பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு (ஒபெக்)

 1. சரோஜ் சிங்

  பிபிசி செய்தியாளர்

  பெட்ரோல்

  பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர கேரள உயர்நீதிமன்றத்தில் ஜூன் மாதம் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜிஎஸ்டி கவுன்சில் இதுகுறித்து முடிவு எடுக்கவேண்டும் என்று இதை விசாரித்த நீதிமன்றம் கூறியுள்ளது.

  மேலும் படிக்க
  next
 2. பெட்ரோலிய பொருட்கள் மூலம் 7 ஆண்டுகளில் ஈட்டிய ரூ. 23 லட்சம் கோடி எங்கே? ராகுல் காந்தி கேள்வி

  View more on twitter

  பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விற்பனை மூலம் ரூ. 23 லட்சம் கோடி அளவுக்கு கடந்த ஏழு ஆண்டுகளில் வருவாய் ஈட்டியுள்ள மோதி அரசு, அவற்றை குறைக்காமல் விலையேற்றத்திலேயே கவனம் செலுத்தி வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

  இது தொடர்பாக கடந்த ஏழு ஆண்டுகளில் விற்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களின் விற்பனை வருவாய் தொடர்பாக தாம் மதிப்பிட்ட தரவுகளை அவர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தபோது வெளியிட்டார்.

  இந்த விலையேற்றத்தின் மூலம் ஈட்டிய வருவாய், மற்றும் சரக்கு, சேவை வரிகள் மூலம் கிடைத்த தொகை அனைத்துமே மோதி அரசின் முதலாளித்துவ நண்பர்களுக்கே பலன்களை கொடுக்கின்றன என்று ராகுல் கூறினார்.

  இந்த நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி உயர்ந்து வருவதை போலவே சமையல் எரிவாயு, டீசல், பெட்ரோலிய பொருட்களின் விலையும் உயர்வதாக ராகுல் குறிப்பிட்டார்.

  மத்தியில் ஆட்சிப்பொறுப்பில் இருந்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெளியேறியபோது, சமையல் எரிவாயுவின் விலை சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 410 ஆக இருந்தது. இன்று அது 116 சதவீதம் உயர்ந்து ரூ. 885 ஆகியிருக்கிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 42 சதவீதம் அதிகரித்துள்ளது.

  டீசல் விலை லிட்டருக்கு 55 சதவீதம் உயர்ந்துள்ளது. பெட்ரோலிய பொருட்களின் விலை சர்வதேச சந்தை விலை நிலவரத்துக்கு ஏற்பவே நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற வாதத்தை இன்று மக்கள் மீண்டும் வைக்க இந்த விலையேற்றம் தூண்டியிருக்கிறது.

  2014ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்ந்தபோது கூட இந்தியாவில் அவற்றின் விலை குறைவாகவே இருந்தது என்று ராகுல் கூறினார்.

  தற்போதைய நிலையை பார்க்கும்போது நாட்டின் பொருளாதாரம் 1990ல் இருந்த நிலை போல ஆகி விட்டது என்றும் அவர் சாடினார்.

  அந்த காலகட்டத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு மாற்றத்துக்கான பார்வை இருந்தது. ஆனால், இப்போது அப்படி நடக்காது. 1991 முதல் 2012ஆம் ஆண்டுவரை நாடு கொண்டிருந்த பொருளாதார கட்டமைப்பும் உத்தியும் இனி வேலை செய்யப்போவதில்லை. எல்லா நேரமும் மாற்றத்தை கொண்டு வருவேன் என்று முழங்கும் பிரதமர் நரேந்திர மோதி, என்ன மாற்றத்தை செய்தார் எனத் தெரியவில்லை.

  இந்த அரசின் நடவடிக்கையால் பாதிக்கப்படப்போவது இளம் தலைமுறையின் எதிர்காலம்தான். அதனால்தான் இந்த கேள்விகளை அவர்களிடமே வைக்கிறேன். இந்த அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி வரிகள், வேளாண் சட்டங்கள், விலையேற்றத்தால் இளம் தலைமுறைக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை.

  பிறகு எதற்காக இந்த நடவடிக்கைகள்? இது பற்றி எல்லாம் இளம் தலைமுறை சிந்திக்க வேண்டும் என்றார் ராகுல் காந்தி.

  பாஜக பதில்

  இந்த நிலையில், நாட்டின் ஜிடிபி வளர்ச்சிக்கு தவறான விளக்கத்தைக் கொடுத்து மக்களை குழப்ப ராகுல் காந்தி முயன்றுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் செய்தித்தொடர்பாளர் சம்பித் பாத்ரா தெரிவித்துள்ளார்.

  கொரோனா பெருந்தொற்று கடுமையாக நிலவிய காலகட்டத்தில் நமது ஜிடிபி வளர்ச்சியின் முதல் காலாண்டு முடிவுகள் அற்புதமானவை. இது மோதியன் தலைமையால் தான் சாத்தியமாகியிருக்கிறது என்றார் சம்பித் பாத்ரா.

