ஜெயலலிதா

 1. Video content

  Video caption: தலைவி: கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி நடித்த திரைப்படம் எப்படி இருக்கிறது?

  தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட தலைவி திரைப்படம் எப்படி இருக்கிறது?

 2. முரளிதரன் காசி விஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  thalaivi review

  குடும்பம் மிக சிரமப்படும் ஒரு காலகட்டத்தில், சினிமாவில் நடிக்கவரும் ஜெயலலிதா, மெல்லமெல்ல எம்.ஜி.ஆருடன் நெருக்கமாகிறார். திரைத்துறையின் உச்சத்திற்கு வருகிறார்.

  மேலும் படிக்க
  next
 3. ஜெயலலிதா

  இது தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், "கோடநாடு வழக்கு முக்கியத்துவம் வாய்ந்தது போல தோன்றுகிறது. அந்த வழக்கில் மேல் விசாரணை தேவை என புலனாய்வுத்துறை கோரும்பட்சத்தில் அதில் மனுதாரருக்கு என்ன பிரச்னை?" என்று கேள்வி எழுப்பியது.

  மேலும் படிக்க
  next
 4. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  அதிமுக திமுக ஜெயலலிதா ஸ்டாலின்

  ஓமந்தூரார் கட்டடம் மருத்துவ நோக்கத்துக்காக கட்டப்படவில்லை. தற்போது புனித ஜார்ஜ் கோட்டையில் ராணுவத்துக்குச் சொந்தமான கட்டடத்தில் வாடகை அடிப்படையில் தலைமைச் செயலகம் இயங்கி வருகிறது.

  மேலும் படிக்க
  next
 5. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  எடப்பாடி பழனிசாமி

  ''எஸ்டேட்டில் காணாமல் போன பொருள்கள் என்ன என்பது சசிகலாவுக்கும் இளவரசிக்கும்தான் தெரியும். இதில் வெளிப்படையான விசாரணையை புலனாய்வு அதிகாரிகள் மேற்கொள்ளாமல் விட்டுவிட்டனர்.''

  மேலும் படிக்க
  next
 6. தமிழிசை

  டோக்யோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய வீரர் மணீஷ் நர்வால் துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் வென்றார்.

  மேலும் படிக்க
  next
 7. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு அக்டோபர் 1ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் தொடர்பான கொலை, கொள்ளை வழக்கு அக்டோபர் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கில் கூடுதல் விசாரணை செய்ய கால அவகாசம் தேவை என அரசுத் தரப்பு கோரிக்கை வைத்ததையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. எஸ்டேட் மேலாளர், தடயவியல் நிபுணர் ராஜ்குமார், மின்வாரிய அதிகாரி ஆகியோர் இன்றைய விசாரணைக்கு ஆஜராகவில்லை.

  ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

  இந்த நிலையில், திமுக அரசு பதவியேற்ற பிறகு இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களிடம் கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது. அப்படி கூடுதல் விசாரணை நடத்தக்கூடாது என ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

  இதனால், கடந்த முறை இந்த வழக்குநீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை சுட்டிக்காட்டி, விசாரணை செப்டம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

  கூடுதல் விசாரணை நடத்தலாமா என்பது குறித்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அதற்கு அனுமதி அளித்தது. இந்த நிலையில்தான் இந்த வழக்கு இன்று மீண்டும் நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

  குற்றம்சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கொடநாடு எஸ்டேட் மேலாளர், தடயவியல் நிபுணர் ராஜ்குமார், மின்வாரிய அதிகாரி ஆகியோர் இன்று ஆஜராக வேண்டுமெனகூறப்பட்டது. ஆனால், அவர்கள் ஆஜராகவில்லை.

  இன்று இந்த வழக்கின் விசாரணை நீதிபதி சஞ்சய் பாசு முன்பாகத் துவங்கியது. அப்போது இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எட்டு எதிரிகள் ஆஜராகவில்லை என்பது தொடர்பான மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை நீதிபதி ஏற்றுக்கொண்டார். பிறகு, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் இந்தவழக்கில் கூடுதலாக விசாரணை நடத்த வேண்டுமென்பதால் வழக்கை நீண்ட காலம் ஒத்திவைக்க வேண்டுமென்று கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கை அக்டோபர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

  இதற்கிடையில், இந்த வழக்கில் வி.கே. சசிகலா, எடப்பாடி கே. பழனிச்சாமி, சஜீவன் ஆகியரை விசாரிக்க வேண்டுமெனக் கோரி தாக்கல்செய்யப்பட்ட வழக்கு விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருப்பதாக சயான் தரப்பு வழக்கறிஞர் விஜயன் அங்கிருந்த ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

 8. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான சட்டம் அதிமுக ஆட்சியின் இறுதியில் இயற்றப்பட்டது.

  திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து, விழுப்புரம் மாவட்டத்தை தலைமையகமாகக் கொண்டு டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாக்கப்படுவதற்கான சட்டம் கடந்த பிப்ரவரி ஐந்தாம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 9. Video content

  Video caption: கே.டி. ராகவன் விவகாரம் பற்றி சீமான் பேசிய காணொளி

  கே.டி. ராகவன் விவகாரம் பற்றி சீமான் பேசிய காணொளி

 10. கொடநாடு கொலை வழக்கு விசாரணை செப்டம்பர் 2க்கு ஒத்திவைப்பு

  கொடநாடு எஸ்டேட்

  நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவந்த கொடநாடு கொலை வழக்கு விசாரணை செப்டம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

  கொடநாடு வழக்கில் புதிதாக ஆதாரங்கள் கிடைத்திருப்பதால் அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டுமென கடந்த 13ஆம் தேதி நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்தது. அதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

  இதையடுத்து சயான் உள்ளிட்டவர்களிடம் காவல்துறை மீண்டும் விசாரணை நடத்திவந்தது.அ.தி.மு.கவைச் சேர்ந்த ரவி என்பவர், தான் இந்த வழக்குத் தொடர்பாக தெரிவிக்க வேண்டிய அனைத்தையும்தான் ஏற்கனவே தெரிவித்துவிட்டதாகவும் தன்னை மீண்டும் விசாரணைக்கு அழைக்கக்கூடாது என்றும் சொல்லிவந்தார். அவர் இது தொடர்பாக உயர் நீதிமன்றத்திலும் ஒரு வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

  இந்நிலையில்தான் அந்த வழக்கின் விசாரணை இன்று நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் துவங்கியது. முக்கியக் குற்றவாளியாகச் சொல்லப்பட்ட சயான் காலை ஒன்பதே முக்கால் மணிக்கே நீதிமன்றத்திற்கு வந்தார். சுமார் பத்து மணியளவில் விசாரணை துவங்கியது.

  மற்றொரு குற்றவாளியான வாளையார் மனோஜ் ஆஜராகவில்லை. சுமார் 20 நிமிடங்கள் வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றன. அந்தத் தருணத்தில் ரவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அனந்தகிருஷ்ணன், பால நந்தகுமார் உள்ளிட்டோர் ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர். அதில், ரவியை விசாரணைக்கு அழைக்கக்கூடாது என்று கூறியிருந்தனர்.

  இதையடுத்து ரவி தரப்பு வழக்கறிஞர்களுக்கும் அரசுத் தரப்பு, சயான் தரப்பு வழக்கறிஞர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்குப் பிறகு, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதி தெரிவித்தார்.

  மேலும், இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணை செப்டம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம், தடயவியல் நிபுணர் ராஜ்மோகன், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜ், கோத்தகிரி மின்சாரத் துறை துணைப் பொறியாளர் ஆகியோர் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பக்கம் 1 இல் 11