விவசாயம்

 1. 'உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடும் வேலையும் வேண்டும்' - ராகுல் காந்தி

  விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடும் வேலையும் வழங்கப்பட வேண்டும் என்று இந்திய நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

  "வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது சுமார் 700 விவசாயிகள் உயிரிழந்தனர். விவசாய சட்டங்களைத் திரும்பப்பெறுவதாக அறிவித்தபோது பிரதமர் நரேந்திர மோதி நாட்டு மக்களிடமும் விவசாயிகளிடமும் மன்னிப்பு கேட்டார்."

  போராட்டத்தின்போது எத்தனை விவசாயிகள் உயிரிழந்தனர் என்று 30ஆம் தேதி வேளாண் அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அது பற்றிய தரவுகள் இல்லை என்று அமைச்சர் கூறுகிறார், என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

  View more on twitter
 2. ஃபெர்னாண்டோ டுவார்டே,

  பிபிசி

  டமாண்டுவா மற்றும் பாய்டா

  மூன்று நபர்கள் மிச்சமிருக்கிற அமேசானின் நாடோடிப் பழங்குடியான பிரிப்குரா மக்கள், சட்டவிரோதமான மரம் வெட்டுதல் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் நடக்கும் விவசாயத்துக்கு எதிராகப் போராடித் தோற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 3. Video content

  Video caption: அத்தி பழ விவசாயத்தில் புதுமையை புகுத்தும் பெண்

  அத்தி பழ விவசாயத்தில் புதுமையை புகுத்தும் பெண்

 4. விவசாயிகளுக்கு உதவுவதில் மத்திய அரசிடம் நேர்மை இல்லை - ராகுல் காந்தி

  போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிக்கப்படுமா என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பட்டது. இது குறித்து வேளாண் அமைச்சகத்தில் எந்தவித தகவலும் இல்லை. எனவே, இது குறித்த கேள்வியும் எழவில்லை என்று அமைச்சகம் பதில் அளித்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

  மேலும், எங்களிடம் 403 பேர் கொண்ட பட்டியல் உள்ளது. இறந்தவர்களுக்கு பஞ்சாப் அரசு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது. மொத்தம் 152 பேருக்கு அரசு வேலை வழங்கியுள்ளது. மற்ற மாநிலத்தவர்களின் பட்டியலும் எங்களிடம் உள்ளது. மூன்றாவது பட்டியலும் உள்ளது. இவற்றை, எளிதில் பொது தளத்தில் உறுதிப்படுத்தலாம். ஆனால், அமைச்சக ஆவணத்தில் இல்லை என்று அரசு சொல்கிறது என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

  "இந்த விவகாரத்தில் தவறு செய்து விட்டதாகக் கூறி, நாட்டு மக்களிடம் பிரதமர் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்தத் தவறினால் 700 பேர் இறந்துள்ளனர். ஆனால், இப்போது பொய் சொல்கிறீர்கள். அவர்களுக்கு இழப்பீடு கொடுக்கும் நேர்மை உங்களிடத்தில் ஏன் இல்லை," என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

  View more on twitter
 5. பாம்பன் மு.பிரசாந்த்

  பிபிசி தமிழ்

  agriculture tamil nadu

  இந்திய அரசின் நிதிநிலை அறிக்கைக்கான அதிகாரப்பூர்வ இணையதளமான unionbudget.gov.in தளத்தின் விவசாயத்துறைக்கான ஒதுக்கீட்டுத் தொகை குறித்துப் பார்த்தபோது 123017.57 கோடிகள் என்று இருந்தது.

  மேலும் படிக்க
  next
 6. Video content

  Video caption: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு நேரில் ஆதரவு தந்த தமிழக விவசாயிகள்

  தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐக்கிய விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட வட மாநில விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

 7. ஜோ. மகேஸ்வரன்

  பிபிசி தமிழ்

  விவசாயிகள் போராட்டம் ஏன்?

  வேளாண் உற்பத்திக்கான அடிப்படை செலவு, உரம், இடு பொருட்கள் விலை உள்ளிட்ட மொத்த செலவினத்தை கணக்கிட்டு, மொத்த உற்பத்தி செலவை விட 50 சதவீதம் கூடுதலாக வேளாண் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை எம்.எஸ் சுவாமிநாதன் தலைமையிலான குழு வழங்கியது. ஆனால், 14 ஆண்டுகளாகியும் அவை நடைமுறைக்கு வரவில்லை.

  மேலும் படிக்க
  next
 8. ராகுல் காந்தி

  சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 9. “விவசாயிகள் ஒரு குழுவல்ல, இந்த நாட்டின் மக்கள்” - பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி

  View more on youtube

  இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோதி அரசு 2019ஆம் ஆண்டில் நிறைவேற்றிய சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அந்த மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் என்று கோரி எதிர்கட்சி உறுப்பினர்கள் குரல் எழுப்பியபோதும், எவ்வித விவாதமுமின்றி அதன் நடைமுறை நான்கு நிமிடங்களில் முடிக்கப்பட்டது.

  இது குறித்து, இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசிய காணொளி இணைக்கப்பட்டுள்ளது.

 10. மோதி ஆட்சியில் தான் பருப்பு, எண்ணெய் வித்துக்கள், பருத்தி எம் எஸ் பியின் கீழ் கொண்டு வரப்பட்டது - வேளாண் அமைச்சர்

  View more on twitter

  2014ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது, குறைந்தபட்ச ஆதார விலை இரட்டிப்பாகியுள்ளது. முன்பு நெல் மற்றும் கோதுமை மட்டுமே குறைந்தபட்ச ஆதார விலையின் கீழ் கொள்முதல் செய்யப்பட்டது.

  ஆனால் பிரதமர் நரேந்திர மோதி தலைமையின் கீழான ஆட்சியில், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி வகைகள் எல்லாம் கொள்முதல் செய்யப்படத் தொடங்கப்பட்டது என இந்திய அரசின் வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியதாக ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

பக்கம் 1 இல் 35