விமான விபத்துக்கள் மற்றும் சம்பவங்கள்

 1. கோழிக்கோடு விமான விபத்துக்கு காரணம் விதிகளைப் பின்பற்றாததே - விசாரணை அறிக்கை

  கடந்த ஆண்டு 21 பேரை பலி கொண்ட கோழிக்கோடு விமான விபத்துக்கு பொறுப்பில் இருந்த விமானி நிலையான நடைமுறை விதிகளை பின்பற்றத் தவறியதே காரணம் என்று ஏர்கிராஃப்ட் ஆக்சிடண்ட் இன்வெஸ்டிகேஷன் பீரோ என்ற விசாரணை அமைப்பு அளித்த விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு இந்த இறுதி விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

  விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை இயக்கும் பொறுப்பில் இருந்த விமானிக்கு அதே போன்ற தட்பவெட்ப நிலையில், கோழிக்கோட்டில் விமானத்தை பல முறை இறக்கிய அனுபவம் இருந்த காரணத்தால், அதீத தன்னம்பிக்கையும் அதனால் அசட்டையும் தோன்றியிருக்கலாம் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

 2. சாக்கி அன்வரி

  ஆஃப்கன் தலைநகர் காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையம் தற்போது சுமார் 4,500 அமெரிக்க படையினரின் தற்காலிக கட்டுப்பாட்டில் உள்ளது.

  மேலும் படிக்க
  next
 3. People trying to board USAF aeroplane at Kabul airport

  அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 4,500 வீரர்களின் கட்டுப்பாட்டில் தற்போது காபூல் விமான நிலையம் உள்ளது. ஆனால் அதைச் சுற்றி பல இடங்களில் தாலிபன்கள் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 4. விண்வெளியில் ஜெஃப் பெசோஸ் - 11 நிமிட பயணத்தின் மெய்சிலிர்க்கும் அனுபவம்

  ஜெஃப் பெசோஸ்
  Image caption: இடமிருந்து: மார்க் பெசோஸ், ஜெஃப் பெசோஸ், ஆலிவர் டேமென், வேலி ஃபங்க்

  உலக முன்னணி கோடீஸ்வர்களில் ஒருவரான ஜெஃப் பெசோஸ், நியூ ஷெப்பர்ட் என்ற ராக்கெட்டில் விண்வெளி பயணம் மேற்கொண்டார். 11 நிமிடங்கள் நீடித்த இந்த பயணத்தை முடித்துக் கொண்டு அவரும் அவருடன் பயணம் செய்த மேலும் மூவரும் பத்திரமாக பூமிக்கு திரும்பியுள்ளனர். துல்லியமாக சொல்வதென்றால் இவர்கள் 10 நிமிடங்கள் 10 நொடிகள் பயணம் செய்துள்ளனர்.இவர்களின் விண்வெளி பயணம் பற்றிய விரிவான செய்திகளை படிக்க இங்கே சொடுக்கவும்.

 5. பிலிப்பைன்ஸ் விமான விபத்தில் உயிர் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு

  பிலிப்பைன்ஸ்

  பிலிப்பைன்ஸ் ராணுவத்தின் போக்குவரத்து விமானம் தரையிறங்கும்போது ஓடுபாதையை கடந்து சென்று ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.

  டஜன் கணக்கானவர்கள் இந்த விபத்தில் உயிர் தப்பியுள்ளனர்.

  நாட்டின் தென் பகுதியில் உள்ள ஜோலோ தீவில் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு (கிரீன்விச் சராசரி நேரப்படி காலை 3.30) இந்த விபத்து நடந்துள்ளது.

  ஜோலோ தீவில் உள்ள விமான ஓடு பாதையின் எல்லையைக் கடந்து இந்த விமானம் ஓடியபோது இந்த விபத்து நேரிட்டது. அப்போது விமானத்தில் 92 பேர் இருந்தனர்.

  விபத்து நடந்த இடத்தில் உடனடியாக 17 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. உயிர் பிழைத்தவர்கள் அருகில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

  இது பற்றி விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்

 6. Philippines military transporter crash site on Jolo island, 4 July 2021

  பிலிப்பைன்ஸ் ராணுவ விமானம் நொறுங்கி 50 பேர் பலியாயினர். எரிந்துகொண்டிருந்த விமானப் பாகங்களில் இருந்து டஜன் கணக்கானவர்கள் உயிர் தப்பினர். நாட்டின் தென் பகுதியில் உள்ள ஜோலோ தீவில் இந்த விபத்து நடந்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 7. A Transair 737 cargo plane on the runway in Hawaii

  விமானி ஒருவர் விமானத்தின் வால் பகுதியை பிடித்து தொங்கிக் கொண்டு இருந்ததாகவும், அவர் மீட்பு விமானம் ஒன்றின் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டார் என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

  மேலும் படிக்க
  next
 8. லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையம்

  விமானம் பறக்க, ஓடுதளத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது, அந்த நபர் தன் இருக்கையில் இருந்து எழுந்ததாகவும், அவர் விமானிகள் விமானத்தை இயக்கும் காக்பிட் அறையைத் திறக்க முயன்றதாகவும் விமான பணிக் குழுவினர் கூறினர்

  மேலும் படிக்க
  next
 9. ஜோனாத்தன் அமோஸ்

  பிபிசி அறிவியல் செய்தியாளர்

  இன்ஜினியூட்டி

  மனிதனால் உருவாக்கப்பட்ட கருவி, வேறொரு கோளில் இதுவரை பறக்கவிடப்பட்டதில்லை, இப்போது இன்று பறக்கவிடப்பட்டதே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

  மேலும் படிக்க
  next
 10. A crocodile with its mouth open

  அந்த விமானம் முழுவதும் எரிபொருள் சிந்திக் கிடந்ததால் அதை அவரால் உறைவிடமாக பயன்படுத்த முடியவில்லை. தாம் கடைசியாக அனுப்பிய செய்தி தொடர்புடையவர்களைச் சென்று சேர்ந்திருக்கும், அவர்கள் தம்மை மீட்க வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் அவர் விமானத்தின் அருகிலேயே அந்தக் காட்டுக்குள் தங்கியிருந்தார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 8