மதம்

 1. ஷாஹனாஸ் பர்வீன்

  பிபிசி பங்களா, டாக்கா

  பூஜை

  முன்பு இந்து சமூக மக்களின் வீடுகள் மற்றும் கோவில்கள் மீது நிகழ்ந்த தாக்குதல்கள் அனைத்தும், ஒரு கிராமம் அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே ஏற்பட்டன. ஆனால் இந்த முறை துர்கா பூஜையின் போது, நாட்டின் பல்வேறு மாவட்டங்களின் பூஜை அரங்குகள் மற்றும் கோவில்கள் மீது தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நிகழ்ந்த பெரிய அளவிலான தாக்குதல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களை, கடந்த காலங்களில் நாடு பார்த்ததில்லை.

  மேலும் படிக்க
  next
 2. வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவங்களுக்கு அமெரிக்கா கண்டனம்

  வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்களை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

  இது தொடர்பாக அமெரிக்க உள்துறை செய்தித்தொடர்பாளர் நெட்ரைஸ் கூறுகையில், "இந்து சமூகத்தினருக்கு எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். ஒட்டுமொத்த விவகாரமும் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என வங்கதேச நிர்வாகத்தை வலியுறுத்துகிறோம்," என்று கூறியுள்ளார்.

  இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள தமது ட்விட்டர் இடுகையிலும், "மத சுதந்திரம் அல்லது நம்பிக்கை என்பது அடிப்படை உரிமை," என்று குறிப்பிட்டுள்ளார்.

  View more on twitter
 3. Video content

  Video caption: தீபாவளி பண்டிகை டிப்ஸ் தரும் சர்ச்சையில் விராட் கோலி - வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

  விராட் கோலி தன் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் இந்த தீபாவளி பண்டிகையை எப்படி அர்த்தமுள்ளதாகக் கொண்டாடுவது என சில குறிப்புகளைப் பகிர உள்ளதாக விராட் கோலி கூறியிருக்கிறார்.

 4. குர்மீத் ராம் ரஹீம் சிங்

  1999 முதல் 2001-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், குர்மீத் ராம் ரஹீம் சிங் தனது இரண்டு பெண் சீடர்களை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியதாக 2002-ஆம் ஆண்டில் புகார் எழுந்தது.

  மேலும் படிக்க
  next
 5. ஆப்கன் ஷியா மசூதி தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ எஸ் அமைப்பு

  மசூதி தாக்குதல்

  ஆப்கன் ஷியா மசூதி தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருப்பதாக, செய்தியறிக்கை வெளியிட்டுள்ளது ஐ எஸ் அமைப்பு.

  ஆப்கானிஸ்தான் காந்தஹார் நகரில் நேற்று வெள்ளிக்கிழமை ஷியா இஸ்லாமிய பிரிவினர் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது பீபி ஃபாத்திமா மசூதியில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர்.

  இத்தாக்குதலுக்குப் பின் தாங்கள் இருப்பதாக இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ எஸ் அமைப்பு கூறியுள்ளது.ஆப்கானிஸ்தானில் இதற்கு முந்திய வெள்ளிக்கிழமை குண்டூஸ் மாகாணத்தில் ஒரு ஷியா மசூதியில் தற்கொலை குண்டு தாக்குதல் நடந்ததில் ஐம்பது பேர் கொல்லப்பட்டனர்.

 6. இந்து கோயில்

  பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெரு முயற்சியாலும் தமிழ்நாடு முழுவதும் மக்களைத் திரட்டிப் போராடியதின் விளைவாகவும் அனைத்து நாட்களும் கோயில்களை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ளதாக அக்கட்சி கருத்துத் தெரிவித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 7. `காளிகாம்பாள் கோயிலை அண்ணாமலை தேர்வு செய்தது ஏன்?

  ஆ. விஜயானந்த்

  பாஜக ஆர்ப்பாட்டம்
  கோயில் ஆர்ப்பாட்டம்

  தமிழ்நாட்டில் அனைத்து நாட்களிலும் கோயில்களைத் திறக்க வலியுறுத்தி, பா.ஜ.க சார்பில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், `போராடுவதற்கு வலுவான காரணங்கள் எதுவும் இல்லாததால் இப்படிப்பட்ட போராட்டத்தை அவர்களாகவே உருவாக்கிக் கொண்டனர்,' என்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

  கொரோனா இரண்டாம் அலை காரணமாக, தமிழ்நாட்டில் இறை வழிபாடு நடத்துவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கோயில்கள், மசூதிகள், கிறிஸ்துவ தேவாலயங்களில் வார இறுதி நாள்களில் வழிபாடு நடத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

  அனைத்து நாள்களிலும் கோயில்களைத் திறக்க வலியுறுத்தி, பா.ஜ.க சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்குப் பதில் அளித்த தமிழ்நாடு அரசு, `மத்திய அரசின் வழிகாட்டுதலின்படிதான் அனுமதி அளிக்கப்படுகிறது' என தெரிவித்தது.

  இந்நிலையில், அனைத்து நாள்களிலும் கோவில்களைத் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  குறிப்பாக, 12 திருக்கோவில்களின் முன்பாக இந்தப் போராட்டத்தை பா.ஜ.கவினர் நடத்தினர். சென்னை, பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள்கோயிலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.