  View more on twitter
 3. கீர்த்தி துபே

  பிபிசி செய்தியாளர்

  பெட்ரோல், டீசல் விலை

  இந்தியாவில் பெட்ரோல் மீதான வரியை கட்டுப்படுத்தும் அதிகாரம் யாருக்கு உள்ளது? இது தொடர்பாக இணையத்தில் வைரலாகும் பல தகவல்களில் உண்மையை எப்படி கண்டறிவது? இது குறித்த விரிவான ஆய்வை பிபிசி உண்மை சரிபார்க்கும் குழு மேற்கொண்டு இந்த செய்தியை வழங்கியிருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 4. ஜூபைர் அகமத்

  பிபிசி செய்தியாளர், டெல்லி

  கச்சா எண்ணெய்

  இந்திய வரலாற்றில் முதல்முறையாக, பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டியது மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 100 ரூபாய்க்கு அருகில் உள்ளது. அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் நுகர்வோராக இந்தியா திகழ்கிறது.

  மேலும் படிக்க
  next
 5. பெட்ரோல், டீசல் விலை

  கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவையின் விலையும் உலகெங்கும் அதிகரித்தன. உற்பத்தி அதிகரித்து கச்சா எண்ணெய் விலை குறைந்தால், இவற்றின் விலையும் குறைய வாய்ப்புண்டு.

  மேலும் படிக்க
  next
 6. Video content

  Video caption: சௌதி Vs அமீரகம்: கச்சா எண்ணெய் விலை ஏற்றத்துக்கு இரு இளவரசர்களின் சண்டை காரணமா?

  தற்போது கச்சா எண்ணெய் விலை கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புதிய உச்சங்களைத் தொட்டு இருக்கிறது

 7. உச்சம் தொட்ட பெட்ரோல், டீசல் விலை - ஒரு மாதத்தில் 17 முறை உயர்வு

  பெட்ரோல் டீசல்

  பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத உச்சமாக கடந்த ஒரு மாதத்தில் பதினேழு முறை உயர்த்தப்பட்டுள்ளது.

  புதிய விலை பட்டியலின்படி, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையில் 23 காசுகளும் டீசல் விலையில் 23 காசுகளும் உயர்த்தியுள்ளன.

  தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 94.49 ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 85.38 ஆகவும் விற்கப்படுகிறது.

  பெட்ரோல், டீசல் விலை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட அவற்றின் விற்பனைக்கான உள்ளூர் வரிகள், மதிப்பு கூடுதல் வரி, போக்குவரத்து செலவினம் போன்றவை காரணமாகும்.

  இந்தியாவிலேயே ராஜஸ்தான் மாநிலத்தில்தான் அதிக விலைக்கு பெட்ரோல், டீசல் விற்கப்படுகின்றன. அதைத்தொடர்ந்து மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிக விலைக்கு பெட்ரோல், டீசல் விற்பனையாகின்றன.

  மும்பை நகரில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 100.72 ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு 92.69 ஆகவும் விற்கப்படுகிறது.

  கடந்த மே 4ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை 17 முறை உயர்த்தப்பட்டுள்ளன.

  இந்த பதினேழு முறை விலையேற்றத்தின் முடிவில் பெட்ரோல் விலை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மொத்தம் ரூ. 4.09 ஆகவும் டீசல் விலை ரூ. 4.65 ஆகவும் உயர்ந்துள்ளது.

  மேற்கு வங்க மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை கடந்த 18 நாட்களாக உயர்த்தப்படவில்லை. அங்கு சமீபத்தில்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது.

 8. சூயஸ் கால்வாய்

  உண்மையில் மாலுமிகள் உள்ளிட்ட 25 இந்தியர்களுடன் `எவர் கிவன்' கப்பல் இன்னும் சூயஸ் கால்வாயில்தான் இருக்கிறது. எகிப்து அதிகாரிகள் அதைச் சிறைப்பிடித்து வைத்திருக்கிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 9. கப்பல்

  200,000 டன் எடையுள்ள இந்தக் கப்பல், 2018 ஆம் ஆண்டில் கட்டப்பட்டு, தைவானிய போக்குவரத்து நிறுவனமான எவர்க்ரீன் மரைனால் இயக்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி (05:40 GMT) சுமார் 07:40 மணிக்கு நீர்வழியின் குறுக்கே மாட்டிக்கொண்டது.

  மேலும் படிக்க
  next
 10. மு. பார்த்தசாரதி

  பிபிசி தமிழுக்காக

  BBC

  "130 கோடிக்கும் மேல் வாழக்கூடிய நம் நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகம் வராமல் பாதுகாத்தவர் பிரதமர் நரேந்திர மோதி. 175 திட்டங்களை 5 ஆண்டுகளுக்குள் கொண்டு வந்தவர்."

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2