பிரிட்டிஷ் அரச குடும்பம்

 1. பண்டோரோ பேப்பர்ஸ்: பிரபல உலக தலைவர்களின் ரகசிய சொத்துகள் - அம்பலப்படுத்தும் புலனாய்வு

  பண்டோரா

  பொதுவெளியில் பெரிதும் மதிக்கப்படும் உலக தலைவர்கள், மன்னர்கள், அரசியல்வாதிகள், கோடீஸ்வரர்கள் என பலரும் ரகசியமாகவும் குறுக்கு வழிகளிலும் பணத்தையும் சொத்துகளையும் குவித்திருப்பது அம்பலமாகி இருக்கிறது.

  ஜோர்டான் மன்னர், பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் என பலரும் இதில் சிக்கியிருக்கிறார்கள்.

  300-க்கும் மேற்பட்ட தலைவர்கள் வரி ஏய்ப்புக்கு உதவும் வெளிநாட்டு ரகசிய நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பது 'பண்டோரா பேப்பர்ஸ்' எனப்படும் மிகப்பெரிய ஆவணக் கசிவின் மூலம் தெரியவந்திருக்கிறது.

  பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் சுமார் 600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை ஜோர்டான் மன்னர் அப்துல்லா குவித்திருப்பதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  11 வயதுச் சிறுவன் பெயரில் சுமார் 330 கோடி ரூபாய்க்கு சொத்துகளை வாங்கியிருப்பதும் ஆவணங்களில் தெரியவந்திருக்கிறது.

  பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேரும் அவரது மனைவியும் லண்டனில் அலுவலம் வாங்கும்போது முத்திரைத் தீர்வையை தவிர்ப்பதற்கு குறுக்கு வழியைத் தேர்வு செய்திருப்பதும் பண்டோரா ஆவணங்கள் மூலம் தெரியவந்திருக்கிறது.

  லண்டனில் அலுவலகத்தை வாங்குவதற்காக வெளிநாட்டு நிறுவனம் ஒன்றை அவர்கள் வாங்கியிருப்பதாக ஆவணங்கள் கூறுகின்றன. இதன் மூலம் சுமார் 3.1 கோடி ரூபாய் அளவுக்கு அவர்களுக்கு ஆதாயம் கிடைத்திருக்கிறது.

  ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் மொனாக்கோ நாட்டில் ரகசியமாகச் சொத்துக் குவித்திருப்பதும் ஆவணங்களில் அம்பலமாகி இருக்கிறது.

  இந்த வாரத்தில் தேர்தலைச் சந்திக்க இருக்கும் செக் நாட்டு பிரதமர் ஆண்ட்ரேஜ் பாபிஸ், பிரான்ஸ் நாட்டில் இரு ஆடம்பர மாளிகைகளை வாங்குவதற்காக வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதும் தெரியவந்திருக்கிறது. இந்த விவரங்கள் அவரை தனது பிரமாணப் பத்திரங்களில் அவர் அறிவிக்கவில்லை.

  பனாமா பேப்பர்ஸ், பாரடைஸ் பேப்பர்ஸ், லக்ஸ்லீக்ஸ், ஃபின்சென் ஃபைல்ஸ் போன்ற பெரும் ஆவணக் கசிவுகளின் வரிசையில் பேண்டோரா பேப்பர்ஸும் இணைந்திருக்கிறது.

  650 செய்தியாளர்களை உள்ளடக்கிய சர்வதேச புலனாய்வு செய்தியாளர்களின் கூட்டமைப்பு (ICIJ) இந்த ஆவணங்களை ஆய்வு செய்து விவரங்களை வெளியிட்டிருக்கிறது.

  மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

 2. பேண்டோரா பேப்பர்ஸ் செய்திக் குழு

  பிபிசி பனோரமா

  உலகத் தலைவர்கள்

  650 செய்தியாளர்களை உள்ளடக்கிய சர்வதேச புலனாய்வுச் செய்தியாளர்களின் கூட்டமைப்பு (ICIJ) இந்த ஆவணங்களை ஆய்வு செய்து விவரங்களை வெளியிட்டிருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 3. ரெஹான் ஃபசல்

  பிபிசி செய்தியாளர்

  ஹைதராபாத் நிஜாம்

  ஹைதராபாதில் ஒரு சடங்கு இருந்தது. வருடத்திற்கு ஒரு முறை உயர்குடிமக்கள் நிஜாமிற்கு ஒரு தங்க நாணயத்தை வழங்குவார்கள். நிஜாம் அதை தொட்டு, அவர்களிடமே திருப்பி அளித்து விடுவார். ஆனால் கடைசி நிஜாம் அந்த நாணயங்களை திருப்பித் தருவதற்குப் பதிலாக தனது சிம்மாசனத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு காகிதப் பையில் வைத்துக் கொண்டிருந்தார்.

