மகாராஷ்டிரா

 1. தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்ததாக இருவர் கைது

  தங்கள் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்துவந்ததாக குற்றம்சாட்டி இரண்டு பேரை கைது செய்துள்ளது மகாராஷ்டிர மாநிலத்தின் புனே நகர போதைத் தடுப்பு போலீஸ் பிரிவு.

  அவர்களிடம் இருந்து 250 கஞ்சா செடிகளையும் போதை தடுப்பு போலீசார் கைது செய்தனர்.

  View more on twitter
 2. ஆர்யன் கான் ஜாமீன் மனு மீது அக்டோபர் 26இல் மும்பை உயர் நீதிமன்றம் விசாரணை

  ஆர்யன் கான்
  Image caption: மும்பை தனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்ட ஆர்யன் கான் (கோப்புப்படம்)

  போதைப்பொருள் பயன்பாடு சம்பவத்தில் தொடர்புடையதாக தேசிய போதைப்பொருள் தடுப்புத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் மனு அக்டோபர் 26ஆம் தேதி விசாரிப்படவுள்ளது.

  முன்னதாக, ஆர்யன் கான் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை மும்பை போதைப்பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் தனி நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

  இந்த வழக்கில் ஆர்யன் கானுடன் சேர்த்து அர்பாஸ் மெர்ச்சன்ட், முன்முன் தமேச்சா ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டு அவர்களும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

  இதைத்தொடர்ந்து மும்பை உயர் நீதிமன்றத்தில் ஆர்யன் கான் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

  இதையடுத்து அவரது மனு அக்டோபர் 26ஆம் தேதி விசாரிக்கப்படும் நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் கூறியுள்ளதாக ஆர்யன் கானின் வழக்கறிஞர் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் கூறியிருக்கிறார்.

  கடந்த அக்டோபர் 2-3ஆம் தேதி மும்பை கடல் பகுதியில் சொகுசு கப்பல் ஒன்றில் நடந்த கேளிக்கை நிகழ்ச்சியில் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக போதை பொருள் தடுப்புத் துறைக்கு தகவல் வந்தது.

  இதையடுத்து அதன் தனிப்படை அந்த கப்பலில் சோதனை செய்தபோது, ஆர்யன் கான் மற்றும் இருவரை போதைப்பொருள் வாங்கியது மற்றும் பயன்படுத்தியதாகக் கூறி அதிகாரிகள் கைது செய்தனர்.

  இந்த வழக்கில் நீதிமன்ற அனுமதியுடன் ஆர்யன் கான் என்சிபி காவலில் வைத்து விசாரிக்கப்பட்ட பிறகு அவரை 14 நீதிமன்ற காவலில் வைத்திருக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் தாக்கல் செய்த மனுவையும் விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 3. ஆர்யன் கான் உடன் செல்ஃபி எடுத்த நபருக்கு லுக்-அவுட் நோட்டீஸ்

  ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் மும்பையில் போதைப்பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டபோது அவருடன் செல்ஃபி எடுத்து வைரலான நபரான கே.பி. கோஸ்வாமிக்கு எதிராக புனே மாநகர காவல்துறை லுக்-அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.

  2018இல் பதிவான ஒரு பண மோசடி வழக்கில் இது வெளியிடப்பட்டுள்ளது என்கிறது புனே காவல்துறை.

  கே.பி. கோஸ்வாமி ஆர்யன் கான் உள்ளிட்டவர்கள் கைதான வழக்கில் சாட்சி என்று நார்கோடிக்ஸ் கன்ட்ரோல் பீரோ தெரிவித்திருந்தது.

  கே.பி. கோஸ்வாமி ஆர்யன் கானுடன் எடுத்த செல்ஃபி
  Image caption: கே.பி. கோஸ்வாமி ஆர்யன் கானுடன் எடுத்த செல்ஃபி
 4. இக்பால் பர்வேஸ்

  திரைப்பட செய்தியாளர், பிபிசி இந்திக்காக, மும்பை

  ஆர்யன் கான்

  பல பாலிவுட் நட்சத்திரங்கள் மீது போதை மருந்து உட்கொண்டதாக முந்தைய காலங்களிலும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சிலர் அதை ஒப்புக்கொண்டனர். பலர் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். பாலிவுட்டில் போதைப்பொருள் கலாசாரம் எப்படி உள்ளது?

  மேலும் படிக்க
  next
 5. தன் மகன் ஆர்யன் கானுடன் ஷாருக் கான்

  பிரபல இந்தி நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கானிடம் அரசின் போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பான நர்கோடிக் கன்ட்ரோல் பீரோ விசாரணை நடத்தி வருகிறது.

  மேலும் படிக்க
  next
 6. அமிர்தசரஸ் சாகிப், பஞ்சாப்

  நாட்டிலுள்ள சுமார் 10கோடி மக்கள் இந்த குறைந்தபட்ச 15 இடங்களுக்கான பயணத்தை மேற்கொண்டாலும், அது 150கோடி பயணங்களாகும்!

