சென்னை

 1. கெளதமன் முராரி

  பிபிசி தமிழுக்காக

  மகேந்திர சிங் தோனி

  வரலாற்றில் எல்லா வெற்றிப் பயணத்துக்கும் ஒரு முடிவு உண்டு. தோனி என்கிற பொன்னெழுத்துக்களால் வடிக்கப்பட்ட வாக்கியத்துக்கும் ஒரு கருமையான புற்றுப் புள்ளி வந்ததை ரசிகர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

  மேலும் படிக்க
  next
 2. தோனி

  "ஆட்டத்தை முடித்து வைக்கும் சிங்கம் மீண்டும் வந்துவிட்டது. இருக்கையில் இருந்து குதித்து எழுந்தேன்". இப்படிப் பதிவிட்டிருந்தார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. பின்னர் அதை அழித்துவிட்டு "என்றென்றும்" என்ற சொல்லைச் சேர்த்தார்.

  மேலும் படிக்க
  next
 3. `காளிகாம்பாள் கோயிலை அண்ணாமலை தேர்வு செய்தது ஏன்?

  ஆ. விஜயானந்த்

  பாஜக ஆர்ப்பாட்டம்
  கோயில் ஆர்ப்பாட்டம்

  தமிழ்நாட்டில் அனைத்து நாட்களிலும் கோயில்களைத் திறக்க வலியுறுத்தி, பா.ஜ.க சார்பில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், `போராடுவதற்கு வலுவான காரணங்கள் எதுவும் இல்லாததால் இப்படிப்பட்ட போராட்டத்தை அவர்களாகவே உருவாக்கிக் கொண்டனர்,' என்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

  கொரோனா இரண்டாம் அலை காரணமாக, தமிழ்நாட்டில் இறை வழிபாடு நடத்துவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கோயில்கள், மசூதிகள், கிறிஸ்துவ தேவாலயங்களில் வார இறுதி நாள்களில் வழிபாடு நடத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

  அனைத்து நாள்களிலும் கோயில்களைத் திறக்க வலியுறுத்தி, பா.ஜ.க சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்குப் பதில் அளித்த தமிழ்நாடு அரசு, `மத்திய அரசின் வழிகாட்டுதலின்படிதான் அனுமதி அளிக்கப்படுகிறது' என தெரிவித்தது.

  இந்நிலையில், அனைத்து நாள்களிலும் கோவில்களைத் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  குறிப்பாக, 12 திருக்கோவில்களின் முன்பாக இந்தப் போராட்டத்தை பா.ஜ.கவினர் நடத்தினர். சென்னை, பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள்கோயிலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.

  இது தவிர, திருச்செந்தூர் முருகன் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், பழநி தண்டாயுதபாணி திருக்கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம், தஞ்சை பெரிய கோயில், ராமநாதபுரம், ராமநாத சுவாமி ஆலயம், கோவை கோனியம்மன் ஆலயம், தில்லை நடராஜர் ஆலயம், நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் எனப் பல பகுதிகளில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அண்ணாமலை, ``தமிழ்நாட்டில் திரையரங்குகளைத் திறந்த நிலையில், கோயில்களைத் திறக்க அனுமதி மறுக்கப்படுவது ஏன்? திரையரங்குகளில் மட்டும் கொரோனா பரவாதா? எங்களின் பூஜை அறைகளுக்குள் உங்களின் (தி.மு.க) சிந்தாந்தத்தைக்கொண்டு வர வேண்டாம். கொரோனாவை காரணம் காட்டி தடைவிதிக்கப்பட்டுள்ளதால் நாங்கள் வேறு வழியில்லாமல் போராட்டத்தில் இறங்கியுள்ளோம்" என்றார்.

  தொடர்ந்து பேசிய அண்ணாமலை, ``எப்போதுமே நாங்கள் நல்ல விஷயங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்போம். குறிப்பாக, பள்ளிகளைத் திறப்பதற்கு அரசு முடிவு செய்தபோது வரவேற்றோம். அதேநேரம், திரையரங்குகளைத் திறக்க முடிவு செய்தபோது எதிர்ப்பு தெரிவித்தோம். எங்களின் எதிர்ப்பையும்மீறி திரையரங்குகளைத் திறந்தார்கள்" என்றார். கோயிலை பூட்டுவதற்கு கொரோனா ஒரு காரணம் இல்லை.

  ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் தன்னிச்சையாக செயல்படுவோம் என்று கூறிய தி.மு.க, தற்போது மத்திய அரசின் வழிகாட்டலின்படி கோயில்களை மூடுவதாக தெரிவித்துள்ள கருத்தில் உண்மையில்லை. கடவுள் இல்லை என்பதுதான் தி.மு.கவின் சித்தாந்தம். ஆகவேதான், கோயில்களுக்குத் தடை போடுகிறார்கள்.நாங்கள் தமிழக அரசுக்கு பத்து நாள்கள் அவகாசம் தருகிறோம். அதற்குள் கோயில்களைத் திறப்பது தொடர்பாக நல்ல முடிவை எடுக்க வேண்டும்" என்றார்.

  பா.ஜ.கவின் போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ``போராடுவதற்கு வலுவான காரணங்கள் எதுவும் இல்லாததால் இப்படிப்பட்ட போராட்டத்தை அவர்களாகவே உருவாக்கிக் கொண்டனர். இந்து சமய அறநிலையத்துறையை பொறுத்தவரையில்மத்திய அரசின் வழிகாட்டுதலின்படிதான், கொரோனா நோய்த் தொற்று தளர்வுகளை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கை என்னவென்றால், `அதிகமாகக் கூட்டம் கூடுகிற நிலையைத் தவிர்க்க வேண்டும், திருவிழாக்களை அனுமதிப்பது தொடர்பாக மாநில அரசுமுடிவு செய்ய வேண்டும்' என தெரிவித்துள்ளது.

  சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் கோவில்களுக்கு பக்தர்கள் அதிகமாக வரக் கூடிய சூழல் உள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு தவிர மற்ற நான்கு நாள்களில் திருக்கோயில்கள் முழுமையாக திறந்துள்ளன. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் கோவில்கள் மூடப்பட்டிருந்தாலும் தெய்வத்துக்கு வேண்டிய அனைத்து பூஜைகளும் எப்போதும்போல நடந்து வருகின்றன. கொரோனா அபாயம் நம்மைவிட்டு நீங்கியவுடன் திருக்கோயில்களை முதல் பணியாக முதலமைச்சர் திறந்து வைப்பார்" என்றார்.

  தொடர்ந்து பேசிய சேகர்பாபு, `` பா.ஜ.க நடத்தும் போராட்டத்தை உற்று நோக்கினால், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள்களில் எதாவது ஒரு நாளை போராட்டத்துக்கு உகந்த நாளாக அவர்கள் தேர்வு செய்திருக்கலாம். ஆனால், இன்றைக்கு காளிகாம்பாள் கோயிலுக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள்வந்து செல்வார்கள். இவர்களின் இன்றைய போராட்டத்தால் அந்தக் கோயிலில் வழிபாடு என்பது 3 நாள்களாகக் குறைந்துவிட்டது.

  போராடுகிறவர்கள், கண்மூடித்தனமாக காரணங்களை உருவாக்கிக் கொண்டு போராடுகிறார்களே தவிர, கொரோனா நோய்த் தொற்றில் விலைமதிக்க முடியாத உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தை அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். எம்மதமும் சம்மதமே என்பதுதான் முதல்வரின் கோட்பாடு.கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் வழிபாட்டுத் தலங்களைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்கிறார்.

  கோயில் ஆர்ப்பாட்டம்
 4. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழ்

  பன்னீர்செல்வம்

  சென்னை கேசவபிள்ளை பூங்கா பல அடுக்கு கட்டட விவகாரத்தில் ஐ.ஐ.டி நிபுணர் குழு அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் `மக்களுக்குத் திட்டங்களைக் கொடுப்பதை விட தனக்குத்தானே லாபம் சம்பாதிப்பதுதான் ஓ.பன்னீர்செல்வத்தின் தலையாய பணியாக இருந்துள்ளது,' என்கிறார் தி.மு.க எம்.எல்.ஏ பரந்தாமன். என்ன நடக்கிறது?

