ஷாருக் கான்

 1. ஆர்யன் கான் ஜாமீன் மனு மீது அக்டோபர் 26இல் மும்பை உயர் நீதிமன்றம் விசாரணை

  ஆர்யன் கான்
  Image caption: மும்பை தனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்ட ஆர்யன் கான் (கோப்புப்படம்)

  போதைப்பொருள் பயன்பாடு சம்பவத்தில் தொடர்புடையதாக தேசிய போதைப்பொருள் தடுப்புத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் மனு அக்டோபர் 26ஆம் தேதி விசாரிப்படவுள்ளது.

  முன்னதாக, ஆர்யன் கான் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை மும்பை போதைப்பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் தனி நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

  இந்த வழக்கில் ஆர்யன் கானுடன் சேர்த்து அர்பாஸ் மெர்ச்சன்ட், முன்முன் தமேச்சா ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டு அவர்களும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

  இதைத்தொடர்ந்து மும்பை உயர் நீதிமன்றத்தில் ஆர்யன் கான் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

  இதையடுத்து அவரது மனு அக்டோபர் 26ஆம் தேதி விசாரிக்கப்படும் நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் கூறியுள்ளதாக ஆர்யன் கானின் வழக்கறிஞர் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் கூறியிருக்கிறார்.

  கடந்த அக்டோபர் 2-3ஆம் தேதி மும்பை கடல் பகுதியில் சொகுசு கப்பல் ஒன்றில் நடந்த கேளிக்கை நிகழ்ச்சியில் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக போதை பொருள் தடுப்புத் துறைக்கு தகவல் வந்தது.

  இதையடுத்து அதன் தனிப்படை அந்த கப்பலில் சோதனை செய்தபோது, ஆர்யன் கான் மற்றும் இருவரை போதைப்பொருள் வாங்கியது மற்றும் பயன்படுத்தியதாகக் கூறி அதிகாரிகள் கைது செய்தனர்.

  இந்த வழக்கில் நீதிமன்ற அனுமதியுடன் ஆர்யன் கான் என்சிபி காவலில் வைத்து விசாரிக்கப்பட்ட பிறகு அவரை 14 நீதிமன்ற காவலில் வைத்திருக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் தாக்கல் செய்த மனுவையும் விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 2. இக்பால் பர்வேஸ்

  திரைப்பட செய்தியாளர், பிபிசி இந்திக்காக, மும்பை

  ஆர்யன் கான்

  பல பாலிவுட் நட்சத்திரங்கள் மீது போதை மருந்து உட்கொண்டதாக முந்தைய காலங்களிலும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சிலர் அதை ஒப்புக்கொண்டனர். பலர் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். பாலிவுட்டில் போதைப்பொருள் கலாசாரம் எப்படி உள்ளது?

  மேலும் படிக்க
  next
 3. தன் மகன் ஆர்யன் கானுடன் ஷாருக் கான்

  பிரபல இந்தி நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கானிடம் அரசின் போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பான நர்கோடிக் கன்ட்ரோல் பீரோ விசாரணை நடத்தி வருகிறது.

  மேலும் படிக்க
  next
 4. ஷாருக் கான்

  "எங்களுக்கு இடையில் இந்து - முஸ்லிம் என்று எவ்வித பேதமும் இல்லை. என் மனைவி ஒரு இந்து, நான் ஒரு முஸ்லிம், ஆனால் எனது குழந்தைகள் இந்தியர்கள்."

  மேலும் படிக்க
  next
 5. கோப்புப்படம்

  நடிகர் அஜீத்துக்கு 2018-ம் ஆண்டு பிரபலங்கள் பட்டியலில் இடம் கிடைக்கவில்லை இம்முறை அவருக்கு 52-வது இடம் கொடுத்திருக்கிறது ஃபோர்ப்ஸ். அவரது வருமானம் சுமார் 40 கோடி என்றும் குறிப்பிட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 6. ஷாருக் கான், சல்மான் கான், ஆமிர் கான்

  இந்தி திரைப்படத்துறையின் முக்கிய நடிகரும், இயக்குநருமான ஃபரான் அக்தர், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மும்பையில் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருக்கிறார்.

  மேலும் படிக்க
  next