பயணம்

 1. பூடான்மகிழ்ச்சி

  ஏதோவொரு காலத்தில் எதேச்சையாக கண்டறியப்பட்ட தொல்லியல் தடங்கள் அல்லது கண்டுபிடிப்புகள், கட்டுமானப் பணிகளின்போது கண்டெடுக்கப்பட்ட அகழ்வுப் பொருட்கள் மூலமே பூடானிய வரலாறுக்கு அவ்வப்போது சில கண்டுபிடிப்பாளர்கள் உயிர் கொடுத்தார்கள்.

  மேலும் படிக்க
  next
 2. சல்மான் ராவி

  பிபிசி செய்தியாளர்

  ஏர் இந்தியா டாடா

  பெரும் நஷ்டத்தில் இருக்கும் ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் வாங்கியுள்ளது. டாடா இதை ஏன் செய்தார்? அத்தகைய நிறுவனத்தை நடத்துவதில் என்ன சவாலாக இருக்கும், இதில் டாடாவுக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது?

  மேலும் படிக்க
  next
 3. Indian Railways bbc news

  எச்சில் துப்புவதற்காக சட்டைப் பைக்குள் வைத்துக் கொள்ளும் அளவு சிறிய, மக்கக்கூடிய பை ஒன்றை இந்திய ரயில்வே பயணிகளின் பயன்பாட்டுக்கு வழங்க உள்ளது.

  மேலும் படிக்க
  next
 4. இந்தியர்களுக்கு பிரிட்டனில் தளர்வு

  பிரிட்டனுக்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களுக்கான கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு தளர்த்தியுள்ளது.

  இதன்படி இரண்டு டோஸ் தடுப்பூசியும் பெற்ற இந்தியர்கள் இனிமேல் பிரிட்டன் சென்றால் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை. கட்டாய கொரோனா பரிசோதனையும் இனி தேவையில்லை.

  இந்த நடைமுறை அக்டோபர் 11ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

 5. A Chinese Girl - Guangdong 1869–70

  முதலில் சிங்கப்பூர் சென்ற ஜான் தாம்சன் சீனாவின் பழமையான நாகரிகம், அப்பொழுது சயாம் என்று அழைக்கப்பட்ட தாய்லாந்து, கம்போடியா ஆகிய பகுதிகளுக்கு மிகவும் விரிவாகப் பயணம் மேற்கொண்டார்.

  மேலும் படிக்க
  next
 6. ஸ்ரீநிவாஸ் லக்கோஜு

  பிபிசி தெலுங்கு சேவைக்காக

  குலாப் புயல்

  வங்காள விரிகுடாவில் குலாப் சூறாவளியின் தாக்கத்தால் ஆந்திரா மற்றும் ஒடிசாவின் கடலோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. சமீபத்திய சூறாவளி கடந்த நான்கு மாதங்களாக வீசுகிறது.

  மேலும் படிக்க
  next
 7. சல்மான் ரிஸ்வி

  பிபிசி இந்திக்காக

  நரேந்திர மோதி

  அமெரிக்கச் செய்தித்தாள்களில் மோதியின் அமெரிக்க வருகை பற்றி எந்தச் சிறப்பு குறிப்பும் இல்லை. சில செய்தித்தாள்களில், ஜனநாயக மதிப்புகள் குறித்து மோதிக்கு வழங்கப்பட்ட அறிவுரைகள் என்று தலைப்பிடப்பட்டு செய்திகள் வெளியாகியிருந்தன.

  மேலும் படிக்க
  next
 8. Video content

  Video caption: ஆப்கானிஸ்தான் சந்தைகளில் பொருட்களை வாங்க குவியும் மக்கள் - என்ன காரணம்?

  வெளிநாட்டுப் படைகள் முற்றிலுமாக வெளியேறிவிட்ட பிறகு ஆப்கானிஸ்தானில் எஞ்சியிருக்கும் மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது?

 9. செளதி செல்ல புதிய பயண விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

  செளதி அரேபியா
  Image caption: செளதி அரசு அறிவித்துள்ள புதிய பயண விதிகள் செட்பம்பர் 23ஆம் தேதி அமலுக்கு வருகிறது.

  செளதி அரேபியா நாட்டுக்குச் செல்ல வேண்டுமானால், சில பயண விதிகளையும் நிபந்தனைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அந்நாட்டின் விமான போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

  இது தொடர்பாக செளதி ஊடக முகமை (எஸ்பிஏ) வெளியிட்டுள்ள செய்தியின்படி செளதி அரேபியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கான புதிய பயண விதிகள் செப்டம்பர் 23ஆம் தேதி அமலுக்கு வருகிறது.

  இதன்படி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் அல்லது உலக சுகாதார அமைப்பு அல்லது செளதி அரேபிய அரசால் அங்கீகரிக்கப்படாத தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் பயணத்துக்கு 72 மணி நேரத்துக்குள்ளாக மேற்கொண்ட கொரோனா பரிசோதனை முடிவில் நெகட்டிவ் என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

  செளதிக்கு வந்தவர்கள் கட்டாயமாக ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். ஐந்தாவது நாளில் அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்படும்.

  முடிவு நெகட்டிவ் என வந்தால் மட்டுமே அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர். அதுவரை அவர்கள் சுய தனிமையிலேயே இருக்க வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  View more on twitter
 10. டெல்லியில் 11 ஆண்டுகளில் இல்லாத கன மழை: தாழ்வான சாலைகளில் வெள்ளம் புகுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

  View more on twitter

  இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரே நாளில் கொட்டித்தீர்த்த கன மழையால் பல இடங்களில் தாழ்வான சாலைகளில் வெள்ளம் ஓடுகிறது.

  இதனால், முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நரேத்தில் 112.1 மி.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது.

  இதற்கு முன்பு ஒரே நாளில் இந்த அளவு மழை 2010ஆம் ஆண்டு செப்ாடம்பர் 20ஆம் தேதி பெய்தது. அப்போது மழை நீர் 110மி.மீ அளவுக்கு பதிவானதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

  டெல்லியில் நேற்று முதல் விட்டு பெய்து வந்த மழை, இன்று காலையில் இடைவிடாது பொழிந்தது. இந்த மழை டெல்லி, தேசிய தலைநகர் வலய பகுதியில் தொடரும் என்றும் சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

  View more on twitter
பக்கம் 1 இல் 5