  மேலும் படிக்க
  next
 4. ரெஹான் ஃபசல்

  பிபிசி செய்தியாளர்

  நேருவும் முகம்மது அலி ஜின்னாவும்

  "காந்தி ஜின்னாவை பிரதமராக்க தயாராக இருந்தார் என்பதை அறிந்த நேரு மிகவும் வேதனைப்பட்டார். காந்தி ஜின்னாவை நன்கு புரிந்து கொண்டவர். இது போன்ற ஒரு முன்மொழிவு ஜின்னாவின் மனதை இனிமையாகத்தொடும் என்று அவருக்குத் தெரியும். ஆனால் இந்தப் பரிந்துரை முற்றிலும் நடைமுறைக்கு ஒத்து வராதது என்று நேரு மவுன்ட்பேட்டனிடம் கூறினார்.

  மேலும் படிக்க
  next
 5. டௌக் ஃபாக்னர், ஜோசஃப் லீ

  பிபிசி செய்திகள்

  இளவரசி டயானா

  இளவரசியின் அச்சத்தைத் தூண்டி, தன் மீதான ஆர்வத்தை ஏற்படுத்த விரும்பி, தான் தீங்கு விளைவித்தவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி கவலைப்படாமல் பஷீர் கூறிய கருத்துகள் தவறானவை என்பதை பிபிசி ஏற்றுக்கொள்வதாக அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 6. இளவரசர் ஃபிலிப்

  இளவரசர் ஃபிலிப்பின் இறுதி நிகழ்வில் பங்கேற்ற அரச குடும்பத்து உறுப்பினர்கள், அவரது ஆழமான கடமை உணர்வையும், வாழ்கால சேவையையும் நினைவுகூர்ந்தனர்.

  மேலும் படிக்க
  next
 7. கோமகன் ஃபிலிப்

  மாட்சிமை பொருந்திய இளவரசரின் இறுதிச் சடங்கில் 730-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் பங்கேற்கவிருக்கிறார்கள். ஆனால் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளின் படி புனித ஜார்ஜ் தேவாலயத்தில் இறுதி அஞ்சலி செலுத்த 30 பேருக்கு மட்டுமே அனுமதி உள்ளது.

  மேலும் படிக்க
  next
 8. சாரா கேம்பெல்

  அரசக் குடும்ப செய்தியாளர்

  இளவரசர் ஃபிலிப் மற்றும் ராணி இரண்டாம் எலிசபெத்

  "இந்த உலகத்தில் இளவரசர் ஃபிலிப் மட்டுமே அரசியை சக மனிதராக நடத்தக்கூடிய ஒரே மனிதர். அவரால் மட்டுமே அது முடியும்," என தனிச் செயலர் ஒருமுறை தெரிவித்திருந்தார். இவர்களின் திருமணம் அன்பால் ஆனது. அவர்கள் ஒருவரை ஒருவர் தேர்வு செய்திருந்தனர்.

  மேலும் படிக்க
  next
 9. Prince Philip's funeral

  அரச குடும்பத்து இறுதி நிகழ்ச்சிகள் வின்சர் கோட்டையில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில், வரும் ஏப்ரல் 17-ம் தேதி சனிக்கிழமை, பிரிட்டன் நேரப்படி மாலை 3 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த இறுதி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படவிருக்கின்றன.

  மேலும் படிக்க
  next
 10. Video content

  Video caption: ராணி இரண்டாம் எலிசபெத் இளவரசர் ஃபிலிப்பை கரம் பிடித்த தருணம்

  ராணி இரண்டாம் எலிசபெத் இளவரசர் ஃபிலிப்பை கரம் பிடித்த தருணம்

பக்கம் 1 இல் 4