  மேலும் படிக்க
  next
 7. Video content

  Video caption: இறந்த மனைவியை தோளில் சுமந்து செல்ல வேண்டிய அவலம்

  மகாராஷ்டிர மாநிலம் நந்தர்பரில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததல், கணவர் தனது தோளில் சுமந்தபடியே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போது வழியிலேயே மனைவி இறந்துவிட்டார்.

 8. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  ரானே

  மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்த மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை மகாராஷ்டிர மாநில அரசு கைது செய்துள்ளது. மத்திய அமைச்சர்களை மாநில அரசுகள் கைது செய்தால் என்ன நடக்கும்?

  மேலும் படிக்க
  next
 9. மத்திய அமைச்சர் நாராயண் ரானே கைது - மகாராஷ்டிரா காவல்துறை நடவடிக்கை

  மகாராஷ்டிரா கைது
  Image caption: நாராயண் ரானே, மத்திய அமைச்சர்

  மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை அறைந்திருப்பேன் என்று கூறிய மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை, முதல்வரை அவதூறாக பேசியதாகக் கூறி அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  இந்த விவகாரம் தொடர்பாக ரானே மீது புனேவில் ஒரு புகாரும், மஹாட் பகுதியில் ஒரு வழக்கும் பதிவாகியுள்ளன.

  நாசிக் நகர சிவசேனை தலைவர் சுதாகர் பத்குஜரும் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

  இந்த நிலையில், முதல்வரை அவதூறாக பேசிய நாராயண் ரானேவை கைது செய்ய வேண்டும் என்று கோரி அம்மாநிலத்தில் ஆளும் சிவசேனை கட்சித் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  மும்பை நகரின் பல இடங்களில் ரானேவை கைது செய்ய வலியுறுத்தி அவர்கள் பதாகைகளை வைத்தனர்.

  இதனால் பதற்றமான சூழல் நிலவிய நிலையில், இந்த நிலையில், மத்திய அமைச்சரவை கைது செய்ய நாசிக் காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவின்படி நாராயண் ரானேவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  பிணை நிராகரிப்பு

  அரசியலமைப்பு பொறுப்பில் உள்ள ஒருவர் அதேபோன்ற பொறுப்பில் உள்ள மற்றவர் மீது புகார் அளித்துள்ளார். இந்த பிரச்னையின் தீவிரம ்கருதி சட்டப்படி காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்று நாசிக் நகர காவல் ஆணையர் தெரிவித்தார்.

  நாராயண் ரானேவை கைது செய்ய தங்களுக்கு எவ்வித அழுத்தமும் கிடையாது என்றும் அவர் கூறினார்.

  இதற்கிடையே, தன்னை காவல்துறையினர் கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் வழங்கக் கோரி நாராயண் ரானே சார்பில் ரத்னகிரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதில் சில குறைபாடுகள் இருப்பதாகக் கூறி அந்த மனு ஏற்கப்படவில்லை.

  இதையடுத்து முன்ஜாமீன் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் ரானே சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதை அவசரகால மனுவாக ஏற்க உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

  பாஜகவினர் போராட்டம்

  இதற்கிடையே, நாராயண் ரானேவை காவல்துறையினர் விடுவிக்கும்வரை மும்பை - கோவா நெடுஞ்சாலையை முடக்குவோம் என்று பாஜகவினர் எச்சரித்துள்ளனர். அந்த நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான பாஜகவினர் திரண்டுள்ளதால் வாகன போக்குவரத்து ஏற்பட்டுள்ளது.

  என்ன பேசினார் ரானே?

  கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற பாஜகவின் மக்கள் ஆசிர்வாத யாத்திரை நிகழ்ச்சியொன்றில் பேசிய ரானே, இந்த அரசு சரியான ஓட்டுநரின்றி இயங்குகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் ஆட்சி அதிகாரத்தை அனுபவிக்கின்றனர். அரசை யாரும் தட்டிக்கேட்பதில்லை," என்று பேசினார்.

  மேலும், "இந்த மாநிலத்தில் ஆளும் முதல்வருக்கு இது எத்தனையாவது சுதந்திர தினம் என்பது கூட தெரியவில்லை. உதவியாளரிடம் அதை கேட்கிறார். தாய்நாட்டின் சுதந்திர தினத்தை தெரியாமல் ஒரு முதல்வர் இருப்பது அவமானமாகும். நான் மட்டும் அந்த இடத்தில் இருந்திருந்தால் ஒரு அறை விட்டிருப்பேன்," என்று நாராயண் ரானே பேசினார்.

  இந்த நிலையில், நாராயண் ரானேவின் பேச்சுக்கு ஆளும் சிவசேனை தொண்டர்கள் கடும் கண்டனம் தெரிவித்து கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் நாராயண் ரானேவை கிண்டல் செய்யும் வகையில் அவரை கோழி திருடன் என கூறி சுவரொட்டிகளை ஆங்காங்கே ஒட்டினர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சிவசேனை கட்சியில் இருந்தபோது நாராயண் ரானே செம்பூர் பகுதியில் கோழிக்கடை நடத்தி வந்ததை சித்தரிக்கும் விதமாக அந்த சுவரொட்டி காட்சி இருந்தது.

