இயற்பியல்

 1. கார்பன் அதிகரிப்பால் பூமி வெப்பம் உயருவது ஏன்? - விளக்கிய விஞ்ஞானிகளுக்கு நோபல்

  நோபல்

  பருவநிலை மாற்றம் தொடர்பான சிக்கலான அம்சங்களை இயற்பியல் மாதிரிகளாக உருவாக்கிய விஞ்ஞானி, கார்பன் டை ஆக்ஸைடு மூலம் பூமியின் வெப்பநிலை எப்படி உயருகிறது என்பது விளக்கிய விஞ்ஞானி உள்ளிட்ட மூன்று பேருக்கு இந்த ஆண்டின் இயற்பிலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

  அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த யுகரோ மனபே, ஜெர்மனியின் க்ளாஸ் ஹேஸல்மன், இத்தாலியின் ஜார்ஜியோ பாரிசி ஆகிய மூன்று பேரும் விருதைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

  பூமியின் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸைடு செறிவு அதிகரிக்கும்போது பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை எப்படி அதிகரிக்கிறது என்பது குறித்து மனேபே ஆய்வு செய்திருக்கிறார். 1960-களில் பூமியின் பருவநிலை குறித்த மாதிரிகளை இவர் உருவாக்கினார். இன்றைய பருவநிலை மாதிரிகளுக்கு இவரது ஆய்வுகளே அடிப்படையாக அமைந்தது.

  அதற்கு10 ஆண்டுகளுக்குப் பிறகு பருவநிலைக்கும் காலநிலைக்கும் இடையேயான தொடர்பை விளக்கினார் க்ளாஸ் ஹேஸல்மன். இயற்கையாகவும், மனித நடவடிக்கைகளாலும் பருவநிலையில் என்னென்ன தாக்கங்கள் ஏற்படுகின்றன என்பதையும் இவர் தனது மாதிரிகள் மூலம் தெளிவுபடுத்தினார்.

  1980 இல், ஜார்ஜியோ பாரிசி சீரற்ற சிக்கலான பொருட்களில் மறைந்திருக்கும் வடிவங்களைக் கண்டுபிடித்தார். அவை இயற்பியலில் மட்டுமல்ல, கணிதம், உயிரியல், நரம்பியலில் உள்ள சீரற்ற சிக்கலான பொருட்கள் மற்றும் நிகழ்வுகளைப் புரிந்துகொள்ளப் பயன்படுகின்றன

 2. விக்னேஷ்.அ

  பிபிசி தமிழ்

  chidambaram nataraja temple rain

  சமூக ஊடகங்களில் மட்டுமல்ல, பல லட்சம் பேர் படிக்கும் மைய நீரோட்ட ஊடங்கங்களில் கூட இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 3. விக்னேஷ். அ

  பிபிசி தமிழ்

  NASA GSFC/JEREMY SCHNITTMAN

  1960களில் பீட்டர் ஹிக்ஸ் அனுமானமாக முன்வைத்த இந்தத் துகள்களின் இருப்பு, 2012இல் பிரான்ஸ் - சுவிட்சர்லாந்து எல்லையில் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையம், பூமிக்கு அடியில் அமைத்துள்ள 'லார்ஜ் ஹேட்ரான் கொலைடர்' (Large Hadron Collider) எனும் உலகின் மிகப்பெரிய மற்றும் உலகிலேயே மிகவும் அதிக திறன் மிக்க துகள் முடுக்கி (Particle Accelerator) மூலம் செய்யப்பட்ட சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 4. அ.தா.பாலசுப்ரமணியன்

  பிபிசி தமிழ்

  உடுக்கூட்டம். கேலக்சி

  நாம் கண்ணால் காணும் பொருள்கள் மூலக்கூறுகளால் ஆனவை, மூலக்கூறுகள் அணுக்களால் ஆனவை, அணு - துகள்களால் ஆனது. பெரிய துகள்கள் அதனினும் நுண்ணிய குவார்க்குகளால் ஆனவை. இவ்வளவு தூரம் நுணுகி ஆராயும் அறிவியல் இப்போது புதிதாக கண்டுபிடித்தது என்ன? விரிவான விளக்கம்...

  மேலும் படிக்க
  next
 5. இயற்பியலுக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்ட ஜேம்ஸ் பீபிள்ஸ், டிடியர் குவிலாஸ், மைக்கல் மேயர்.

  பேரண்டத்தைப் பற்றி முற்றிலும் வியக்கத்தக்க கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியதற்காக மூன்று விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next