ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

 1. இலங்கை முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்

  இலங்கை
  Image caption: மங்கள சமரவீர, இலங்கை முன்னாள் அமைச்சர்

  இலங்கையின் மூத்த அரசியல்வாதியான முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர (65) இன்று காலமானார்.

  கோவிட் தொற்று காரணமாக கடந்த 13ம் தேதி கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மங்கள சமரவீர, தீவிர சிகிச்சை பிரிவில் பின்னர் சேர்க்கப்பட்டிருந்தார்.

  இந்த நிலையில் அவர் இன்று அதிகாலை காலமானதாக மருத்துவமனை தகவல்கள் உறுதிப்படுத்தின.

  இலங்கையின் தென் பகுதியான மாத்தறை மாவட்டத்தில் 1956ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி மங்கள சமரவீர பிறந்தார்.

  1983ம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடாக, தனது அரசியல் வாழ்க்கையை மங்கள சமரவீர ஆரம்பித்திருந்தார். அதனைத் தொடர்ந்து,

  1989ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்றார்.

  1994ம் ஆண்டு சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவின் தலைமையில் ஆட்சி அமைத்த அரசாங்கத்தில் தபால் மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சராக மங்கள சமரவீர நியமிக்கப்பட்டிருந்தார்.

  2004ம் ஆண்டு துறைமுகம், விமான சேவைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சராகவும் அவர் கடமையாற்றியிருந்தார்.

  2005ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரையான காலப் பகுதியிலும், 2015ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையான காலப் பகுதியிலும் மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சராக கடமையாற்றியிருந்தார்.

  2017ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை இலங்கையின் நிதி அமைச்சராக, மங்கள சமரவீர செயற்பட்டிருந்தார். சுமார் 35 வருடங்களுக்கு மேல் அரசியல் அனுபவத்தை கொண்ட மங்கள சமரவீர, 2019ம் ஆண்டு அரசியலிலிருந்து ஓய்வு பெற்ற நிலையிலும், சில அரசியல் செயற்பாடுகளை இறுதித் தருணங்களில் முன்னெடுத்து வந்திருந்தார்.

  இவ்வாறான நிலையிலேயே, கோவிட் தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மங்கள சமரவீர, இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

 2. ரஞ்சன் அருண் பிரசாத்

  பிபிசி தமிழுக்காக

  இலங்கையின் உண்மை நண்பன் சீனாவா? இந்தியாவா?- ஓர் அலசல்

  சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவை நினைவு கூரும் வகையில், நாணயமொன்றையும் இலங்கை மத்திய வங்கி அண்மையில் வெளியிட்டிருந்தது. ஏனைய உலக நாடுகளை விடவும் இலங்கை அரசாங்கம் ஏன் சீனாவை உண்மையான நண்பனாக ஏற்றுக்கொள்கின்றது?

  மேலும் படிக்க
  next
 3. பசில் ராஜபக்ஷ

  அமெரிக்க மற்றும் இலங்கை குடியுரிமை கொண்டுள்ள பசில் ராஜபக்ஷ (ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சகோதரர்) இலங்கையின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக வர்த்தமானி ஊடாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 4. இலங்கை எரிபொருள் விலை உயர்வுக்கு வித்தியாசமாக எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்கட்சிகள் எம்.பி.க்கள்

  இலங்கை அமைச்சர் SJB Media Unit

  இலங்கையில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்திற்கு தங்களுடைய வாகனங்களில் வருகைத் தவிர்த்து, டிராக்டர்கள், டிரக்குகள், ஆட்டோ போன்ற வாகனங்களில் வந்து தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர்.

  முன்னதாக, வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை, பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, சபாநாயகரிடம் கையளித்தது. எரிபொருள் விலை அதிகரிப்பை முன்னிலைப்படுத்தி, அமைச்சருக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

  இலங்கை அமைச்சர் SJB Media Unit
  இலங்கை அமைச்சர் SJB Media Unit
  இலங்கை அமைச்சர் SJB Media Unit
  இலங்கை அமைச்சர் SJB Media Unit
  இலங்கை அமைச்சர் SJB Media Unit
 5. இலங்கை அரசின் முக்கிய இணையதளங்களில் ஊடுருவல்

  இலங்கை

  இலங்கை அரசுக்கு சொந்தமான முக்கிய மூன்று இணையத்தளங்கள் ஊடுருவப்பட்டுள்ளன.சீனாவிற்கான இலங்கை தூதரகம், ரஜரட்ட பல்கலைக்கழகம், சுகாதார அமைச்சு ஆகியவற்றின் இணையத்தளங்கள் ஊடுருவலை சந்தித்துள்ளதாக இலங்கை கணிணி அவசர பிரிவு தெரிவித்துள்ளது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.யுத்தம் மெளனிக்கப்பட்டு இன்றுடன் 12 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையிலேயே, இந்த இணையத்தள ஊடுருவல் நடந்துள்ளது. கடந்த காலங்களிலும் மே 18ஆம் தேதி விடுதலைப்புலி ஆதரவாளர்கள் என கூறுவோரால் பல இணையதளங்கள் ஊடுருவப்பட்டிருந்தன. தற்போது அந்த இணையதளங்கள் மீட்கப்பட்டு இயல்புநிலைக்கு திரும்பியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 6. சரத் வீரசேகர

  தேசிய கல்விக் கொள்கைக்கு முரணாக, மதம் மற்றும் மொழிகளை மாத்திரம் கற்பிக்கும் மதரஸா பாடசாலைகளையே தாம் தடை செய்யப் போவதாகவும், முஸ்லிம் சமூகம் மற்றும் முஸ்லிம் அமைப்புகளிடமிருந்து தமக்கு அதற்கான அனுமதி கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் சரத் வீரசேகர கூறினார்.

  மேலும் படிக்க
  next
 7. இலங்கை

  இலங்கை அரசாங்கம் அண்மை காலமாக முன்னெடுத்த அடக்குமுறைகள், மனித உரிமை பேரவையில் ஒரு வலுவான தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதற்கான முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 8. லாரா பிக்கர்

  பிபிசி நியூஸ் சியோல்

  கிம் ஹை சூக்

  தென் கொரிய போர்க் கைதிகளை தங்கள் நிலக்கரி சுரங்கங்களில் அடிமைகளாக வைத்து வேலை வாங்கி தங்களின் ஆட்சிக்கும், ஆயுதத் தயாரிப்புத் திட்டங்களுக்கும் வட கொரியா வருமானம் ஈட்டுகிறது என்று மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தப் புகார்கள் குறித்து பிபிசி ஆய்வு செய்தது.

  மேலும் படிக்க
  next
 9. மாவீரர் நினைவு

  நீதிமன்ற தடை காரணமாக, மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு செல்லும் அனைத்து வீதிகளும் மூடப்பட்டிருந்ததுடன், வடக்கில் இன்று பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

  மேலும் படிக்க
  next
 10. அரவிந்த் குமார்

  20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமுன்ற உறுப்பினர் அரவிந்த் குமாரை, கட்சியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக, அந்தக் கட்சியின் தலைவர் மனோ கணேசன் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 6