  இது தவிர, திருச்செந்தூர் முருகன் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், பழநி தண்டாயுதபாணி திருக்கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம், தஞ்சை பெரிய கோயில், ராமநாதபுரம், ராமநாத சுவாமி ஆலயம், கோவை கோனியம்மன் ஆலயம், தில்லை நடராஜர் ஆலயம், நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் எனப் பல பகுதிகளில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அண்ணாமலை, ``தமிழ்நாட்டில் திரையரங்குகளைத் திறந்த நிலையில், கோயில்களைத் திறக்க அனுமதி மறுக்கப்படுவது ஏன்? திரையரங்குகளில் மட்டும் கொரோனா பரவாதா? எங்களின் பூஜை அறைகளுக்குள் உங்களின் (தி.மு.க) சிந்தாந்தத்தைக்கொண்டு வர வேண்டாம். கொரோனாவை காரணம் காட்டி தடைவிதிக்கப்பட்டுள்ளதால் நாங்கள் வேறு வழியில்லாமல் போராட்டத்தில் இறங்கியுள்ளோம்" என்றார்.

  தொடர்ந்து பேசிய அண்ணாமலை, ``எப்போதுமே நாங்கள் நல்ல விஷயங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்போம். குறிப்பாக, பள்ளிகளைத் திறப்பதற்கு அரசு முடிவு செய்தபோது வரவேற்றோம். அதேநேரம், திரையரங்குகளைத் திறக்க முடிவு செய்தபோது எதிர்ப்பு தெரிவித்தோம். எங்களின் எதிர்ப்பையும்மீறி திரையரங்குகளைத் திறந்தார்கள்" என்றார். கோயிலை பூட்டுவதற்கு கொரோனா ஒரு காரணம் இல்லை.

  ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் தன்னிச்சையாக செயல்படுவோம் என்று கூறிய தி.மு.க, தற்போது மத்திய அரசின் வழிகாட்டலின்படி கோயில்களை மூடுவதாக தெரிவித்துள்ள கருத்தில் உண்மையில்லை. கடவுள் இல்லை என்பதுதான் தி.மு.கவின் சித்தாந்தம். ஆகவேதான், கோயில்களுக்குத் தடை போடுகிறார்கள்.நாங்கள் தமிழக அரசுக்கு பத்து நாள்கள் அவகாசம் தருகிறோம். அதற்குள் கோயில்களைத் திறப்பது தொடர்பாக நல்ல முடிவை எடுக்க வேண்டும்" என்றார்.

  பா.ஜ.கவின் போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ``போராடுவதற்கு வலுவான காரணங்கள் எதுவும் இல்லாததால் இப்படிப்பட்ட போராட்டத்தை அவர்களாகவே உருவாக்கிக் கொண்டனர். இந்து சமய அறநிலையத்துறையை பொறுத்தவரையில்மத்திய அரசின் வழிகாட்டுதலின்படிதான், கொரோனா நோய்த் தொற்று தளர்வுகளை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கை என்னவென்றால், `அதிகமாகக் கூட்டம் கூடுகிற நிலையைத் தவிர்க்க வேண்டும், திருவிழாக்களை அனுமதிப்பது தொடர்பாக மாநில அரசுமுடிவு செய்ய வேண்டும்' என தெரிவித்துள்ளது.

  சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் கோவில்களுக்கு பக்தர்கள் அதிகமாக வரக் கூடிய சூழல் உள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு தவிர மற்ற நான்கு நாள்களில் திருக்கோயில்கள் முழுமையாக திறந்துள்ளன. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் கோவில்கள் மூடப்பட்டிருந்தாலும் தெய்வத்துக்கு வேண்டிய அனைத்து பூஜைகளும் எப்போதும்போல நடந்து வருகின்றன. கொரோனா அபாயம் நம்மைவிட்டு நீங்கியவுடன் திருக்கோயில்களை முதல் பணியாக முதலமைச்சர் திறந்து வைப்பார்" என்றார்.

  தொடர்ந்து பேசிய சேகர்பாபு, `` பா.ஜ.க நடத்தும் போராட்டத்தை உற்று நோக்கினால், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள்களில் எதாவது ஒரு நாளை போராட்டத்துக்கு உகந்த நாளாக அவர்கள் தேர்வு செய்திருக்கலாம். ஆனால், இன்றைக்கு காளிகாம்பாள் கோயிலுக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள்வந்து செல்வார்கள். இவர்களின் இன்றைய போராட்டத்தால் அந்தக் கோயிலில் வழிபாடு என்பது 3 நாள்களாகக் குறைந்துவிட்டது.

  போராடுகிறவர்கள், கண்மூடித்தனமாக காரணங்களை உருவாக்கிக் கொண்டு போராடுகிறார்களே தவிர, கொரோனா நோய்த் தொற்றில் விலைமதிக்க முடியாத உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தை அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். எம்மதமும் சம்மதமே என்பதுதான் முதல்வரின் கோட்பாடு.கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் வழிபாட்டுத் தலங்களைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்கிறார்.

  கோயில் ஆர்ப்பாட்டம்
 8. Video content

  Video caption: தங்கக் கட்டிகளாக மாறும் கோயில் நகைகள் - பின்னணி என்ன?

  கோயில்களில் பயன்பாட்டில் இல்லாத நகைகளை தங்க பிஸ்கெட்டுகளாக மாற்றி வங்கிகளில் முதலீடு செய்வதற்கு தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

 9. பாரிஸில் நடந்த ஒரு பிரார்த்தனை

  1950ஆம் ஆண்டு முதல் முதல் பிரான்சில் உள்ள கத்தோலிக்க பாதிரியார்களால் 2,16,000 சிறார்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் என்று இது தொடர்பான விசாரணையில் தெரியவந்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 10. Video content

  Video caption: கேரளாவில் கிருஷ்ணர் படங்களை வரையும் முஸ்லிம் பெண்

  ஜஸ்னா சலீம் தனக்குப் பிடித்த ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசினால் குழந்தை போல துள்ளிக் குதித்து மகிழ்ச்சியாகி விடுகிறார். அந்த ஒரு விஷயம் குழந்தை கிருஷ்ணர்.

பக்கம் 1 இல் 25