நேபாளம்

 1. நேபாள நாடாளுமன்றத்தை ஏழு நாட்களுக்குள் கூட்ட உச்ச நீதிமன்றம் உத்தரவு

  NEPAL
  Image caption: கேபி. ஷர்மா ஓலி

  நேபாள நாடாளுமன்றத்தை ஏழு நாட்களுக்குள் கூட்ட வேண்டும் என்று அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  மேலும், அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவர் ஷெர் பகதூர் தியூபாவை நாட்டின் அடுத்த பிரதமராக நியமிக்கவும் உச்ச நீதிமன்றம் நேபாள குடியரசு தலைவரை கேட்டுக் கொண்டுள்ளது.

  இது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு விசாரித்து பிறப்பித்த உத்தரவில், நேபாளத்தில் நீடித்து வரும் அரசியல் ஸ்திரமின்மையை முடிவுக்கு கொண்டு வர அந்நாட்டின் மக்களவையை இரண்டாவது முறையாக பிரதமர் ஒலி யோசனைப்படி கலைத்த குடியரசு தலைவரின் நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மக்களவையை கலைக்கும் பிரதமரின் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறிய உச்ச நீதிமன்றம், ஏழு நாட்களுக்குள் நாடாளஉமன்றம் கூட்டப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

  இந்த தீர்ப்பை நேபாள எதிர்கட்சிகள் வரவேற்றுள்ளன. அதே சமயம், பிரதமர் ஓலியின் கட்சி பிபிசியிடம் பேசும்போது, "ஆட்சி முறைக்கும் நீதித்துறைக்கும் இடையிலான அரசி.யலமைப்பின் மாண்பு உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மீறப்பட்டுள்ளது," என்று தெரிவித்தது.

  நேபாள நாடாளுமன்றத்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் ஓலி கலைத்து நடவடிக்கை எடுத்தார்.

  நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி, தனது கட்சிக்குள்ளேயே எதிர்ப்பை சந்தித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. மேலும் கட்சியையும், ஆட்சியையும் ஒருதலைபட்சமாக நடத்துவதாகவும் பிரதமர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

  2018ஆம் ஆண்டு நேபாளத்தின் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி இரண்டையும் இணைத்த பிறகு பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கேபி. ஷர்மா ஒலி.

  இந்த ஒருங்கிணைந்த கட்சியின் துணைத் தலைவரானார், மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான பிரசாண்டா என்று அறியப்படும் புஷ்ப கமல் தஹால். இருப்பினும் கட்சிக்குள் அதிகார சண்டை மூண்டது.

  ந்த சூழ்நிலையில், இந்தியாவுடனான எல்லை பிரச்னையின்போது கட்சியின் மூத்த தலைவர்களான புஷ்ப் கமல் தஹல் மற்றும் ஜலநாத் கானல் ஆகியோர் பிரதமர் கேபி ஷர்மா ஒலியின் முடிவுகள் குறித்து கேள்வி எழுப்பினர்.

  அதே சமயம், பிரதமர் கேபி. ஷர்மா ஒலி குடியரசுத் தலைவரிடம் அவசரச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்று கோரினார்.

  குடியரசுத் தலைவர் அவசர சட்டத்திற்கு அனுமதி வழங்கிய பின் கட்சியில் சர்ச்சை வெடித்தது. கட்சியின் மூத்த தலைவர்கள் அந்த அவசரச் சட்டத்தை திரும்ப பெற குடியரசுத் தலைவரிடம் கோரினர்.

  உறுப்பினர்கள் சிறப்பு கூட்டத் தொடரை கூட்ட குடியரசுத் தலைவரை கோரினர். மேலும் கேபி. ஒலி பிரதமர் பதவியிலிருந்தும், கட்சி தலைமை பொறுப்பிலிருந்தும் விலக வேண்டும் என்றும் கோரப்பட்டது.

  இதற்குப் பின் பிரதமர் மீது அழுத்தம் கூடியது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறப்பு கூட்டத்தை கூட்டுவதற்கான அனுமதி கோரிக்கையை திரும்ப பெறுவது என்றும் அதற்கு பதிலாக பிரதமர் அவசரச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் ஒப்பந்தம் ஏற்பட்டது.

  இருப்பினும் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வராமல், நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமர் முன்வைத்த யோசனையை ஏற்று நாடாளுமன்றம் கடந்த ஆண்டு கலைக்கப்பட்டது.

