இரண்டாம் எலிசபெத் ராணி

 1. அரசியை கொல்லும் முயற்சியுடன் வின்சர் கோட்டையில் 19 வயது சந்தேக நபர் - காவல்துறை விசாரணை

  காவல்துறை
  Image caption: வின்சர் கோட்டை

  கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு வின்சர் கோட்டையில் அம்பு, வில் போன்ற ஆயுதத்துடன் காணொளி பேசிய நபரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

  இந்த காணொளியை தி சன் நாளிதழ் கண்டறிந்துள்ளது, அதில் ஹூட் அணிந்த ஒரு நபர் முகமூடி அணிந்து கையில் குறுக்கு வில் வைத்திருந்தார். அந்த காணொளியில் அரசியைக் கொன்று பழி வாங்குவதே தனது எண்ணம் என்று கேமிராவை பார்த்து பேசுகிறார்.

  செளத்தாம்ப்டனைச் சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

  "அந்த நபர் பேசிய காணொளி தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம்" என்று காவல்துறையினர் கூறினர். எனினும், காணொளியில் காணப்பட்ட நபரின் அடையாளம் குறித்து கருத்து தெரிவிக்க காவல்துறை செய்தித்தொடர்பாளர் மறுத்து விட்டார்.

  பக்கிங்ஹாம் அரண்மனையும் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

  19 வயதுடைய சந்தேக நபர் மீது மனநல சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசி இரண்டாம் எலிசபெத் கிறிஸ்துமஸுக்காக வின்சர் கோட்டையில் இருந்தார். அங்கு அவர் கிறிஸ்துமஸ் நாளில் மதிய உணவில் பங்கேற்றார்.

 2. ஜி7 மாநாட்டில் உலக நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்து முக்கிய பேச்சு

  பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் கனடா நாட்டுத் தலைவர்கள் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர், பிரிட்டனில் நடைபெறும் இந்த மூன்று நாள் சந்திப்பில் கலந்து கொண்டனர். கொரோனா தொற்றுக்கு பிறகு உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் தலைவர்கள் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் முதல் ஜி7 மாநாடு இது.

  மேலும் படிக்க
  next
 3. டெல்லியில் கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு - மெட்ரோ சேவைகள், கடைகள் திறப்பு

  METRO RAIL

  இந்திய தலைநகர் டெல்லியில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டுள்ளதன் அடையாளமாக மெட்ரோ ரயில் சேவை பயணிகள் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.

  டெல்லி மெட்ரோ ரயில் சேவை கடந்த மே 10ஆம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இடைநிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருவதையடுத்து இன்று முதல் 50 சதவீத பயணிகளுடனும், 10 முதல் 15 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

  கடைகள் திறக்கப்பட அனுமதிக்கப்பட்டாலும், அவற்றின் கதவு எண், ஒற்றை இலக்கத்தில் முடிந்தால் ஒற்றை இலக்க தேதிகளிலும் இரட்டை இலக்கத்தில் முடிந்தால், இரட்டை இலக்க தேதியிலும் திறக்க நகர அரசு அனுமதி வழங்கியுள்ளது.

  டெல்லியில் சில தொழில் நடவடிக்கைகளை தொடங்க அனுமதி வழங்கியிருந்தாலும், அனைவரும் கொரோனா வழிகாட்டுதல்களை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.

  டெல்லியில் கொரோனா பாதிப்புகளின் அன்றாட எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆயிரத்தைக் கடந்த வேளையில், ஞாயிற்றுக்கிழமை புதிய பாதிப்பு எண்ணிக்கை 381 ஆக குறைந்திருக்கிறது. தொடர்ச்சியாக பாதிப்பு அளவு சரிந்து வருவதையடுத்து, கொரோனா கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அரசு வழங்கியிருக்கிறது.

  View more on twitter
  View more on twitter
 4. இளவரசர் ஃபிலிப்

  இளவரசர் ஃபிலிப்பின் இறுதி நிகழ்வில் பங்கேற்ற அரச குடும்பத்து உறுப்பினர்கள், அவரது ஆழமான கடமை உணர்வையும், வாழ்கால சேவையையும் நினைவுகூர்ந்தனர்.

  மேலும் படிக்க
  next
 5. கோமகன் ஃபிலிப்

  மாட்சிமை பொருந்திய இளவரசரின் இறுதிச் சடங்கில் 730-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் பங்கேற்கவிருக்கிறார்கள். ஆனால் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளின் படி புனித ஜார்ஜ் தேவாலயத்தில் இறுதி அஞ்சலி செலுத்த 30 பேருக்கு மட்டுமே அனுமதி உள்ளது.

  மேலும் படிக்க
  next
 6. சாரா கேம்பெல்

  அரசக் குடும்ப செய்தியாளர்

  இளவரசர் ஃபிலிப் மற்றும் ராணி இரண்டாம் எலிசபெத்

  "இந்த உலகத்தில் இளவரசர் ஃபிலிப் மட்டுமே அரசியை சக மனிதராக நடத்தக்கூடிய ஒரே மனிதர். அவரால் மட்டுமே அது முடியும்," என தனிச் செயலர் ஒருமுறை தெரிவித்திருந்தார். இவர்களின் திருமணம் அன்பால் ஆனது. அவர்கள் ஒருவரை ஒருவர் தேர்வு செய்திருந்தனர்.

  மேலும் படிக்க
  next
 7. Prince Philip's funeral

  அரச குடும்பத்து இறுதி நிகழ்ச்சிகள் வின்சர் கோட்டையில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில், வரும் ஏப்ரல் 17-ம் தேதி சனிக்கிழமை, பிரிட்டன் நேரப்படி மாலை 3 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த இறுதி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படவிருக்கின்றன.

  மேலும் படிக்க
  next
 8. Video content

  Video caption: ராணி இரண்டாம் எலிசபெத் இளவரசர் ஃபிலிப்பை கரம் பிடித்த தருணம்

  ராணி இரண்டாம் எலிசபெத் இளவரசர் ஃபிலிப்பை கரம் பிடித்த தருணம்

 9. Video content

  Video caption: இளவரசர் ஃபிலிப் 99 வயதில் காலமானார்: பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு

  இளவரசர் ஃபிலிப் 99 வயதில் காலமானார்: பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு

 10. எடின்பரோ கோமகன்

  இளவரசர் ஃபிலிப், எடின்பரோ கோமகன், அரசி மீதான நிலையான மற்றும் உறுதியான ஆதரவால் அனைவரது விரிவான மரியாதையை வென்றார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2