சுற்றுலா

 1. ஹிமாச்சல பிரதேசத்தில் திடீர் நிலச்சரிவால் சிதறிய மலைப்பாறைகள் - 9 பேர் பலி

  ஹிமாச்சல பிரதேசம்
  Image caption: ஹிமாச்சல பிரதேசம் கினாரில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாறைகள் உடைந்து விழுந்த இணைப்புப்பாலம்.

  ஹிமாச்சல பிரதேசத்தின் கினார் மாவட்டத்தில் பட்சேரி-சங்க்லா சாலை பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில், மலையில் இருந்த பாறைகள் வெடித்துச்சிதறின.

  இதில் அந்த வழியாக சுற்றுலா பயணிகளுடன் வந்த டெம்போ மீது பாறைகள் விழுந்ததில் அதில் இருந்த 9 பயணிகள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் மூன்று பேர் காயம் அடைந்தனர்.

  இந்த நிலச்சரிவை சிலர் காணொளியாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்ததையடுத்து இந்த காட்சி வைரலாகி வருகிறது.

  அதில், மலைப்பகுதியின் மேலிருந்து திடீரென மிகப்பாறைகள் வெடிப்பது போலவும் அதைத்தொடர்ந்து அவை மிக மேகமாக சாலை நோக்கி விழுந்து ஓடுவது போலவும் காட்சிகள் இருந்தன. அந்த மலை பாதையை இணைக்கும் பாலம் மீது பாறைகள் விழுந்ததில் அது ஒரு நொடியில் அப்படியே தரைமட்டமான காட்சியும் பதிவாகியிருந்தது.

  இந்த சம்பவத்தையடுத்து காயம் அடைந்தவர்களை உடனடியாக காவல்துறையினரும் தீயணைப்பு வீரர்களும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஹிமாச்சல பிரதேச அரசு பிரதமரின் நிவாரண நிதிதியில் இருந்து ரூ. 2 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்குவதாக அறிவித்துள்ளது.

  View more on youtube
 2. சீனாவின் ஷூஸு விடுதி கட்டடம் இடிந்த சம்பவத்தில் 17 பேர் பலி

  சீனா விபத்து
  Image caption: சீனாவில் விடுதி கட்டடம் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலியானார்கள்

  சீனாவின் கிழக்கே உள்ள ஷூஸு நகரில் விடுதிக்கட்டடம் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலியாகியுள்ளனர். ஐந்து பேர் காயம் அடைந்தனர்.

  36 மணி தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு இடிபாடுகளில் புதைந்த 23 பேரில் ஆறு பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

  கட்டடத்தின் வடிவமைப்பை மாற்றியமைக்க முற்பட்ட உரிமையாளரின் திட்டத்தால் அது பலவீனம் அடைந்து இடிந்து விழுந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக குளோபல் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில்தான் அந்த கட்டடம் புதுப்பிக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளதாக கூறுகிறது அந்த நாளிதழ் செய்தி.

  தொடக்கத்தில் அந்த கட்டடம் மூன்று மாடிகள் கொண்டதாக இருந்தது. ஆனால், பின்னர் அதன் மேல் தளம் ஒவ்வொன்றாக கூட்டப்பட்டதாக அருகே வசிக்கும் குடியிருப்புவாசி ரெட் ஸ்டார் நியூஸ் என்ற ஊடகத்திடம் தெரிவித்தார்.

  இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஜியாங்ஸு மாகாண அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  ஷுஸுவில் உள்ளது சிஜி கையுவான் என்ற விடுதி. இந்த கட்டடம் திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 7 மணியளவில் இடிந்து விழுந்தது. அங்கு மீட்புப்பணியில் 600க்கும் அதிகமானோர் ஈடுபட்டிருக்கிறார்கள். 54 அறைகள் கொண்ட விடுதியில் 18 பேர் இருந்ததாகவும் பிறகு அங்கு ஆவணத்தில் பதிவு செய்யப்படாத மேலும் சில விருந்தினர்கள் இருந்ததும் தெரிய வந்தது.

