மனித உரிமை

 1. போரில் காணாமல் ஆக்கப்பட்டோர்

  இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 2. யூ.எல். மப்றூக்

  பிபிசி தமிழுக்காக

  இலங்கை

  "தற்போது இலங்கை விவகாரத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவை கையில் எடுத்துள்ளது. அடுத்த மார்ச் மாதம் ஆணையர் அறிக்கையொன்றை சமர்ப்பிப்பார். அதேவேளை அவர்களின் பொறிமுறையும் செயற்பட்டுக்கொண்டே இருக்கும்," என்று அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 3. Video content

  Video caption: 6 வயது சிறுமி வல்லுறவு வழக்கில் தேடப்பட்டவர் ரயில் பாதையில் பிணமாக கண்டெடுப்பு

  6 வயது சிறுமி வல்லுறவு வழக்கில் தேடப்பட்டவர் ரயில் பாதையில் பிணமாக கண்டெடுப்பு.

 4. சிறை கம்பி

  வெலிகடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் வலுக்கட்டாயமாக பிரவேசித்து, கைதிகளை அச்சுறுத்தியதாக லொஹான் ரத்வத்த மீது குற்றஞ்சுமத்தப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 5. காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் (கோப்புப்படம்)

  இலங்கை அரசின் செயற்பாடுகள் கவலையளிக்கும் விதத்தில் உள்ளதாக மனித உரிமை பேரவையின் ஆணையாளர் கருத்துரைத்த போதிலும், அதனை இலங்கை வெளிவிவகார அமைச்சர் நிராகரித்திருந்தார்.

  மேலும் படிக்க
  next
 6. லொஹான் ரத்வத்த

  அநுராதபுரம் சிறைச்சாலையில் தனது சகாக்களுடன் சென்ற சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதியை முழந்தாளிடச் செய்து, அவரது தலையில் துப்பாக்கி வைத்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

  மேலும் படிக்க
  next
 7. Video content

  Video caption: ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் பொதுமக்களைக் கொல்லும் காட்சிகள்

  ஆப்கானிஸ்தானில் மக்களைக் கொல்கிறார்களா தாலிபன்கள்? உண்மை என்ன? - பிபிசியின் கள ஆய்வு

 8. வினீத் கரே

  பிபிசி நிருபர், டெல்லி

  தாலிபன்

  காபூலில் பெண்களின் ஆர்ப்பாட்டம் தொடர்பான செய்தி சேகரிக்கச் சென்ற தங்களை பிடித்து தாலிபன்கள் காவலில் வைத்து தாக்கியதில் இருவரும் மயக்கமடைந்ததாக தெரிவித்தனர். ஆப்கானிஸ்தானில் பத்திரிகையாளர்களின் எதிர்காலம் குறித்தும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 9. ஆப்கானிஸ்தான் மனிதாபிமான உதவிக்கு ரூ. 4,442 கோடி நிதி கேட்கும் ஐ.நா

  காங்கிரஸ்

  ஆப்கானிஸ்தானில் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியில் சிக்கியவர்களுக்கு உதவ இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 4,442 கோடிக்கும் அதிகமான நிதி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

  இது தொடர்பாக இன்றைய நாளின் பிற்பகுதியில் ஐ.நா அவை ஜெனீவாவில் கூடி ஆலோசனை நடத்தவுள்ளது. தாலிபன் ஆளுகையில் உள்ள ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான உதவி வழங்க சர்வதேச சமூகத்தை ஐக்கிய நாடுகள் சபை முறைப்படி கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  ஆப்கானியர்களுக்கு உணவு, மருத்துவம், சுகாதார வசதிகள், சுத்தமான குடிநீர், சுகாதார வசதிகள் போன்றவை அத்தியாவசியமாக தேவைப்படுகிறது என்று ஐ.நா தெரிவித்துள்ளது. இந்த நேரத்தில் ரூ. 4,442 கோடி அளவிலான நிதியுதவி அந்நாட்டுக்கு மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும் என்றும் ஐ.நா கூறியுள்ளது.

  "நாடு மிகவும் மோசமான சூழ்நிலையை எதிர்கொள்கிறது. நீடித்த மோதல், கடுமையான வறட்சி மற்றும் கோவிட் -19 பாதிப்பை அந்நாடு எதிர்கொண்டு வருகிறது. அங்கு வாழும் மக்களில் கிட்டத்தட்ட பாதி பேருக்கு ஏற்கெனவே உதவி தேவைப்பட்டிருந்தது," என்று செய்திக்குறிப்பில் ஐநா தெரிவித்துள்ளது.

  "ஆப்கானிஸ்தானில் சமீபத்திய முன்னேற்றங்கள் அங்கு ஏற்கெனவே நிலவி வந்த பாதிப்பை அதிகரித்துள்ளது," என்றும் ஐ.நா கூறியுள்ளது.

  ஆகஸ்ட் மாதத்தில் இஸ்லாமியவாத போராளிகள் ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டை மீட்பதற்கு முன்பே, உள்நாட்டு மோதல் காரணமாக இந்த ஆண்டு 5,50,000க்கும் அதிகமான மக்கள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் என்றும் ஐ.நா தெரிவித்துள்ளது. அதாவது, அந்நாட்டில் தற்போது 35 லட்சம் பேர் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர்.

 10. Video content

  Video caption: பெண்கள் போராட்டத்தில் செய்தி சேகரித்த பத்திரிகையாளர்களுக்கு சவுக்கடி - தாலிபன் கொடூரம்

  பெண்கள் போராட்டத்தில் செய்தி சேகரித்த பத்திரிகையாளர்களுக்கு சவுக்கடி - தாலிபன் கொடூரம்

பக்கம் 1 இல் 14