இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2019

 1. இலங்கை

  11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில் முன்னாள் கடற்படை தளபதிக்கு எதிரான வழக்கை தொடர முடியாது என அறிவித்தது, கொலை குற்றத்திற்காக தண்டனை வழங்கப்பட்ட முன்னாள் எம்.பி துமிந்த சில்வாவுக்கு, ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியது போன்றவை, நீதி செயல்முறை மீதான நம்பிக்கையை இல்லாது செய்வதாக மிச்செல் பெச்சலெட் தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 2. ரஞ்சன் அருண்பிரசாத்

  பிபிசி தமிழுக்காக

  இலங்கை

  இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவி வருவதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக சீனி, அரிசி, பால்மா, சமையல் எரிவாயு உள்ளிட்ட பல பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

  மேலும் படிக்க
  next
 3. இலங்கை முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்

  இலங்கை
  Image caption: மங்கள சமரவீர, இலங்கை முன்னாள் அமைச்சர்

  இலங்கையின் மூத்த அரசியல்வாதியான முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர (65) இன்று காலமானார்.

  கோவிட் தொற்று காரணமாக கடந்த 13ம் தேதி கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மங்கள சமரவீர, தீவிர சிகிச்சை பிரிவில் பின்னர் சேர்க்கப்பட்டிருந்தார்.

  இந்த நிலையில் அவர் இன்று அதிகாலை காலமானதாக மருத்துவமனை தகவல்கள் உறுதிப்படுத்தின.

  இலங்கையின் தென் பகுதியான மாத்தறை மாவட்டத்தில் 1956ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி மங்கள சமரவீர பிறந்தார்.

  1983ம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடாக, தனது அரசியல் வாழ்க்கையை மங்கள சமரவீர ஆரம்பித்திருந்தார். அதனைத் தொடர்ந்து,

  1989ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்றார்.

  1994ம் ஆண்டு சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவின் தலைமையில் ஆட்சி அமைத்த அரசாங்கத்தில் தபால் மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சராக மங்கள சமரவீர நியமிக்கப்பட்டிருந்தார்.

  2004ம் ஆண்டு துறைமுகம், விமான சேவைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சராகவும் அவர் கடமையாற்றியிருந்தார்.

  2005ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரையான காலப் பகுதியிலும், 2015ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையான காலப் பகுதியிலும் மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சராக கடமையாற்றியிருந்தார்.

  2017ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை இலங்கையின் நிதி அமைச்சராக, மங்கள சமரவீர செயற்பட்டிருந்தார். சுமார் 35 வருடங்களுக்கு மேல் அரசியல் அனுபவத்தை கொண்ட மங்கள சமரவீர, 2019ம் ஆண்டு அரசியலிலிருந்து ஓய்வு பெற்ற நிலையிலும், சில அரசியல் செயற்பாடுகளை இறுதித் தருணங்களில் முன்னெடுத்து வந்திருந்தார்.

  இவ்வாறான நிலையிலேயே, கோவிட் தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மங்கள சமரவீர, இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

 4. இலங்கை

  இலங்கை அரசாங்கம் அண்மை காலமாக முன்னெடுத்த அடக்குமுறைகள், மனித உரிமை பேரவையில் ஒரு வலுவான தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதற்கான முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 5. Video content

  Video caption: இலங்கையில் இஸ்லாமிய பெண்களின் முகத்தை மறைக்கும் ஆடைக்கு தடை ஏன்?
 6. பிரபாகர் மணி திவாரி

  கொல்கத்தாவிலிருந்து பிபிசி-க்காக

  மமதா

  பாஜக என்று பெயர் குறிப்பிடாமல், "நான் ஒரு இந்து பிராமண குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்றும், தினமும் காலையில் சண்டி வந்தனம் ஸ்லோகம் பாராயணம் செய்கிறேன் என்றும் இந்து-முஸ்லீம் பிரிவினை பேசுபவர்களுக்கு நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். என்னுடன் இந்துத்துவா பெயரைச் சொல்லி விளையாட வேண்டாம்" என்று மமதா பானர்ஜி கூறினார்.

  மேலும் படிக்க
  next
 7. ரணில்

  இலங்கையில் தாக்குதல் நடத்தப்படும் என இந்தியாவே ஏற்கனவே உளவுத்தகவல்களை பகிர்ந்ததாக அவர் தெரிவித்தார். இந்தியாவின் ரா உளவு அமைப்பால் வழங்கப்பட்ட அது தொடர்பான அறிக்கையை, தாக்குதலுக்கு பின்னரான காலத்தில் தான் வாசித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

  மேலும் படிக்க
  next
 8. ரஞ்சன் அருண் பிரசாத்

  பிபிசி தமிழுக்காக, கொழும்பிலிருந்து

  சிறிசேன

  ஐ.எஸ் மற்றும் சஹ்ரான் ஹாஷ்மி ஆகிய தரப்பிடமிருந்து நாட்டிற்கு அச்சுறுத்தல் காணப்படுகின்றதை அறிந்திருந்தும் சிறிசேன , இந்தியா மற்றும் சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டுள்ளார் என அறிக்கை தெரிவிக்கிறது.

  மேலும் படிக்க
  next
 9. லாரா பிக்கர்

  பிபிசி நியூஸ் சியோல்

  கிம் ஹை சூக்

  தென் கொரிய போர்க் கைதிகளை தங்கள் நிலக்கரி சுரங்கங்களில் அடிமைகளாக வைத்து வேலை வாங்கி தங்களின் ஆட்சிக்கும், ஆயுதத் தயாரிப்புத் திட்டங்களுக்கும் வட கொரியா வருமானம் ஈட்டுகிறது என்று மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தப் புகார்கள் குறித்து பிபிசி ஆய்வு செய்தது.

  மேலும் படிக்க
  next
 10. இலங்கை

  ஜெனிவா மனித உரிமை பேரவை அமர்வுகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, மக்களை தூண்டி விடுதல் மற்றும் கொரோனா பரவல் ஆகிய காரணங்களை முன்னிலைப்படுத்தி நீதிமன்ற உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 9