தமிழ்

 1. தேர்வு எழுதும் மாணவர்கள் கோப்புப் படம்

  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் தேர்வுகளில் தமிழ்நாட்டினர் அல்லது தமிழ் தெரிந்தவர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் தமிழ் மொழித் தகுதித் தேர்வு கட்டாயம் என்கிற அரசாணை வெளியீடப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 2. ச. ஆனந்தப்பிரியா

  பிபிசி தமிழுக்காக

  அஜித்

  நடிகர் அஜீத்குமாரின் இந்த அறிக்கைக்கு ரசிகர்களிடையே பல கலவையான பதிவுகளை சமூக வலைதளங்களில் காண முடிந்தது.

  மேலும் படிக்க
  next
 3. டிசம்பர் 1ஆம் தேதி நேரலை நிறைவடைகிறது

  பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,

  இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம்.

  பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

  பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்

  பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

 4. Video content

  Video caption: அன்வர் ராஜா திடீர் நீக்கத்துக்கு பின்னணியில் என்ன நடந்தது? அதிமுகவில் என்ன நடக்கிறது?

  அ.இ.அ.தி.மு.கவில் எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து கட்சியில் இருப்பவர் அன்வர் ராஜா. 2001- 2006 அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தொழிலாளர் நலத் துறை அமைச்சராக இருந்தவர்.

 5. Video content

  Video caption: ஒமிக்ரான் திரிபு அச்சுறுத்தலை சர்வதேச தொற்றுநோயியல் வல்லுநர்கள் எப்படி பார்க்கிறார்கள்?

  கொரோனா வைரசின் ஒமிக்ரான் திரிபினால் உலக அளவில் ஏற்பட சாத்தியமுள்ள இடர்ப்பாடு 'மிக அதிகம்' என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

 6. நீச்சல்காரன்

  கணினித் தமிழ் ஆர்வலர், சென்னை

  தமிழ் மொழி கோப்புப் படம்

  தமிழக அரசின்கீழ் சுமார் 350-க்கும் மேற்பட்ட இணைய தளங்கள் உள்ளன. பொதுவாக முக்கியத் தளங்களை எல்லாம் தேசிய தகவலியல் மையமும் மற்ற தளங்களை எல்லாம் அந்தந்த துறையினரும் நிர்வகிக்கின்றனர். அவற்றுள் சுமார் 40 சதவீதத்துக்கும் கீழான தளங்களில் தான் தமிழ் இடைமுகமுள்ளன.

  மேலும் படிக்க
  next
 7. Video content

  Video caption: மாநாடு திரைப்படம் எப்படி உள்ளது?

  பல தடங்கலுக்கு பிறகு கடைசியில் திரைக்கு வந்திருக்கிறது மாநாடு திரைப்படம். இந்த படம் எப்படி உள்ளது?

 8. சேலம் இடிபாடு

  வணிக எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தி பலகாரம் செய்த போது தான் விபத்து நடந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் வணிக எரிவாயு சிலிண்டர்களை வீடுகளில் வைத்து பலகாரம் செய்வதை கண்காணித்து அதைத் தடுக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று சம்பவ பகுதியை நேரில் பார்த்த அமைச்சர் நேரு தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 9. சேலம் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம்: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

  ஏ.எம். சுதாகர், சேலம்

  சேலம் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம்

  சேலத்தில் சிலிண்டர் வெடிபுப் காரணமாக தரைமட்டமான கட்டடத்தில் சிக்கி ஐந்து பேர் இறந்த விலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவர் இன்று உயிரிழந்தார்.

  இதையடுத்து பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

  சேலத்தில் வீட்டு கேஸ் சிலிண்டர் வெடித்ததில் நான்கு வீடுகள் தரைமட்டமாகின. அங்கு இடிபாடுகளில் சிக்கிய தீயணைப்பு அலுவலர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

  சேலம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் கோவில் தெரு பகுதியில் ஏராளமான தனியார் குடியிருப்புகள் உள்ளன. அங்கு வெங்கட்ராஜன் என்பவரின் கட்டடத்தில் கணேசன், பத்மநாபன், கோபி ,முருகன் ஆகிய நான்கு குடும்பங்கள் வாடகைக்கு குடியிருந்து வருகின்றன.

  இந்த நிலையில் கோபி வீட்டில் அவரது மனைவி ராஜலட்சுமி இன்று காலை வழக்கம்போல் சமையல் செய்வதற்காக கேஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளனர். அப்போது பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்தது.

  இதில் கோபி வீடு, அவரது அருகில் இருந்த வீடு, மேல்தளத்தில் இருந்த இரண்டு வீடுகள் என நான்கு வீடுகளும் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.

  இந்த சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்களில் ஏழு ஆண்கள் , நான்கு பெண்கள் , ஒரு சிறுமி, ஒரு சிறுவன் ஆகிய 13 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

  இதில் கோபி என்பவர் 90 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தார். அவர் தற்போது உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 10. ரஞ்சன் அருண்பிரசாத்

  பிபிசி தமிழுக்காக

  இலங்கை தமிழ் எம்.பி

  இலங்கை நாடாளுமன்றத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, "தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டார்," என்று கூறினார். அதற்கு தமிழ் எம்.பி.க்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 54