போதைப்பொருள்

 1. ராபின்சன் லெவின்சன் கிங்

  பிபிசி நியூஸ்

  Protesters on both sides held rallies outside the court on Monday

  மருந்து பயன்பாட்டின் மூலம் கருவில் உள்ள சிசுவுக்கு தீங்கு விளைவித்த குற்றச்சாட்டில் அதிகமான அமெரிக்க பெண்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

  மேலும் படிக்க
  next
 2. வரலாறு காணாத போதை மருந்து குவியல் லாவோசில் பறிமுதல்

  வரலாறு காணாத போதை மருந்துக் குவியல்.
  Image caption: வரலாறு காணாத போதை மருந்துக் குவியல்.

  லாவோஸ் நாட்டு காவல் துறை ஆசியாவில் இதுவரை இல்லாத அளவிலான மிகப் பெரிய போதை மருந்துக் குவியலைக் கைப்பற்றியுள்ளது.

  5.5 கோடி மெதாம்பிடமின் மாத்திரைகள் மற்றும் 1.5 டன்னுக்கும் அதிகமான கிறிஸ்டல் மெத் போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் குற்றப் பிரிவு முகமை கூறியுள்ளது.

  இது ஆசியாவில் இதுவரை கைப்பற்றப்பட்டதிலேயே மிகப் பெரிய அளவிலான போதை மருந்து குவியல் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு கூறியுள்ளது.

  தாய்லாந்து மற்றும் மியான்மர் எல்லைப் பகுதியான பொகெயோவில், பீர் எடுத்துச் சென்று கொண்டிருந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தி சோதித்த போது இத்தனை பெரிய அளவில் போதை மருந்து கடத்தப்படுவது தெரியவந்தது. தங்க முக்கோண சாலை என்று அழைக்கப்படும் இந்த பகுதி, பல ஆண்டு காலமாக போதை மருந்து தயாரிப்பின் சொர்க்கபுரியாக இருக்கிறது.

 3. ராஜ்குமார்

  புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  Follow
  next
 4. ஆர்யன் கானுக்கு இன்றும் பிணை இல்லை

  போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஷாருக் கானின் மகனுக்கு இன்றும் பிணை வழங்கப்படவில்லை. பிணை மனு மீதான விசாரணை இன்று மூன்றாவது நாளாகத் தொடர்ந்தது.

  ஆர்யன் கானிடம் போதைப்பொருள் எதுவும் கைப்பற்றப்படாத நிலையிலும் அவருக்கு இன்னும் பிணை வழங்கப்படவில்லை என்று அவரது வழக்கறிஞர் முகுல் ரோஹத்தி தெரிவித்துள்ளார்.

  குற்றம்சாட்டப்பட்டவர்களில் முதல் மூவர் தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு வாதத்தை நிறைவு செய்துள்ள நிலையில், போதைப்பொருள் தடுப்பு அமைப்பான நார்கோடிக்ஸ் கன்ட்ரோல் பீரோவின் வழக்கறிஞர்கள் நாளை பிணை மனுவை எதிர்த்து நாளை வாதிட உள்ளனர்.

  View more on twitter
 5. 'ஆர்யன் கான் வழக்கின் சாட்சி பிறழ் சாட்சி ஆகிவிட்டார்' - என்.சி.பி

  இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கைது செய்யப்பட்ட வழக்கில் சாட்சியாக இருந்த பிரபாகர் சைல் என்பவர் பிறழ் சாட்சியாக மாறி விட்டார் என்று போதைபொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு (நார்காட்டிக்ஸ் கன்ட்ரோல் பீரோ) தெரிவித்துள்ளது.

  கைதான ஆரியன் கானுடன் செல்ஃபி எடுத்து வைரலான தனியார் டிடெக்டிவ் கே.பி. கோசவி என்பவரின் உதவியாளர் பிரபாகர் சைல், கோசவி சாம் டிசோசா என்பவரும் 18 கோடி ரூபாய் லஞ்சம் வழங்குவது குறித்து பேசிக் கொண்டிருந்ததைத் தான் கேட்டதாகவும், அதில் 8 கோடி ரூபாய் நார்காட்டிக்ஸ் கன்ட்ரோல் பீரோவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடேவுக்கு வழங்கப்படுவதாகவும் கூறியதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.

  கோசவி மற்றும் டிசோசா இடையே அந்த செல்பேசி உரையாடல் நடந்தபோது தாமும் அப்பொழுது காரில் இருந்ததாக அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருந்தார்.

  பிரபாகர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்திற்கு எதிராக நார்காட்டிக்ஸ் கன்ட்ரோல் பீரோ மற்றும் சமீர் வான்கடே தரப்புகளால் தனித்தனியாக எதிர் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

  தம் மீதான விசாரணைக்கு தயாராக இருப்பதாகவும் வான்கடே நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

  View more on twitter
  சமீர் வான்கடே
  Image caption: நார்காட்டிக்ஸ் கன்ட்ரோல் பீரோவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே
 6. Sudan's military dissolves civilian government and arrests leaders

  தலைநகர் கார்தூமில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. அங்கு துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

  Follow
  next
 7. அமெரிக்கா அனுப்பப்பட உள்ளார் கொலம்பியாவின் போதை மருந்து கடத்தல் மன்னன்

  டைரோ ஆன்டொனியோ உசுகா கடந்த சனிக்கிழமை கொலம்பியாவின் விமானப்படை, ராணுவம், காவல் துறையினரின் கூட்டு ஆப்ரேஷனில் கைது செய்யப்பட்டார்.

