காவல்

 1. தூத்துக்குடியில் போலீஸ் என்கவுன்டர்: தொடர் குற்றச்செயலில் ஈடுபட்ட சந்தேக நபர் சுட்டுக்கொலை

  பிரபுராவ் ஆனந்தன்

  தூத்துக்குடி
  Image caption: சம்பவ பகுதியை பார்வையிட்டு விசாரணை நடத்தி வரும் காவல்துறை அதிகாரிகள்

  தூத்துக்குடியில் முத்தையாபுரம் பகுதியில் போலீசாருடன் நடந்த மோதலில் தொடர் குற்றச்செயலில் ஈடுபட்டு வந்ததாக குற்றம்சாட்டப்பட்ட துரைமுருகன் என்பவர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

  இதைத்தொடர்ந்து தூத்துக்குடி,முத்தையாபுரம் மற்றும் திருமலையாபுரம் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

  தூத்துக்குடி அருகே உள்ள கூட்டாம்புளி திருமலையாபுரத்தைச் சேர்ந்தவர் துரைமுருகன் (39). இவர் மீது 6 கொலை வழக்குகள் உட்பட 18க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

  கடந்த வாரம் திருநெல்வேலி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் நடந்த கொலை தொடர்பாக சார்பு ஆய்வாளர் ராஜ பிரபு தலைமையிலான தனிப்படை போலீசார் துரைமுருகனை தேடி வந்தனர். இந்நிலையில், முத்தையாபுரம் பொட்டல்காடு பகுதியில் பதுங்கியிருந்த அவரை இன்று பிற்பகலில் போலீசார் சுற்றி வளைத்ததாக கூறப்படுகிறது.

  அப்போது போலீசார் மீது துரைமுருகன் தாக்குதல் நடத்தி விட்டு தப்ப முயன்றதாகவும் அதைத்தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சம்பவ இடத்திலேயே துரைமுருகன் உயிரிழந்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

  சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், டவுன் காவல்துறை துணை கணகாணிப்பாளர் கணேஷ், முத்தையாபுரம் ஆய்வாளர் ஜெயசீலன் மற்றும் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

  துரைமுருகனின் உடல் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

 2. ஆர்யன் கான் உடன் செல்ஃபி எடுத்த நபருக்கு லுக்-அவுட் நோட்டீஸ்

  ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் மும்பையில் போதைப்பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டபோது அவருடன் செல்ஃபி எடுத்து வைரலான நபரான கே.பி. கோஸ்வாமிக்கு எதிராக புனே மாநகர காவல்துறை லுக்-அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.

  2018இல் பதிவான ஒரு பண மோசடி வழக்கில் இது வெளியிடப்பட்டுள்ளது என்கிறது புனே காவல்துறை.

  கே.பி. கோஸ்வாமி ஆர்யன் கான் உள்ளிட்டவர்கள் கைதான வழக்கில் சாட்சி என்று நார்கோடிக்ஸ் கன்ட்ரோல் பீரோ தெரிவித்திருந்தது.

  கே.பி. கோஸ்வாமி ஆர்யன் கானுடன் எடுத்த செல்ஃபி
  Image caption: கே.பி. கோஸ்வாமி ஆர்யன் கானுடன் எடுத்த செல்ஃபி
 3. இலங்கை போலீஸ் ஒருவர் காலணியுடன் இந்து கோயிலுக்குள் சென்றதாக சர்ச்சை

  யாழ்ப்பாணம் − தொண்டமனாறு செல்வசந்நிதி ஆலயம் மற்றும் வல்லிபுர ஆழ்வார் ஆலயம் ஆகிய ஆலயங்களுக்கே போலீஸ் மாஅதிபர் இன்று விஜயம் மேற்கொண்டுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 4. நடராஜன் சுந்தர்

  பிபிசி தமிழுக்காக

  சாதி மறுப்பு திருமணம் செய்ய வந்த பெண்: இழுத்துச் சென்ற தந்தை

  பதிவுத் திருமணத்தின் போது சார்-பதிவாளர் அலுவலகத்தின் உள்ளே நுழைந்த பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள், பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றனர். பெண்ணின் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை.

  மேலும் படிக்க
  next
 5. ஸ்ரீபெரும்புதூரில் வடமாநில இளைஞர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை

  சுமார் பத்துக்கும் மேற்பட்ட போலீஸ் குழுக்கள் தேடியும் அவர்கள் பிடிபடவில்லை. இதையடுத்து, காட்டுப் பகுதியில் பதுங்கிய கொள்ளையர்களைப் பிடிக்க ட்ரோன் உதவியை போலீஸார் நாடினர்.

  மேலும் படிக்க
  next
 6. போலீசை வன்புணர்வு செய்த வழக்கில் போலீசிடம் லஞ்சம் வாங்கிய போலீஸ் கைது

  ஒரு பெண் காவலரை வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆண் சப் இன்ஸ்பெக்டரிடம் லஞ்சம் வாங்கியதாக டெல்லியில் இரண்டு போலீஸ் அதிகாரிகளை கைது செய்தது சிபிஐ. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஆண் உதவி சப் இன்ஸ்பெக்டர். மற்றொருவர் பெண் எஸ்.ஐ.

  டெல்லி மாளவியா நகர் காவல் நிலையத்தில் இந்த கைது நேற்றிரவு நடந்தது. ஏ.என்.ஐ. செய்தி முகமை இந்தத் தகவலை ட்வீட் செய்துள்ளது.

  View more on twitter
 7. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழ்

  சைலேந்திர பாபு

  தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் காவலர்களில் பலர், கடந்த சில ஆண்டுகளில் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்ப்பது உள்பட பல விதங்களில் தற்கொலை முடிவை நாடுவது அதிகரித்தபடி உள்ளது. இதனைத் தடுப்பதற்கு என்ன வழி?

  மேலும் படிக்க
  next
 8. ஆ.விஜயானந்த்

  பிபிசி தமிழ்

  pradeep philip ips

  இந்திய காவல் பணியில் 1987ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தவர் பிரதீப் வி பிலிப். பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட பிரதீப், தமிழ்நாடு காவல்துறையில் ஏ.எஸ்.பி, எஸ்.பி, டி.ஐ.ஜி, ஐ.ஜி, ஏ.டி.ஜி.பி, டி.ஜி.பி என உயர்ந்தார்.

  மேலும் படிக்க
  next
 9. ஆ.விஜய் ஆனந்த்

  பிபிசி தமிழுக்காக

  விசிக தலைவர் தொல். திருமாவளவன்

  தமிழ்நாடு முழுவதும் `ஆபரேஷன் டிஸ்ஆர்ம்' என்ற பெயரில் ரவுடிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களிடம் இருந்து கொடூர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

  மேலும் படிக்க
  next
 10. சிவாஜி பிறந்த நாள் விழா போக்குவரத்து நெரிசல்: நீதிபதி வண்டி நிறுத்தப்பட்டதற்கு கண்டனம்

  சென்னையில் நடிகர் சிவாஜிகணேசன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் வந்ததால் டி.ஜி.எஸ். தினகரன் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

  அந்த நேரத்தில் நீதிமன்றம் சென்றுகொண்டிருந்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வாகனத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

  நீதிபதியை 25 நிமிடம் தடுத்து நிறுத்தியதற்கு காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, உள்துறை செயலாளர் பிரபாகர் காணொலி காட்சி மூலம் ஆஜராகி வருத்தம் தெரிவித்தார்.

பக்கம் 1 இல் 32