  இவர்களில் உயிருடன் மீட்கப்பட்ட ஐந்து பேரில் ஒருவரின் நிலை மோசமாக உள்ளது.

  சீனாவில் பலவீனமான கட்டுமானத்தால் இவ்வளவு பெரிய உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது இது இரண்டாவது முறை. கடந்த ஆண்டு ஃபுஜியான் மாகாணத்தில் விடுதி கட்டடம் இடிந்து விழுந்ததில் 29 பேர் பலியானார்கள். அந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், அந்த கட்டடம் வலுவிழந்தே சம்பவத்துக்கு காரணம் என்று புலனாய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

  சீனா விபத்து
  சீனா விபத்து
 3. ஏ.எம் சுதாகர்

  பிபிசி தமிழுக்காக

  சுசீலா

  கடந்த ஆண்டு கோடை விழாவை நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் உள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு கோடை விழா நடத்த முடியாமல் நின்றுபோனது . இந்த ஆண்டாவது விழா நடக்குமா என்ற எதிர்பார்ப்பில் சுற்றுலா பயணிகள் ஏற்காடு வாழ் தொழிலாளர்களும் இருந்தனர்.

  மேலும் படிக்க
  next
 4. Video content

  Video caption: பயணிகள் & வாடிக்கையாளர்களின்றி வெறிச்சோடிய தாய்லாந்து - பயணிகளுக்காக காத்திருக்கும் மக்கள்

  பலரின் கனவு சுற்றுலா தளமான தாய்லாந்து இன்று வெறிச்சோடி காணப்படுகிறது. சுற்றுலா துறையைச் சார்ந்து பிழைப்பு நடத்தி வந்த பலரும் இன்று பொருளாதார ரீதியாக தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 5. சமோவா

  கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத பத்து நாடுகள் வரிசையில் சமோவா எட்டாவது இடத்தில் உள்ளது.

  மேலும் படிக்க
  next
 6. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  ஆக்சிஜன் பேருந்து

  அரசு மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் வாயிலில் காத்திருக்கும் கொரோனா நோயாளிகளின் வசதிக்காக `ஆக்சிஜன் பஸ்' என்ற திட்டத்தை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் விஜய கார்த்திகேயன் தொடங்கி வைத்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 7. ராணுவம்

  மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் போக்குவரத்துக்கள் நேற்றைய தினம் முதல் ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையிலேயே, நாளை முதல் 17ம் தேதி அதிகாலை வரை முழுப் பயணத் தடைக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 8. டெஸ்லா

  காவல்துறைக்கு கிடைத்த ஆதாரங்களின்படி, மரத்தின் மீது கார் மோதியபோது அதில் ஓட்டுநர் இருக்கையில் யாரும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது என்று ஹாரிஸ் கவுன்டி காவலர் மார்க் ஹெர்மன் கூறினார். இந்த வழக்கு தொடர்து விசாரணையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 9. கோவை ஸ்மார்ட் சிட்டி

  இன்று அதிகாலை 3 மணி அளவில் சுவர் இடிந்து விழுந்ததாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். சுவரின் அருகே குடியிருப்புகள் இல்லாததால் இச்சம்பவத்தில் உயிர் இழப்பு எதுவும் ஏற்படவில்லை.

  மேலும் படிக்க
  next
 10. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  பாம்பன் பாலம்

  பாம்பன் கடலின் மீது இருவழிப் பாதையைக் கொண்ட ரயில் பாலம் அமைப்பது என மத்திய அரசு முடிவெடுத்தது. இதற்கான செலவு 250 கோடி ரூபாய் என மதிப்பீடு செய்யப்பட்டது. தற்போது இதன் திட்ட மதிப்பீடு 450 கோடி ரூபாயாக அதிகரித்துவிட்டது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 6