  அவர் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்படுவார் என கொலம்பியா அறிவித்துள்ளது. அமெரிக்கா டைரோ உசுகாவுக்கு ஐந்து மில்லியன் டாலர் பரிசுத் தொகை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  டைரோ 2003 முதல் 2014 ஆண்டுகளுக்கு மத்தியில் குறைந்தபட்சமாக 73 மெட்ரிக் டன் கொகைன் போதைப் பொருளை இறக்குமதி செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

  Colombian drug lord Otoniel to be extradited to US
 8. ராணுவம், விமானப்படை, போலீஸ் இணைந்து பிடித்த போதை கும்பல் தலைவன்

  கொலம்பிய போதை கும்பல் தலைவன்.
  Image caption: கொலம்பிய போதை கும்பல் தலைவன்.

  தரைப்படை, விமானப் படை, காவல் துறை இணைந்து நடத்திய கூட்டு ஆபரேஷனில் கொலம்பியாவில் அதிதீவிரமாகத் தேடப்பட்டு வந்த போதைப் பொருள் கடத்தல்காரர் மற்றும் அந்நாட்டின் மிகப் பெரிய சட்டவிரோத செயல்களைச் செய்யும் குழுவின் தலைவன் டைரோ ஆன்டோனியோ உசுகா சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

  டைரோ, வட மேற்கு கொலம்பியாவில் பனாமா நாட்டு எல்லையில் உள்ள ஆன்டியோகுயா மாகாணத்தில் அவரது பதுங்கிடத்தில் இருந்த போது பிடிபட்டார்.

  இந்த ஆபரேஷன் தொடர்பான கூடுதல் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன, ஆனால் இந்த மாபெரும் ஆபரேஷனில் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக அந்நாட்டு அதிபர் கூறியுள்ளார்.

  50 வயதான டைரோவைப் பிடிக்க இதுவரை ஆயிரக் கணக்கான அதிகாரிகளைக் கொண்டு பல ஆபரேஷன்கள் நடத்தப்பட்டன. ஆனால் இப்போது தான் சிக்கியுள்ளார்.

  டைரோவை கொலம்பியாவின் ஆயுதமேந்திய படையினர் சூழ, கையில் விளங்கிட்டு பாதுகாப்பாக அழைத்து வருவது போன்ற படத்தை வெளியிட்டுள்ளனர். இவரைப் பற்றி தகவல் கொடுப்போருக்கு எட்டு லட்சம் அமெரிக்க டாலர் பரிசுத் தொகை கொடுப்பதாக அரசு அறிவித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

  அமெரிக்காவோ இவர் தலைக்கு ஐந்து மில்லியன் டாலரை பரிசுத் தொகையாக அறிவித்திருந்தது. டைரோ கைது செய்யப்பட்டது குறித்து கொலம்பியாவின் அதிபர் இவான் டுகேவே தொலைக்காட்சியில் ஒரு காணொளி செய்தியில் தன் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

 9. ஆயுதப் படையினருடன் டைரோ உசுகா

  கொலம்பியாவில் அதி தீவிரமாகத் தேடப்பட்டு வந்த போதைப் பொருள் கடத்தல்காரர் மற்றும் அந்நாட்டின் மிகப் பெரிய சட்டவிரோத செயல்களைச் செய்யும் குழுவின் தலைவர் டைரோ ஆன்டோனியோ உசுகா சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

  Follow
  next
 10. ஆர்யன் கான் ஜாமீன் மனு மீது அக்டோபர் 26இல் மும்பை உயர் நீதிமன்றம் விசாரணை

  ஆர்யன் கான்
  Image caption: மும்பை தனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்ட ஆர்யன் கான் (கோப்புப்படம்)

  போதைப்பொருள் பயன்பாடு சம்பவத்தில் தொடர்புடையதாக தேசிய போதைப்பொருள் தடுப்புத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் மனு அக்டோபர் 26ஆம் தேதி விசாரிப்படவுள்ளது.

  முன்னதாக, ஆர்யன் கான் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை மும்பை போதைப்பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் தனி நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

  இந்த வழக்கில் ஆர்யன் கானுடன் சேர்த்து அர்பாஸ் மெர்ச்சன்ட், முன்முன் தமேச்சா ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டு அவர்களும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

  இதைத்தொடர்ந்து மும்பை உயர் நீதிமன்றத்தில் ஆர்யன் கான் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

  இதையடுத்து அவரது மனு அக்டோபர் 26ஆம் தேதி விசாரிக்கப்படும் நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் கூறியுள்ளதாக ஆர்யன் கானின் வழக்கறிஞர் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் கூறியிருக்கிறார்.

  கடந்த அக்டோபர் 2-3ஆம் தேதி மும்பை கடல் பகுதியில் சொகுசு கப்பல் ஒன்றில் நடந்த கேளிக்கை நிகழ்ச்சியில் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக போதை பொருள் தடுப்புத் துறைக்கு தகவல் வந்தது.

  இதையடுத்து அதன் தனிப்படை அந்த கப்பலில் சோதனை செய்தபோது, ஆர்யன் கான் மற்றும் இருவரை போதைப்பொருள் வாங்கியது மற்றும் பயன்படுத்தியதாகக் கூறி அதிகாரிகள் கைது செய்தனர்.

  இந்த வழக்கில் நீதிமன்ற அனுமதியுடன் ஆர்யன் கான் என்சிபி காவலில் வைத்து விசாரிக்கப்பட்ட பிறகு அவரை 14 நீதிமன்ற காவலில் வைத்திருக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் தாக்கல் செய்த மனுவையும் விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பக்கம் 1 இல் 5