இந்தியா கொரோனாவைரஸ் முடக்கம்

 1. பெண்கள் கால்பந்து அணி

  ஆப்கன் பெண்கள் கால்பந்து அணி காபூலைவிட்டு வெளியேறிவிட்டனர் ஆனால் ஜூனியர் அணியில் பாஸ்போர்ட் மற்றும் போதுமான ஆவணங்கள் இல்லாத காரணங்களால் அவர்களால் நாட்டைவிட்டு தப்பி செல்ல முடியவில்லை.

  Follow
  next
 2. நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்க குடியரசு தலைவருக்கு அழுத்தம் கொடுப்போம்: மா. சுப்ரமணியன்

  தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்க குடியரசு தலைவருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் 84 ஆயிரம் பொதுமக்களின் கருத்து, சட்ட வல்லுநர்களின் கருத்து போன்றவை அடிப்படையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இது அவ்வளவு எளிதாக திருப்பி அனுப்பக் கூடிய தீர்மானம் கிடையாது. இந்த மசோதாவை விரைவில் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்போம். அவரது ஒப்புதலை பெறுவதற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம்," என்று தெரிவித்தார்.

 3. செளதி செல்ல புதிய பயண விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

  செளதி அரேபியா
  Image caption: செளதி அரசு அறிவித்துள்ள புதிய பயண விதிகள் செட்பம்பர் 23ஆம் தேதி அமலுக்கு வருகிறது.

  செளதி அரேபியா நாட்டுக்குச் செல்ல வேண்டுமானால், சில பயண விதிகளையும் நிபந்தனைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அந்நாட்டின் விமான போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

  இது தொடர்பாக செளதி ஊடக முகமை (எஸ்பிஏ) வெளியிட்டுள்ள செய்தியின்படி செளதி அரேபியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கான புதிய பயண விதிகள் செப்டம்பர் 23ஆம் தேதி அமலுக்கு வருகிறது.

  இதன்படி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் அல்லது உலக சுகாதார அமைப்பு அல்லது செளதி அரேபிய அரசால் அங்கீகரிக்கப்படாத தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் பயணத்துக்கு 72 மணி நேரத்துக்குள்ளாக மேற்கொண்ட கொரோனா பரிசோதனை முடிவில் நெகட்டிவ் என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

  செளதிக்கு வந்தவர்கள் கட்டாயமாக ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். ஐந்தாவது நாளில் அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்படும்.

  முடிவு நெகட்டிவ் என வந்தால் மட்டுமே அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர். அதுவரை அவர்கள் சுய தனிமையிலேயே இருக்க வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  View more on twitter
 4. போராட்டம்

  ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் போராட்டக்காரர்களை வன்முறையை கொண்டு ஒடுக்குவது குறித்து ஐநா கண்டனம் தெரிவித்துள்ளது.

  Follow
  next
 5. இந்திய அரசு

  தமிழ்நாடு ஆளுநராக இருக்கும் பன்வாரி லால் புரோஹித், சமீபத்தில் கூடுதல் பொறுப்பாக பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், அவர் தமிழக பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

  Follow
  next
 6. பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபட அனுதிக்க நீதிமன்றம் மறுப்பு

  முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  விநாயகர் சதுர்த்தியின்போது பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட அனுமதி கேட்ட கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. பொதுநலனைக் கருத்தில் கொண்டே தடை விதிக்கப்பட்டிருப்பதால் அதில் தலையிட முடியாது என தீர்ப்பளித்துள்ளது.

  கொரோனா பரவலை மனதில் கொண்டு, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின்போது பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த இல. கணபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.

  அந்த வழக்கில், பொது இடங்களில் விநாயகரை வைத்து வழிபடவும் பிறகு ஊர்வலமாகச் சென்று நீர் நிலைகளில் கரைக்கவும் அனுமதிக்க வேண்டும். குறைந்தது ஐந்து பேர் என்ற அளவிலாவது ஊர்வலமாகச் செல்ல அனுமதிக்க வேண்டும்; இது மத உரிமை என்று கூறியிருந்தார்.

  இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், "மத உரிமை என்பது முக்கியம்தான். ஆனால், அதைவிட வாழ்வாதாரம் மிக முக்கியம்" என தெரிவித்தனர். பொதுநலன் கருதியே அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்றும் அதில் தாங்கள் தலையிட முடியாது என்று கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

  திருப்பூரைச் சேர்ந்த இந்து முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பைச் சேர்ந்த கோபிநாத் என்பவரும் இதேபோன்ற ஒரு வழக்கைத் தொடர்ந்திருந்தார்.

  அதில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகரை பொது இடங்களில் வைத்து வழிபடவும் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கவும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டுமெனக் கோரி அந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார்.

  அந்த வழக்கில் ஆஜரான தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக கூறினார். இதையடுத்து அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

 7. ராமநாதபுரத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு

  பிரபுராவ் ஆனந்தன்

  கொரோனா

  ராமநாதபுரம் மாவட்டத்தில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர் ஒருவர் உள்பட நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் செப்.1 முதல் திறக்கப்பட்டுள்ளன.

  அதன் அடிப்படையில், தனியார் கல்வி நிறுவனங்கள் தங்கள் மாணவ, மாணவியரை நிறுவன வாகன இருக்கைகளில் சமூக இடைவெளியை பின்பற்றி பள்ளி, கல்லூரிகளுக்கு அழைத்து வருகின்றன.

  இந்த நிலையில் ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த சனிக்கிழமை 150 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பரிசோதனை முடிவு செவ்வாய்கிழமை மாலையில் வெளியானது.

  இதில் ராமேஸ்வரத்தை சேர்ந்த ஒருவர், பனைகுளத்தை சேர்ந்த ஒருவர் என இரண்டு மாணவர்கள் மற்றும் உதவியாளர் என 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  இதேபோல் ராமநாதபுரம் அடுத்த ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

  இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ராமநாதபுரம் சுகாதாரத்துறை துணை இயக்குநர் குமரகுருபரன், "கீழக்கரையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வாகனத்தில் வந்து செல்லும் பனைக்குளம், ராமேஸ்வரம் பகுதி மாணவர் இருவர் மற்றும் கல்லூரி உதவியாளர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  இதையடுத்து அக்கல்லூரி மாணவ, மாணவியர், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாக பணியாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  மேலும், ரெகுநாதபுரத்தில் அரசு பள்ளி மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவருடன் தொடர்பில் இருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

  பரிசோதனை முடிவு வரும் வரை அவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி செயல்படாத கல்வி நிறுவனங்கள் மீது பொது சுகாதார பராமரிப்பு மற்றும் பேரிடர் மேலாண் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.

 8. தமிழகத்தில் இன்றும் சில பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு

  திருத்துறைப்பூண்டி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதேபோல, அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

  கள்ளக்குறிச்சி செருவத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

 9. உ.பி. தேர்தல்: தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக மேலிடம்

  உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான கட்சிப் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை பாரதிய ஜனதா கட்சி மேலிடம் நியமித்துள்ளது.

  மேலும், இணை பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், ராம் மேக்வால், ஷோபா கரண்ட்லஜே ஆகியோரையும் பாஜக மேலிடம் நியமித்திருக்கிறது.

 10. Video content

  Video caption: கொரோனா பொதுமுடக்கத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் மனநல பாதிப்புகள் என்னென்ன?

  கொரோனா பொதுமுடக்கத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் மனநல பாதிப்புகள் என்னென்ன? அதற்கான தீர்வுகள் என்னென்ன என்பது குறித்த மருத்துவரின் பேட்டி

பக்கம் 1 இல் 100