கர்நாடகா

 1. கர்நாடக சுகாதார அமைச்சர் தகவல்

  பெங்களூரில் கொரோனாவின் ஒமிக்ரான் திரிபால், கோவிட் தொற்று உண்டாகியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவர் 66 வயதாகும் தென்னாப்பிரிக்க நாட்டவர் என்றும் இன்னொருவர் 46 வயதாகும் மருத்துவர் என்றும் கர்நாடக சுகாதார அமைச்சர் டாக்டர் கே.சுதாகர் தெரிவித்துள்ளார் என்று ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

  தென்னாபிரிக்க நாட்டவர் அவரது சொந்த நாட்டுக்கு திரும்பி விட்டார் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

  View more on twitter
 2. இம்ரான் குரேஷி

  பிபிசி நியூசுக்காக

  முனவர் ஃபரூக்கி

  "ஆட்சேபகரமான நகைச்சுவையை" நிகழ்த்தலாம் என்ற அச்சத்தின் காரணமாக முனவர் ஃபரூக்கி கடந்த ஜனவரியில் மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் கைது செய்யப்பட்டார். நிகழ்த்தாத நகைச்சுவைக்காக அவர் கைது செய்யப்பட்ட சம்பவமாக இது குறிப்பிடப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 3. கொரோனா வைரஸ் கோப்புப் படம்

  கொரோனா அபாயமுள்ள 10 நாடுகளிலிருந்து பெங்களூருக்கு 584 பேர் வந்துள்ளனர். அதில் தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய இரு இந்தியர்கள் முறையே நவம்பர் 11 மற்றும் நவம்பர் 20 தேதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 4. இம்ரான் குரேஷி

  பிபிசி இந்தி

  பாலியல் துன்புறுத்தல் கோப்புப் படம்

  தந்தை தாக்கப்பட்ட பிறகு, தனது இளைய சகோதரியை எழுப்பி உதவி கேட்டு அலறியதாக கூறப்படுகிறது. யாரோ சிலர் தன் தந்தையை தாக்கிவிட்டதாக அக்கம்பக்கத்தில் உள்ளோரிடம் அப்பெண் கூறியதாவும் சொல்லப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 5. இம்ரான் குரேஷி

  பிபிசி இந்திக்காக

  பசவராஜ் பொம்மை, கர்நாடக முதல்வர்

  "ஸ்ரீகிருஷ்ணா, அவரது பணக்கார மற்றும் அரசியல் செல்வாக்கு மிக்க நண்பர்களாலும், தலைவர்களாலும் பயன்படுத்தப்பட்ட ஒரு கருவி தான். நெருப்பின்றி புகையாது என்பதை அனைவரும் அறிவர். இந்த பிரச்சனைத் தீ எவ்வளவு தூரம் பரவும் என்பது யாருக்கும் தெரியாது"

  மேலும் படிக்க
  next
 6. இம்ரான் குரேஷி

  பெங்களூரில் இருந்து பிபிசி இந்தி சேவைக்காக

  பிரேமே கர்நாடகா விவசாயி

  பிரேமா படித்திருந்தால் சமூக ஊடகங்களில் செல்வாக்கு மிக்கவராக இருந்திருப்பார். இவரது அடையாளமே ஒரு 'செல்வாக்காக' இருந்திருக்கும். ஒரு காலத்தில் கூலி வேலை செய்த பிரேமா இன்று ஒரு வெற்றிகரமான விவசாயி.

  மேலும் படிக்க
  next
 7. Video content

  Video caption: புனித் ராஜ்குமார் மரணமும் உடற்பயிற்சி சர்ச்சையும்

  நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் மரணமடைந்ததைத் தொடர்ந்து அதிக உடற்பயிற்சி செய்தால் ஆபத்து ஏற்படக்கூடும் என்ற ஒரு கருத்து உலவி வருகிறது.

 8. புனித் ராஜ்குமார் உடல் அரசு மரியாதையோடு அடக்கம்

  மாரடைப்பால் இறந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல், அரசு மரியாதையோடு பெங்களூருவில் உள்ள கந்தீரவா ஸ்டூடியோவில் இன்று (அக்டோபர் 31, ஞாயிற்றுக்கிழமை) காலை அடக்கம் செய்யப்பட்டது.

  அவரது தந்தை மற்றும் கன்னட திரையுலகின் முக்கிய நடிகர் டாக்டர் ராஜ்குமார் மற்றும் அவரது தாய் பர்வதம்மா ராஜ்குமார் ஆகியோரது உடல்களும் இதே கந்தீரவா ஸ்டூடியோவில் தான் அடக்கம் செய்யப்பட்டன.

  கர்நாடக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சித்தராமைய்யா, முன்னாள் முதல்வர் பி எஸ் எடியூரப்பா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமார், பல்வேறு கன்னட திரையுலக பிரபலங்கள் இறுதிச் சடங்கு நிகழ்வில் கலந்து கொண்டனர்.

  View more on twitter
 9. கர்நாடக பள்ளியில் 32 மாணவர்களுக்கு கோவிட்

  கர்நாடக மாநிலம் கொடகு மாவட்டத்தை சேர்ந்த கலிபீடு என்ற இடத்தில் உள்ள ஒரே பள்ளியை சேர்ந்த 32 மாணவர்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

  அந்த பள்ளியை மாவட்ட ஆட்சியர் பி.சி.சதீஷ் பார்வையிட்டார்.

  தொற்று கண்டறியப்பட்ட எல்லா மாணவர்களுக்கும் அதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை. எனினும் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள் என்று ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது.

  View more on twitter
 10. கொலை - மாதிரி கோப்புப் படம்

  பெண், விஜயபுரா காவல் உதவி மையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் போலீஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வரவில்லை என கூறப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 12