ஜம்மு

 1. ரியாஸ் மஸ்ரூர்

  பிபிசி நியூஸ், ஸ்ரீநகர்

  காஷ்மீர்

  ஷேர் -இ - காஷ்மீர் மருத்துவக் கல்லூரி மற்றும் ஸ்ரீநகர் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுக்கு எதிராக புதிதாகப் பிறப்பிக்கப்பட்ட தீவிரவாத எதிர்ப்புச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் ஆகிவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 2. மஜித் ஜஹாங்கீர்

  ஸ்ரீநகரிலிருந்து, பிபிசி இந்திக்காக

  अमित शाह

  ஜம்மு-காஷ்மீரில் அமைதியான சூழல் இல்லாததால் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்தப் பயணத்தின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளதாக, காஷ்மீர் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

  மேலும் படிக்க
  next
 3. பிகாரிலிருந்து சீட்டூ திவாரி, உத்தர பிரதேசத்திலிருந்து ஷஹ்பாஸ் அன்வர்

  பிபிசி இந்திக்காக

  காஷ்மீர் வன்முறை குடியேறிகள் அச்சம்

  "எந்த இடத்திலும் பலவீனமான நபர் ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளியாகத் தான் இருக்க முடியும். ஒரு உள்ளூர்வாசி கொல்லப்பட்டால் அச்செய்து உள்ளூர்ச் செய்தியாக நின்று விடும். ஆனால் வேற்று மாநிலத்தவர் கொல்லப்பட்டால், அச்செய்தி தொலை தூரம் செல்லும்," என்கிறார் பிகாரின் டாடா சமூக அறிவியல் நிறுவன இயக்குநர் புஷ்பேந்திரா.

  மேலும் படிக்க
  next
 4. காஷ்மீரில் இரு வேறு இடங்களில் வெளியூர் தொழிலாளர்களை சுட்ட ஆயுததாரிகள் - ஒருவர் பலி

  ஸ்ரீநகர் மற்று புல்வாமாவில் இரண்டு பேர் மீது ஆயுததாரிகள் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் காயம் அடைந்துள்ளதாக காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.

  இருவரும் காஷ்மீருக்கு வெளியே உள்ள மாநிலங்களில் வசிப்பவர்கள். ஸ்ரீநகரில் சுடப்பட்ட நபரின் பெயர் அரவிந்த் குமார் சாஹ் என்றும் அவர் பிகாரின் பங்கா பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது. மற்றொருவர் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஜாகிர் அஹமது என்று தெரிய வந்துள்ளது. காயம் அடைந்துள்ள ஜாகிர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 5. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் நகரில் நடந்த துப்பாக்கி சண்டையில் இந்திய ராணுவ வீரர்கள் ஐவர் பலி

  மொஹித் கந்தாரி ஜம்முவில் இருந்து, பிபிசி இந்திக்காக

  இந்திய ராணுவம்

  ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு ராணுவ அதிகாரி உள்பட ஐந்து வீரர்கள் பலியானார்கள்.

  எல்லை கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள தேரா கி கலி என்ற பகுதியில் ஆயுததாரிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது.

  தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடும் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

  இது குறித்து பிபிசி இந்தியிடம் பேசிய ஜம்முவில் உள்ள இந்திய ராணுவ செய்தித்தொடர்பாளர் லெப்டிணன்ட் கர்னல் தேவ்ந்திர ஆனந்த், "வெகு தூரத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கிடைத்த தகவலின்படி ஒரு ஜேசிஓ அதிகாரி உள்பட ஐந்து வீரர்கள் பூஞ்ச் பகுதியில் திங்கட்கிழமை காலையில் தீவிரவாதிகளை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டபோது தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பலியாகியுள்ளனர். அங்கு தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது," என்றார்.

  தீவிரவாதிகள் இருப்பதாக கிடைத்த நம்பகமான உளவுத்தகவல் அடிப்படையில் சூரன்கோட் தாலுகாவுக்குக் கீழ் உள்ள தேரா கி கலி என்ற பகுதியில் இந்த துப்பாக்கி சண்டை நடந்துள்ளது.

  தாக்குதல் நடவடிக்கையில் படுகாயம் அடைந்த வீரர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனாலும், அவர்களை காப்பாற்ற முடியவில்லை என்று இந்திய ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

  உயிரிழந்தவர்களில் ஒருவரான நாயக் சுபேதார் ஜஸ்விந்தர் சிங், நாயக் மந்தீப் சிங், சிப்பாய் கஜன் சிங் ஆகியோர் பஞ்சாபின் கபூர்தலாவைச் சேர்ந்தவர்கள். சிப்பாய் சரஜ் சிங் உத்தர பிரதேசத்தின் ஷாஹ்ரன்பூரைச் சேர்ந்தவர். வைசாக், கேரளாவின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