  மேலும் படிக்க
  next
 5. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நான்கு மாதங்களுக்குள் நடத்த தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் அவகாசம்

  உச்ச நீதிமன்றம்
  Image caption: இந்திய உச்ச நீதிமன்றம்

  தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த நான்கு மாத அவகாசத்தை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.

  இது தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி. ரமணா இடம்பெற்ற அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, "நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிந்து விடும். எனவே, தேர்தலை நடத்த கால அவகாசம் தேவை என்று மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

  இதையடுத்து தேர்தலை தள்ளிவைக்க ஆணையம் தெரிவிக்கும் காரணங்கள் மோசமானதாக உள்ளதாக கருத்து கூறிய நீதிமன்றம், ஆணையம் கேட்டுக் கொண்டபடி நான்கு மாத அவகாசத்தை தருவதாக கூறினர்.

  தமிழ்நாட்டில் திமுக தலைமையில் புதிய ஆட்சி அமைந்த பிறகு, உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

  தமிழ்நாட்டில் முன்பு 528 ஆக இருந்த பஞ்சாயத்துகளின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. 664 ஆக இருந்த நகர பஞ்சாயத்துகளின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளன.

  இது தவிர மேலும் 6 மாநகராட்சிகள், 28 நகராட்சிகள் கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளன, திருச்சி, நாகர்கோவில், ஓசூர், தஞ்சாவூர் மாநகராட்சி எல்லைகளும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.

  எனவே தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த கால அவகாசம் வழங்க மனுதாரரான தங்கள் தரப்புக்கு எந்த ஆட்சேபனை இல்லை என பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த ஏழு மாத அவகாசம் கோரப்பட்டது. ஆனால், அதை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை.

 6. கதறியழும் ஸ்வேதாவின் தாய்.

  ராமச்சந்திரன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஸ்வேதாவின் கழுத்தில் பல முறை குத்தினார் என்று குற்றம்சாட்டப்படுகிறது. இதற்குப் பிறகு அவரும் தன் கழுத்தை அறுத்துக்கொண்டார் என்கிறது போலீசுக்கு கிடைத்த தகவல்.

  மேலும் படிக்க
  next
 7. தாம்பரத்தில் கல்லூரி மாணவி இளைஞரால் குத்திக் கொலை

  சென்னையை அடுத்துள்ள தாம்பரம் பகுதியில் தனியார் கல்லூரி மாணவி ஒருவர், குத்திக் கொலை செய்யப்பட்டார். அவரைக் குத்தியதாக குற்றம்சாட்டப்படும் இளைஞர் தாமும் தன்னுடைய கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்று தெரியவருகிறது.

  இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது என்ன?

  தாம்பரத்தில் கல்லூரி மாணவி குத்திக் கொல்லப்பட்டார்: தன் கழுத்தையும் அறுத்துக்கொண்ட இளைஞர்

  தாம்பரத்தில் கல்லூரி மாணவி இளைஞரால் குத்திக் கொலை
 8. தோனி

  தொடக்க ஓவர்களிலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்து பரிதாப நிலையில் இருந்த சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை தனியொருவராக நின்று மரியாதையான எண்ணிக்கையை எட்ட உதவினார் கெய்க்வார்ட்

  மேலும் படிக்க
  next
 9. ஹிட்லர்

  இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு ஓராண்டுக்கு முன்பு ஜெர்மானியர்களின் குழு ஒன்று இந்தியாவின் கிழக்கு எல்லையில் ரகசியமாகத் தரையிறங்கியது.

  மேலும் படிக்க
  next
 10. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  அதிமுக திமுக ஜெயலலிதா ஸ்டாலின்

  ஓமந்தூரார் கட்டடம் மருத்துவ நோக்கத்துக்காக கட்டப்படவில்லை. தற்போது புனித ஜார்ஜ் கோட்டையில் ராணுவத்துக்குச் சொந்தமான கட்டடத்தில் வாடகை அடிப்படையில் தலைமைச் செயலகம் இயங்கி வருகிறது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 27