  இந்த நிலையில், மாநில முதல்வரை பொது நிகழ்ச்சியில் அவதூறாக பேசிய நாராயண் ரானேவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று சிவசேனை எம்.பி விநாயக் ரெளட் குரல் கொடுத்தார்.

  பாஜக மேலிட தலைவர்களை ஈர்ப்பதற்காக சிவசேனை தலைமையை ரானே இலக்கு வைப்பதாக அக்கட்சியினர் குற்றம்சாட்டினர்.

  யார் இந்த நாராயண் ரானே?

  சிவசேனை கட்சியின் தலைவராக பால் தாக்கரே இருந்தபோது அரசியலுக்குள் நுழைந்தவர் நாராயண் ரானே. 1990இல் சிவசேனை கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார்.

  1999இல் ரானேவை முதல்வராக்க பால் தாக்கரே முயன்றபோது அந்த முடிவுக்கு உத்தவ் தாக்கரே எதிர்ப்பாக இருந்தார். அப்போது முதலே சிவசேனை கட்சியில் எதிரும் புதிருமாக அவர் இருந்தார்.

  இருப்பினும் பால் தாக்கரே தமது முடிவில் உறுதியாக இருந்ததால் 1999இல் ரானே முதல்வரானார். அப்போது ரானே ராஜ் தாக்கரேவுக்கு நெருக்கமாக இருந்தார். உத்தவ் தாக்கரே மனோகர் ஜோஷிக்கு நெருக்கமாக இருந்தார்.

  1999ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது கட்சி அடைந்த தோல்விக்கு உத்தவ் தாக்கரேவே காரணம் என்று ரானே குற்றம்சாட்டினார். 2002இல் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான அரசை கவிழ்க்க அவர் முயன்றபோது அதை உத்தவ் தாக்கரே ஆதரிக்கவில்லை. 2003இல் ரானேவின் வீட்டை தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் எரித்தனர். அந்த சம்பவத்தின்போது ரானேவை சந்திக்க ஒரு சிவசேனை கட்சி தலைவர் கூட செல்லவில்லை. இது உத்தவ் தாக்கரே, ரானே இடையிலான மோதலை மேலும் கடுமையாக்கியது.

  2005இல் பால் தாக்கரேவுக்கும் உத்தவ் தாக்கரேவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டபோது சிவசேனை கட்சியில் இருந்து விலகிய ரானே, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அப்போது மாநிலத்தில் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், 2017இல் தன்னை முதல்வராக நியமிக்க காங்கிரஸ் மேலிடம் தவறி விட்டதாகக் கூறி அந்த கட்சியில் இருந்து விலகிய ரானே, தமது மகன்களுடன் சேர்ந்து தனி கட்சி கண்டார். பிறகு அந்த கட்சியை பாஜகவுடன் அவர் இணைத்தார்.

 10. மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ்: மருத்துவ குழுவை அனுப்பிய மத்திய அரசு

  ஜிகா வைரஸ்
  Image caption: கோப்புப்படம்

  மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல் முறையாக ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டிருக்கிறது. அங்கு புனே மாவட்டத்தில் உள்ள புரந்தர் பகுதியில் சுக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டிருந்த 50 வயது நோயாளிக்கு இந்த வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

  இதையடுத்து டெல்லி லேடி ஹாரிங்டன் மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த மகப்பேறு நிபுணர், தேசிய மலேரியா தடுப்பு நிறுவனத்தின் பூச்சியியல் நோய் ஆராய்ச்சியாளர் ஆகியோர் அடங்கிய குழுவை இந்திய சுகாதாரத்துறை புனேவுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஜிகா வைரஸ் கட்டுப்பாட்டு விதிமுறைகள் மகாராஷ்டிராவில் எந்த அளவுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளன என்பதை இந்த குழு ஆராயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இந்தியாவில் சமீபத்திய நாட்களுக்கு முன்புவரை கொரோனா வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அங்கு முதல் முறையாக ஜிகா வைரஸ் பாதிப்புடன் நோயாளி அடையாளம் கண்டிருப்பது மருத்துவத்துறையினரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த நோயாளி வசித்து வந்த கிராமத்தில் பலருக்கும் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் கண்டறியப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

  இதையடுத்து அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில், மூன்று பேருக்கு சிக்குன்குனியா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் மேலும் 25 பேருக்கு சிக்குன்குனியா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

  இந்தியாவில் இதற்கு முன்பு கேரள மாநிலத்தில் ஜிகா வைரஸ் வேகமாக பரவியது. அங்கு 63 பேருக்கு அந்த வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. காய்ச்சல், உடல் வலி, உடல் தடிப்புகள், வெண் படல அழற்சி, தசை, மூட்டு வலி, தலை வலி போன்றவை ஜிகா வைரஸ் நோக்கான பொதுவான அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் தொடர்ச்சியாக இரண்டு முதல் ஏழு நாட்களுக்கு நீடிக்கும். எனினும், இந்த வைரஸ் பரவிய பலருக்கும் உடனடியாக இந்த அறிகுறிகள் தோன்றாது என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

பக்கம் 1 இல் 20