கிழக்கு ஐரோப்பா

 1. ஐரோப்பாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று எண்ணிக்கை

  கொரோனா தொற்றின் நான்காவது அலையின் மோசமான பிடியில் ஜெர்மனி சிக்கியிருப்பதாக அந்நாட்டின் சான்சலர் ஏங்கலா மெர்கல் தெரிவித்துள்ளார்.

  கொரோனா நெருக்கடி குறித்த பிராந்திய தலைவர்களுடனான சந்திப்பில் ஏங்கலா மெர்கல் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

  ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஜெர்மனியில் கடந்த புதன்கிழமையன்று புதியதாக 52 ஆயிரத்து 826 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

  பொதுமுடக்கத்தை தவிர்க்க பெல்ஜியத்தில் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  "கொரோனா குறித்து வரும் எச்சரிக்கை சமிக்ஞைகள் தீவிரமாக உள்ளன," என அந்நாட்டின் பிரதமர் அலெக்ஸாண்டர் டெ க்ரூ தெரிவித்துள்ளார். மேலும் அந்நாட்டில் மக்கள் புதிய சந்திப்புகளை தவிர்க்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

  பெல்ஜியத்தில்12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மட்டுமே முகக்கவசம் அணிய வேண்டும் என்றிருந்த நிலையில் தற்போது 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

  சனிக்கிழமையிலிருந்து ஒரு மாத காலத்திற்கு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவது கட்டாயமாக்கப்படுகிறது. சினிமா, அருங்காட்சியகம் போன்ற இடங்களில் கோவிட் பாதுகாப்பு டிக்கெட் என்ற அனுமதி பாஸ்கள் கட்டாயம்.

  அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் பெல்ஜியம் மக்கள் அனைவருக்கும் மூன்றாவது பூஸ்டர் தடுப்பு மருந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ஆஸ்ட்ரியாவில் தடுப்பு மருந்து எடுத்து கொள்ளாத சுமார் 20 லட்சம் மக்கள் வெளியில் வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

  அங்கு தினசரி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

  செய்தியை மேலும் விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்

 2. கொரோனா தொற்று

  பொதுமுடக்கத்தை தவிர்க்க பெல்ஜியத்தில் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  மேலும் படிக்க
  next
 3. ஜெர்மனியில் வாக்குப்பதிவு நிறைவு - புதிய தலைவர் தேர்வில் கடும் போட்டி

  ஜெர்மனி தேர்தல்
  Image caption: ஓலாஃப் ஷோட்ஸ், மைய இடதுசாரி சமூக ஜனநாயகவாதி கட்சி வேட்பாளர்

  ஜெர்மனியில் ஏங்கலா மெர்க்கலுக்கு பிறகு நாட்டின் தலைமை பதவிக்கு யார் வருவார் என்பதில் கடும் போட்டி காணப்படுகிறது.

  அந்த நாட்டில் இன்று நடைபெற்ற வாக்கெடுப்பு நிறைவு பெற்றுள்ளது. இருப்பினும், தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகளில், மத்திய இடதுசாரி சமூக ஜனநாயகவாதிகள் கட்சி சற்றே கூடுதலாக முன்னிலை வகிப்பதாக கூறுகின்றன.

  அதன் வேட்பாளர் ஓலாஃப் ஷோட்ஸ், தேசம் மாற்றத்திற்காக வாக்களித்ததாகவும், அடுத்த அரசாங்கத்தை உருவாக்கி வழிநடத்த தாம் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

  கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி வேட்பாளர் மற்றும் ஏங்கலா மெர்க்கலின் ஆதரவைப் பெற்ற ஆர்மீன் லேஷெட்டும் அடுத்த அரசாங்கத்தை வழிநடத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

  இருப்பினும், தான் எதிர்பார்ப்பது போல தமது கட்சிக்கு முடிவுகள் கிடைக்காத நிலையை தாம் அறிந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

  இந்த தேர்தலில் க்ரீன்ஸ் கட்சி மூன்றாவது இடத்திலும், லிபரெல் எஃப்டிபி கட்சி அதற்கடுத்த நிலையிலும் உள்ளன.

  ஆட்சியமைக்கும் பெரும்பான்மைக்கு மூன்று கட்சிகள் தேவைப்படுவதால், கூட்டணி பேச்சுவார்த்தை நீளமான மற்றும் கடினமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இதனால் ஜெர்மனியின் அடுத்த தலைவர் யார் என்பதை அறிய சில வாரங்கள் வரை ஆகலாம் என்று நம்பப்படுகிறது.

 4. பருவநிலை

  தற்போதைய தீவிர வானிலை நிகழ்வுகளுக்கு ஏற்றபடி மனித சமூகம் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை என்பதையே ஐரோப்பிய பேய் மழை உணர்த்துகிறது

  மேலும் படிக்க
  next
 5. Video content

  Video caption: ஃபைசர் கொரோனா வைரஸ் தடுப்பூசி: உலகில் முதல் நாடாக அனுமதி வழங்கிய பிரிட்டன்
 6. டேவிட் மெக்காய்ல் ,

  பிபிசி

  நக்சிவன் நாடு

  இங்குள்ள உயரமான கல்லறை ஒன்றில் ஹஸ்ரத் நபி அடக்கம் செய்யப்பட்டுள்ளார். பயணம் மற்றும் சுற்றுலா குறித்த இதழான லோன்லி பிளானெட் இங்குள்ள மலைமீது கட்டப்பட்ட இடைக்காலக் கோட்டையை "யூரேசியாவின் மச்சு பிச்சு" என்று குறிப்பிடுகிறது.

  மேலும் படிக்க
  next
 7. நேற்று நடந்தவை - சில முக்கியச் செய்திகள்

  • கோவிட் -19க்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகக் கூறிவந்த போலி மருத்துவர் க. திருத்தணிகாச்சலம் தமிழக காவல்துறையால் புதனன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
  • கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக அமெரிக்க அரசு அமைத்திருந்த சிறப்பு குழுவை கலைக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
  • சீனாவில் கொரோனா வைரஸ் பரவலின் மையமாக விளங்கிய ஹூபே மாகாணத்தில் பள்ளிகள் மீண்டும் இயங்கத் தொடங்கின.
  • ஐரோப்பிய நாடுகளிலேயே கொரோனா வைரஸால் அதிகமான உயிரிழப்பை சந்தித்த நாடாகவும், உலகளவில் அமெரிக்காவிற்கு அடுத்தபடி அதிக பலி எண்ணிக்கை கொண்ட நாடாகவும் பிரிட்டன் உருவெடுத்துள்ளது.
  • தமிழகத்தில் இன்று மது விற்பனை தொடங்கவுள்ள நிலையில் மதுபானங்கள் மீதான கலால் வரியை 15 சதவீதம் உயர்த்தி உள்ளது தமிழக அரசு.
  • இரான் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.
  • கொரோனாவைரஸ் குறித்து ஆய்வில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சியாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார், அவரை சுட்டவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

  விரிவாகப் படிக்க: கொரோனா வைரஸ் - நேற்று உலகெங்கும் என்ன நடந்தது?

  coronavirus world news
 8. ககன் சபர்வால்

  பிபிசி தெற்காசிய செய்தியாளர்

  கிரிஸ் டேவிஸ்

  “எல்லாம் நன்றாக உள்ளது என பாசாங்கு செய்யும் மோதி அரசின் பிரசார உத்தியில் பங்கேற்க நான் தயாராக இல்லை என்பதை எனது மின்னஞ்சல்கள் மூலம் தெளிவுபடுத்தியிருந்தேன்.”

  மேலும் படிக்க
  next