போரிஸ் ஜான்சன்

 1. அக்டோபர் 15ஆம் தேதி நேரலை நிறைவடைகிறது

  பிபிசி நேயர்களுக்கு வணக்கம்,

  இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம்.

  பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

  பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்

  பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

 2. தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தல் முழுமையான முடிவுகள் என்ன?

  முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முழுமையான முடிவுகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பெரும்பான்மை இடங்களை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியுள்ளது.

  மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களில் மொத்தமுள்ள 153 இடங்களில்தி.மு.க. 139 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி ஒன்பது இடங்களையும் வி.சி.க. ஒரு இடத்தையும் ம.தி.மு.க. 2 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. அ.தி.மு.க. 2 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.

  ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களில் 1418 இடங்களில் 978 இடங்களைத் தி.மு.க. கைப்பற்றியது.

  காங்கிரஸ் 33 இடங்களையும் பா.ம.க. 46 இடங்களையும் வி.சி.க. 17 இடங்களையும் ம.தி.மு.க. 15 இடங்களையும் அ.ம.மு.க. 5 இடங்களையும் அ.தி.மு.க. 213 இடங்களையும் பா.ஜ.க.8 இடங்களையும் சி.பி.ஐ. 3 இடங்களையும் சி.பி.எம். 4 இடங்களையும் தே.மு.தி.க. ஒரு இடத்தையும் சுயேச்சைகள் 94 இடங்களையும் பிடித்துள்ளன.

  மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களைப் பொறுத்தவரை, 90.85 சதவீத இடங்களை தி.மு.க. கைப்பற்றியுள்ளது. அ.தி.மு.க. 1.31 சதவீத இடங்களையே பெற்றுள்ளது.

  ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களைப் பொறுத்தவரை, தி.மு.க. 68.82 சதவீத இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அ.தி.மு.க. 14.99 சதவீத இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

 3. பிரிட்டிஷ் எம்.பி டேவிட் அமேஸ் கத்திக்குத்து தாக்குதலில் பலி - என்ன நடந்தது?

  பிரிட்டன் எம்.பி
  Image caption: டேவிட் அமேஸ், பிரிட்டன் எம்.பி - எஸ்ஸெக்ஸ் தேவாலய வளாகத்தில் இன்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் கொல்லப்பட்டார்.

  கன்சர்வேடிவ் எம்.பி. சர் டேவிட் அமேஸ் கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன்பு அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

  பிரிட்டன் உள்ளூர் நேரப்படி பகல் 12 மணியளவில் லீ-ஆன்-சீ-யில் எம்.பி சர் டேவிட் அமேஸ் கத்தியால் குத்தப்பட்டதாக தங்களுக்கு தகவல் வந்ததாகவும் அதன் பேரில் ஒருவரை கைது செய்ததாகவும் எஸ்ஸெக்ஸ் காவல்துறையினர் தெரிவித்தனர்.

  பிடிபட்ட நபரிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், எம்.பி தாக்கப்பட்ட சம்பவத்தில் வேறு எவரையும் தாங்கள் தேடவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.

  1983ஆம் ஆண்டு முதல் பிரிட்டனில் எம்.பி ஆக இருக்கும் டேவிட் அமேஸுக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர்.இந்த செய்தியை விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.

 4. கோப்பு

  "அமெரிக்காவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான உறவின் வரலாற்றில் முதன்முறையாக எங்கள் தூதரை திரும்ப அழைக்கிறோம் என்பது ஒரு தீவிரமான அரசியல் நடவடிக்கை. இது இப்போது இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் நெருக்கடியின் தீவிரத்தைக் காட்டுகிறது"

  மேலும் படிக்க
  next
 5. சீனா

  பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இந்த உடன்பாட்டை சீனா கடுமையாக எதிர்த்திருக்கிறது. "சற்றும் பொறுப்பில்லாதது" என்றும், "குறுகிய மனப்பாங்கு" கொண்டது என்றும் சீனா விமர்சித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 6. China's Xi Jinping

  அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மாரிசன் ஆகியோர் ஆக்கஸ் என்ற பெயரில் புதிய கூட்டுத் திட்டம் பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளனர்

  மேலும் படிக்க
  next
 7. பைடன்

  வியாழக்கிழமையன்று காபூல் விமான நிலையத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்புகளில் அமெரிக்க மீட்புப்படையைச் சேர்ந்த 13 பேர் உள்பட 90-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 150-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

  மேலும் படிக்க
  next
 8. காபூல் தாக்குதல்: இதுவரை நமக்கு தெரிந்த தகவல்கள்

  • காபூல் நகரில் இன்று மாலையில் நடத்தப்பட்ட இரண்டு தாக்குதல்களில் ஒன்று அப்பி வாயில் பகுதியிலும் மற்றொன்று அந்த வாயில் பகுதியில் இருந்து சில அடி தூரத்தில் இருக்கும் பேரன் விடுதி அருகேயும் நடத்தப்பட்டுள்ளது. இந்த பகுதிகள்தான் மேற்கு நாடுகளுக்கு பயணம் செல்லும் அகதிகள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் காத்திருக்க ஒதுக்கப்பட்ட இடமாகும்.
  • இன்றைய தாக்குதலில் சில அமெரிக்க வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலியானதாக அமெரிக்க பாதுகாப்புத்துறையான பென்டகன் தெரிவித்துள்ளது. தாக்குதலுக்குப் பிந்தைய படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
  • தாக்குதல் நடந்த பகுதியில் துப்பாக்கியால் சுடப்படும் சத்தம் கேட்டதாக தகவல்கள் வந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
  • காபூல் விமான நிலைய பகுதியில் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு தமது குடிமக்களுக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசுகள் எச்சரிக்கை அறிவுறுத்தல் விடுத்த நாளில் இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன.
  • காபூல் தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விவரித்துள்ளனர். அவசரகால மீட்பு நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும் தமது நாட்டின் அவசரகால நடவடிக்கைகளை விவாதிக்கும் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
 9. கோப்ரா அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்த பிரிட்டன் பிரதமர்

  பிரிட்டன் பிரதமர்
  Image caption: போரிஸ் ஜான்சன், பிரிட்டன் பிரதமர்

  ஆப்கானிஸ்தானில் மோசமடைந்து வரும் அரசியல் நிலைமை குறித்து விவாதிக்க கோப்ரா அவசர கூட்டத்தை கூட்டியிருக்கிறார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்.

  மிகவும் முக்கியமான காலகட்டத்தில் அவசரகால ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் அங்கம் வகிக்கும் குழுதான் கோப்ரா.

  இந்த நிலையில், ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் எனப்படும் பிரிட்டன் மக்களவை வரும் 18ஆம் தேதி கூடும் என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.

 10. Scientists say we have to act now to save the world from climate change.

  "வேறொருவர் வெளியிடும் கார்பனுக்காக நாங்கள் எங்கள் உயிரைக் கொடுக்கிறோம்," என்று மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத் கூறினார்,

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 4