர்கள் வாங்க முடியுமா ?

  ஏர் இந்தியாவை ஏலம் விடும் நரேந்திர மோதி அரசு: ஊழியர்கள் வாங்க முடியுமா ?

 9. ஜஸ்டின் ஹார்ப்பர்

  பிபிசி வணிகப் பிரிவு

  Air India

  ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்க 2018ஆம் ஆண்டே இந்திய அரசு முயற்சி செய்தது. ஆனால் அப்பொழுது அந்தப் பங்குகளை வாங்க யாரும் முன்வரவில்லை.

  மேலும் படிக்க
  next
 10. பயணிகள்

  ஐஏடிஏ அமைப்பு, கொரோனா தொற்று விமான பயணிகளிடம் பரவும் சாத்தியம் தொடர்பான அறிவிப்பை வெளியிடும் நிகழ்வில் பங்கேற்ற அமெரிக்க நோய்த்தொற்று சிகிச்சை நிபுணர் டாக்டர் டேவிட் ஃபிரீட்மேனுக்கு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், அந்த அமைப்பின் மதிப்பீட்டு தரவுகளால் திருப்தியடையாத டேவிட், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல் தவிர்த்தார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 3