 2. Video content

  Video caption: இமயமலை: ஒரே மாதத்தில் 28,000 கிலோ குப்பைகளை சுத்தம் செய்த நேபாள ராணுவம் & ஷெர்பா இன மக்கள்

  இமய மலையில் இருந்து 28,000 கிலோ குப்பைகளை சுத்தம் செய்திருக்கிறார்கள் நேபாள ராணுவம் & ஷெர்பா இன மக்கள். அவர்கள் முயற்சியால் உலகில் உயரமான சிகரங்கள் தற்போது சுத்தமாகி இருக்கின்றன.

 3. குருப்ரீத் சைனி

  பிபிசி செய்தியாளர்

  கொரோனா வைரஸ்

  நேபாளத்தின் பிரச்னை இத்துடன் முடிவடையவில்லை. நேபாளம் ஒரு அரசியல் நெருக்கடியையும் சந்தித்து வருகிறது. அது தான் அந்நாடு எதிர்கொண்டு வரும் பொருளாதார நெருக்கடி. பிரதமர் கே.பி. சர்மா ஓலி திங்கட்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததையடுத்து, மீண்டும் நேபாள அரசியலில் ஸ்திரமின்மை ஏற்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 4. உண்மை தகவல் சரிபார்க்கும் குழு

  பிபிசி

  அண்டை நாடுகளில் அதிகரிக்கும் தொற்று

  இந்தியாவின் அண்டை நாடுகளிலும் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேபாளத்தில், அங்கு ஏப்ரல் மாதம் தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. அரசியல் தலைவர்களிடமிருந்து பல்வேறு விதமான செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில் காலப்போக்கில் மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுவதை தவற விட்டு விட்டனர் என மருத்துவர்கள், சுகாதார நிபுணர்கள் மற்றும் களப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

  மேலும் படிக்க
  next
 5. கே.பி. ஷர்மா ஒளி

  ஆனால், பிரதமர் ஷர்மா ஒளி தரப்பும் தங்கள் கோஷ்டிதான் அதிகாரபூர்வமான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி என்று கூறுகிறது. இப்போது அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக கூறிய தரப்பும் அதையே கூறுகிறது. இதில் எது அதிகாரபூர்வக் கட்சி என்பதை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யவேண்டும். இன்னும் ஆணையம் ஒரு முடிவுக்கு வரவில்லை.

  மேலும் படிக்க
  next
 6. ஷி மற்றும் ஒலி

  கடந்த ஏழு மாதங்களில், நேபாள அரசியல் தலைவர்களின் பார்வை தலைகீழாக மாறியிருக்கிறது. இந்தியா தொடர்ந்து நேபாளத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது எனக் கூறிக் கொண்டிருந்த பிரதமர் சர்மா ஒலி, தற்போது இந்தியாவை விமர்சிப்பதைக் குறைத்திருக்கிறார்.

  மேலும் படிக்க
  next
 7. नेपाल

  நேபாள பிரதமர் கே.பி.ஒலி, தனது கட்சுக்குள்ளேயே எதிர்ப்பை சந்தித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. மேலும் கட்சியையும், ஆட்சியையும் ஒருதலைபட்சமாக நடத்துவதாகவும் பிரதமர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

  மேலும் படிக்க
  next
 8. gold rate today

  சி.பி.ஐ.க்கு மட்டும் கொம்புகள் உள்ளது. மாநில போலீசாருக்கு வால் மட்டும் உள்ளது என்று கூற முடியாது என்று தெரிவித்தார் நீதிபதி பி.என்.பிரகாஷ்.

  மேலும் படிக்க
  next
 9. நவின் சிங் கட்கா

  சுற்றுச்சூழல் செய்தியாளர், பிபிசி

  எவரெஸ்ட்

  நேபாளம், வங்காள விரிகுடாவை தனது அளவீட்டின் கடல் மட்டமாகப் பயன்படுத்தியது. குறிப்பாக, இந்தியா - நேபாள எல்லைக்கு அருகிலுள்ள எவரெஸ்ட்டுக்கு நெருக்கமான ஒரு புள்ளியை இந்தியா ஏற்கனவே ஆய்வு செய்திருந்ததால், அதுகுறித்த தகவல் நேபாள நில அளவையாளர்களுடன் பகிரப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 10. சஞ்சீவ் கிரி

  பிபிசி நியூஸ் நேபாளி

  கே.பி. ஷர்மா ஒலி

  "இராஜதந்திர உறவில் அனைத்து விடயங்களும் பொதுவெளியில் விளக்கப்பட வேண்டும் என்றில்லை. அந்த வகைப்பாட்டிற்குள் இந்த சந்திப்பு வருகிறது."

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 3