ஸிக்கா தொற்று

 1. ஆஸ்ட்ராசெனிகா தடுப்பூசியால் அரிய வகை நரம்பியல் பக்கவிளைவுக்கு வாய்ப்பு - ஐரோப்பிய மருத்துவ அமைப்பு எச்சரிக்கை

  கொரோனா தடுப்பூசி

  கொரோனா வைரஸ் பாதிப்புக்கு போடப்படும் ஆஸ்ட்ராசெனிகா தடுப்பூசி போடுவதால் குயில்லன் பார்ரே என்ற அரிய வகை நரம்பு மண்டல பக்க விளைவு சாத்தியமாகலாம் என்றாலும் அந்த ஆபத்து வெகு குறைவு என்று ஐரோப்பிய மருத்துவ அமைப்பான இஎம்ஏ கூறியிருக்கிறது

  ஆஸ்ட்ராசெனிகா தடுப்பூசி மருந்துக்கும் இந்த அரிதான நரம்பியல் பாதிப்புக்கும் ஒரு சதவீத தொடர்பு உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

  ஆனால், இந்த வகை பக்கவிளைவு 10 ஆயிரம் பேரில் ஒருவருக்கே ஏற்படலாம் என்று இஎம்ஏ கூறுகிறது. இந்த சாத்தியமிக்க ஆபத்துகளுடன் தடுப்பூசியின் ஆற்றலை ஒப்பிட்டால் அது பல மடங்கு பயன் தரவல்லது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

  இதே இஎம்ஏ அமைப்பு, கடந்த ஜூலை மாதம் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி போடுவதால் குயில்லன் பர்ரே குறைபாடு ஏற்படலாம் என்று கூறியது.

  அஸ்ட்ரா செனிகா போலவே அந்த நிறுவன தடுப்பூசி மருந்தில் அடினோ வைரஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

  குயில்லன் பர்ரே குறைபாடு என்றால் என்ன?

  GBS என்பது ஒரு சுய தடுப்பாற்றல் குறைபாடு ஆகும். இதில் ஒருவரின் நோய்த்தடுப்பாற்றல் மண்டலம் புற நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியமான திசுக்களைத் தாக்குகிறது.

  தசை அசைவுகளைக் கட்டுப்படுத்தும் நரம்புகளையும், வலி, வெப்பம், தொடு உணர்வுகளைக் கடத்தும் நரம்புகளையும் இந்நோய்த் தாக்கம் பாதிக்கிறது.

  இதன் விளைவாகத் தசை பலவீனம், உணர்வின்மை, கூச்ச உணர்வு மற்றும் சில வேளைகளில் முடக்குவாதமும் ஏற்படும்.

  சிலர் முற்றிலுமாக இந்நோயில் இருந்து குணம் பெறுவர். ஆனால் சிலருக்கோ நீடித்த நரம்புச் சிதைவு ஏற்படும்.இந் நோய் சிக்கல்களால் 3% - 5% நோயாளிகள் இறக்க நேரிடலாம். மூச்சைக் கட்டுப்படுத்தும் தசைகளில் வாதம், ரத்த தொற்று,நுரையீரலில் ரத்த உறைவு, இதயம் செயலிழப்பு ஆகியவை இந்த சிக்கல்களில் அடங்கும்.

  இந்நோய்க்கான காரணம் தெரியவில்லை.ஆனால்,இரைப்பைக் குடல் தொற்று அல்லது நுரையீரல் தொற்று போன்ற ஒரு தொற்று நோயினால் இது குறிப்பாகத் தூண்டபடுகிறது.

  ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில நாடுகள்,குடும்பங்களில் இந்நோய் ஏற்படுவதாக அறிக்கை தந்துள்ளன

  உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி 100000 பேரில் 0.4 – 4.0 பேருக்கு GBS உண்டாகிறது. இதனால் அனைத்து வயதினரும் பாதிக்கப்படலாம். பெரியவர்களுக்கு அதிலும் ஆண்களுக்குப் பரவலாகக் காணப்படுகிறது.