  View more on twitter
 6. ராகவேந்திர ராவ்

  பிபிசி செய்தியாளர்

  ட்ரோன் தாக்குதல்

  பாகிஸ்தான் எல்லையில் ஸ்மார்ட் ஃபென்சிங் பற்றி இந்தியா பல ஆண்டுகளாக பேசி வருகிறது. ட்ரோன்களைப் பயன்படுத்துவதன் மூலம் ஸ்மார்ட் ஃபென்சிங்கை மேலும் மேம்படுத்த முடியும்

  மேலும் படிக்க
  next
 7. ஜம்மு-காஷ்மீரில் தேர்தலுக்கு முன்னுரிமை: ஆலோசனைக் கூட்டத்தில் மோதி

  மோதி

  ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரேதசத் தலைவர்களுடன் பிரதமர் மோதி நடத்திய ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்தது. மூன்றரை மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஜனநாயக நடைமுறைகள் தொடர்பாக வலியுறுத்தப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

  பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட ஜம்மு-காஷ்மீரின் 14 முக்கியத் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

  கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஒமர் அப்துல்லா, "ஜம்மு-காஷ்மீரின் மறுவரையறை நடைமுறைகளில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என பிரதமர் கூறினார்" என்று தெரிவித்தார்.

  ஜம்மு காஷ்மீரில் கூடிய விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என பிதமர் கூறியதாகவும், ஆனால் முதலில் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கொடுத்துவிட்டு தேர்தலை நடத்தலாம் என குலாம் நபி ஆசாத் கூறியதாகவும் ஒமர் அப்துல்லா தெரிவித்தார்.

  இந்தக் கூட்டத்தில் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது குறித்து விவாதிக்கப்படவில்லை என முன்னாள் துணை முதல்வர் முஸாபர் பெய்க் கூறினார்.

  காங்கிரஸ் சார்பில் 5 கோரிக்கைகள் வைக்கப்பட்டதாகத் தெரிவித்த குலாம் நபி ஆசாத், "மாநில அந்தஸ்து வழங்குவது, தேர்தல் நடத்துவது, அரசியல் கைதிகளை விடுவிப்பது, பண்டிட்களை திரும்ப அழைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தோம்" என்று கூறினார்.

  கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. தற்போது அங்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றிருக்கிறது.

 8. கருணாநிதி

  தமிழ்நாடு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்த நாளை ஒட்டி தமிழ்நாடு 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

  Follow
  next
 9. காஷ்மீரில் கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன?

  மாஜித் ஜஹாங்கிர், பிபிசி இந்திக்காக

  காஷ்மீர்

  செவ்வாயன்று, காஷ்மீரில் 3,164 கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன. இது கொரோனாவின் இரண்டாவது அலையில் இதுவரை பதிவானதில் மிக அதிக எண்ணிக்கையாகும்.

  காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டும் 2,134 தொற்றுகள் பதிவாகியுள்ளன. 25 கொரோனா நோயாளிகள் செவ்வாய்க்கிழமை இறந்துள்ளனர். இறந்தவர்களில் 10 பேர் காஷ்மீருடன் தொடர்புடையவர்கள்.

  கடந்த ஒரு மாதத்தில், ஜம்மு-காஷ்மீரில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

  ஸ்ரீநகர் மாவட்டத்தில், கொரோனா பரவுவதைத் தடுக்க நிர்வாகம், செவ்வாய்கிழமை அன்று, 144வது பிரிவின் கீழ் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

  காஷ்மீரில் மருத்துவர்களின் அமைப்பான, காஷ்மீர் மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் நிசார்-உல்ஹசன், காஷ்மீரில்அதிகரித்துவரும் கொரோனா இறப்புகள்,உண்மையில் மக்கள் மருத்துவமனைக்கு வருவதை தாமதப்படுத்தியதன் விளைவாகும் என்று கூறியுள்ளார்.

  " மிகவும் நோய்வாய்ப்படும்போதுதான் அவர்கள் மருத்துவமனைக்கு வருகிறார்கள்," என்று அவர் தெரிவித்தார்.

  "காஷ்மீரில் உள்ள மருத்துவமனைகளில் ஐ.சி.யு படுக்கைகளின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு சரியான நேரத்தில் சரியான சிகிச்சை கிடைப்பதில்லை. இதனால் நோயால் ஏற்படும் பிரச்சனைகள் அதிகரிக்கின்றன,” என்று டாக்டர் நிசார் விளக்குகிறார்.

  கடந்த சில நாட்களாக காஷ்மீரில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது.

  ஜம்மு காஷ்மீர் முழுவதும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு நேரம் மாலை எட்டு மணி முதல் காலை ஆறு மணிவரை இருப்பினும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜம்மு-காஷ்மீரில், நாள் முழுவதும் கொரோனா ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

 10. ரியாஸ் மஸ்ரூர்

  பிபிசி, ஸ்ரீநகர்

  முஃப்தி

  பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசின் நடவடிக்கை, இரண்டு யூனியன் பிரதேசத்தை உருவாக்கி சாதாரண காஷ்மீரிகளை உளவியல் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது என்று மெஹ்பூபா குறிப்பிட்டார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2