ஒடிசா

 1. புரி ஜெகந்நாதர் கோயில் தேரோட்டம் - பக்தர்களுக்கு அனுமதி இல்லை

  ஒடிஷா மாநிலம் புரி ஜெகந்நாதர் கோயில் தேரோட்டத்தில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தேர் இழுப்பவர்களுக்கு கோவிட் -19 பரிசோதனை செய்யப்பட்டு, நெகட்டிவ் வந்திருந்தால் மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள், தடுப்பூசியும் போட்டிருக்கவேண்டும் என்ற விதி கடைபிடிக்கப்படுகிறது. போலீஸ் தவிர, இந்த நிகழ்வுக்காக ஆயிரம் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று புரி ஜெகந்நாதர் கோயில் நிர்வாகி அறிவித்துள்ளார் என்கிறது ஏ.என்.ஐ. செய்தி முகமை.

  View more on twitter
 2. யாஸ் புயல்: மூன்று மாநில முதல்வர்களுடன் அமித் ஷா ஆலோசனை

  ஒடிஷா
  Image caption: பாரதீப் துறைமுகம், ஒடிஷா
  Odisha

  வங்க கடலில் இன்று உருவாகும் யாஸ் புயல் முன்னேற்பாடுகள் தொடர்பாக மேற்கு வங்கம், ஆந்திர பிரதேசம், ஒடிஷா ஆகிய மூன்று மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள் முதல்வர்களுடன் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தி வருகிறார்.

  இன்று காலை 11 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது.

  வங்க கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமாகி புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே கூறியுள்ளது.

  இந்த புயல் வரும் 26ஆம் தேதி மணிக்கு மேற்கு வங்கம், ஒடிஷா இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

  புயல் கரையை கடக்கும்போது 155 கி.மீ முதல் 165 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதால் மீனவர்கள் நான்கு நாட்களுக்கு மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

  ஒடிஷாவின் பாரதீப் துறைமுகத்தில் புயல் பாதிப்பு மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக பேரிடர் அதிவிரைவு மீட்புப்படையைச் சேர்ந்த 60 அணிகள் தயார்நிலையில் உள்ளன.

  Odisha
 3. தலைக் கவசம் அணியாத கர்ப்பிணியை 3 கி.மீ நடக்க வைத்த பெண் காவல் அதிகாரி

  பிக்ரமை காவல் துறை வாகனத்தில் அவர்கள் அழைத்துச் சென்றனர். சாலையில் தனியே விடப்பட்ட பின்னர், மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்தே காவல் நிலையம் சென்றுள்ளார் குருபாரி.

  மேலும் படிக்க
  next
 4. கீதா பாண்டே

  பிபிசி நியூஸ், டெல்லி

  Bibekananda Biswal after his arrest

  காவல் ஆணையர் சாரங்கி வேறொரு வழக்கின்பொருட்டு சவுத்வார் சிறைக்குச் சென்றார். அங்கு அவருக்கு பாலியல் வல்லுறவு செய்ததாக தண்டனை பெற்றவர்களில் ஒருவருடன் தற்செயலாக ஒரு சந்திப்பு நிகழ்ந்தது.

  மேலும் படிக்க
  next
 5. சுஸ்ரீ திப்யதர்ஷினி பிரதான்:

  2020ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் பெண்களுக்காக டி20 போட்டியில் வெலாசிட்டி கிரிக்கெட் அணியில் புகழ்பெற்ற மிதாலி ராஜ் தலைமையில் இவர் விளையாடினார். இந்த போட்டி பிசிசிஐ-ஆல் ஒருங்கிணைக்கப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 6. Video content

  Video caption: பாரம்பரிய நெல் விதைகளை பாதுகாக்கும் இந்தியர்

  பாரம்பரிய நெல் விதைகளை பாதுகாக்கும் இந்தியர்

 7. கோப்புப்படம்

  "கொல்கத்தா மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் ஒரு நாள் முழுக்க மின்சாரம் இல்லை. புயல் மோசமாக தாக்கிய பகுதிகளில் அலைப்பேசி நெட்வொர்க்குகளும் செயல்படவில்லை"

  மேலும் படிக்க
  next
 8. உம்பான் புயல்

  வங்காள விரிகுடாவில் உம்பான் புயல், நேற்று முன்தினம் அதிதீவிர புயலாக உருவெடுத்தது. அந்த புயல், மேலும் தீவிரமடைந்து, இன்று பிற்பகலில் மேற்கு வங்காளத்தின் டிகாவுக்கும், வங்காளதேசத்தின் ஹடியா தீவுக்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

  மேலும் படிக்க
  next
 9. ஒடிஷாவில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும்

  கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒடிஷாவில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாக ஏஎன்ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

  இந்தியாவில் ஏப்ரல் 14ஆம் தேதிவரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை நீட்டித்து உத்தரவிட்டுள்ள முதல் மாநிலம் ஒடிஷா.

  ஏப்ரல் 30ஆம் தேதிவரை ரயில் மற்றும் விமான சேவைகளை இயக்க வேண்டாம் என அம்மாநில முதல்வர் நவீன் பட்னாயக் மத்திய அரசிடம் கோரியுள்ளார்.

  ஒடிஷாவில் கல்வி நிறுவனங்கள் ஜூன் 17ஆம் தேதி வரை மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  View more on twitter
 10. புயலால் அசையும் மரங்கள்.

  வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள 'புல்புல்' புயல், அடுத்த 24 மணிநேரத்தில் தீவிர புயலாக மாறி, இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம், மற்றும் வங்கதேசத்தை தாக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2