 2. மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ்: மருத்துவ குழுவை அனுப்பிய மத்திய அரசு

  ஜிகா வைரஸ்
  Image caption: கோப்புப்படம்

  மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல் முறையாக ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டிருக்கிறது. அங்கு புனே மாவட்டத்தில் உள்ள புரந்தர் பகுதியில் சுக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டிருந்த 50 வயது நோயாளிக்கு இந்த வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

  இதையடுத்து டெல்லி லேடி ஹாரிங்டன் மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த மகப்பேறு நிபுணர், தேசிய மலேரியா தடுப்பு நிறுவனத்தின் பூச்சியியல் நோய் ஆராய்ச்சியாளர் ஆகியோர் அடங்கிய குழுவை இந்திய சுகாதாரத்துறை புனேவுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஜிகா வைரஸ் கட்டுப்பாட்டு விதிமுறைகள் மகாராஷ்டிராவில் எந்த அளவுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளன என்பதை இந்த குழு ஆராயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இந்தியாவில் சமீபத்திய நாட்களுக்கு முன்புவரை கொரோனா வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அங்கு முதல் முறையாக ஜிகா வைரஸ் பாதிப்புடன் நோயாளி அடையாளம் கண்டிருப்பது மருத்துவத்துறையினரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த நோயாளி வசித்து வந்த கிராமத்தில் பலருக்கும் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் கண்டறியப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

  இதையடுத்து அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில், மூன்று பேருக்கு சிக்குன்குனியா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் மேலும் 25 பேருக்கு சிக்குன்குனியா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

  இந்தியாவில் இதற்கு முன்பு கேரள மாநிலத்தில் ஜிகா வைரஸ் வேகமாக பரவியது. அங்கு 63 பேருக்கு அந்த வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. காய்ச்சல், உடல் வலி, உடல் தடிப்புகள், வெண் படல அழற்சி, தசை, மூட்டு வலி, தலை வலி போன்றவை ஜிகா வைரஸ் நோக்கான பொதுவான அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் தொடர்ச்சியாக இரண்டு முதல் ஏழு நாட்களுக்கு நீடிக்கும். எனினும், இந்த வைரஸ் பரவிய பலருக்கும் உடனடியாக இந்த அறிகுறிகள் தோன்றாது என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

 3. இம்ரான் குரேஷி

  பிபிசி இந்திக்காக

  ஏடிஸ் வகை கொசு.

  கேரளாவில் 14 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்களை பரப்பும் கொசுக்களாலேயே ஜிகா வைரசும் ஏற்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 4. கொரோனா தமிழ்நாடு

  சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே ஒரே கிராமத்தைச் சேர்ந்த 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் கிராம மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். காடையாம்பட்டி ஒன்றியம் காருவள்ளி ஊராட்சி மரக்கோட்டை குக்கிராமத்தில் சுமார் 80 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

  மேலும் படிக்க
  next
 5. செளதிக் பிஸ்வாஸ்

  பிபிசி செய்தியாளர்

  கொரோனா

  ஆக்ஸ்ஃபோர்டு ஆஸ்ட்ராசெனிகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தற்காலிக தடை விதித்திருக்கிறது மத்திய அரசு. இந்தியாவிலேயே கொரோனா தடுப்பூசிக்கு அவசியம் இருப்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 6. ஜேம்ஸ் கலேகர்

  சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர்

  கொரோனா வைரஸ்

  இந்த புதிய ரக கொரோனா வைரஸ், பிரிட்டனில் ஒரு நோயாளியிடம் உருவாகி இருக்கலாம் அல்லது வெளிநாட்டில் இருந்து பிரிட்டனுக்குப் பரவி இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 7. ஜேம்ஸ் கலேகர்

  பிபிசி சுகாதாரம் மற்றும் அறிவியல் நிருபர்

  கொரோனா

  உலகில் 60 - 70 சதவிகித மக்கள், கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, போதுமான நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டவர்களாக இருப்பார்கள் என எண்ணப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 8. பிளாஸ்மா

  தற்போது உலக அளவில் இந்தியா உட்பட பல நாடுகளில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு பிளாஸ்மா தெராப்பி எனப்படும் சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அது எந்த அளவுக்கு பலன் தரும் என்பது தெளிவற்று உள்ளது.

  மேலும் படிக்க
  next
 9. கமலக்கண்ணன்

  ஏற்கனவே, புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தற்போது மேலும் ஒரு அமைச்சருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 10. அமெரிக்க ராணுவ தளத்தில் இரான் நடத்திய தாக்குதலில் 34 அமெரிக்க துருப்புகளுக்கு மூளைக்காயங்கள்

  இரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்கப் படையினருக்கு எந்தக் காயங்களும் ஏற்படவில்லை என்பதால், பதில் தாக்குதல் நடத்தப் போவதில்லை என்று அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2