மனிதநேய உதவி

 1. Video content

  Video caption: தைவான் - சீனா பதற்றம் தீவிரம் - இனி என்ன நடக்கும்?

  சீனா மற்றும் தைவான் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்து வரும் சூழலில் தைவான் - சீனா மறு இணைப்பு நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

 2. ஆப்கானிஸ்தான் மனிதாபிமான உதவிக்கு ரூ. 4,442 கோடி நிதி கேட்கும் ஐ.நா

  காங்கிரஸ்

  ஆப்கானிஸ்தானில் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியில் சிக்கியவர்களுக்கு உதவ இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 4,442 கோடிக்கும் அதிகமான நிதி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

  இது தொடர்பாக இன்றைய நாளின் பிற்பகுதியில் ஐ.நா அவை ஜெனீவாவில் கூடி ஆலோசனை நடத்தவுள்ளது. தாலிபன் ஆளுகையில் உள்ள ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான உதவி வழங்க சர்வதேச சமூகத்தை ஐக்கிய நாடுகள் சபை முறைப்படி கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  ஆப்கானியர்களுக்கு உணவு, மருத்துவம், சுகாதார வசதிகள், சுத்தமான குடிநீர், சுகாதார வசதிகள் போன்றவை அத்தியாவசியமாக தேவைப்படுகிறது என்று ஐ.நா தெரிவித்துள்ளது. இந்த நேரத்தில் ரூ. 4,442 கோடி அளவிலான நிதியுதவி அந்நாட்டுக்கு மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும் என்றும் ஐ.நா கூறியுள்ளது.

  "நாடு மிகவும் மோசமான சூழ்நிலையை எதிர்கொள்கிறது. நீடித்த மோதல், கடுமையான வறட்சி மற்றும் கோவிட் -19 பாதிப்பை அந்நாடு எதிர்கொண்டு வருகிறது. அங்கு வாழும் மக்களில் கிட்டத்தட்ட பாதி பேருக்கு ஏற்கெனவே உதவி தேவைப்பட்டிருந்தது," என்று செய்திக்குறிப்பில் ஐநா தெரிவித்துள்ளது.

  "ஆப்கானிஸ்தானில் சமீபத்திய முன்னேற்றங்கள் அங்கு ஏற்கெனவே நிலவி வந்த பாதிப்பை அதிகரித்துள்ளது," என்றும் ஐ.நா கூறியுள்ளது.

  ஆகஸ்ட் மாதத்தில் இஸ்லாமியவாத போராளிகள் ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டை மீட்பதற்கு முன்பே, உள்நாட்டு மோதல் காரணமாக இந்த ஆண்டு 5,50,000க்கும் அதிகமான மக்கள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் என்றும் ஐ.நா தெரிவித்துள்ளது. அதாவது, அந்நாட்டில் தற்போது 35 லட்சம் பேர் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர்.

 3. சலீம் ரிஸ்வி

  பி பி சி ஹிந்திக்காக, நியூயார்க்கிலிருந்து

  அமெரிக்க சூறாவளி ஐடா

  நியூயார்க்கின் குயின்ஸ் பகுதியிலும் வெள்ளம் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. குயின்ஸில், பல கட்டடங்களின் அடித்தளங்களில் வெள்ள நீர் புகுந்தது. நியூயார்க்கின் குயின்ஸ் பெருநகரத் தலைவர் டொனோவன் ரிச்சர்ட்ஸ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவி வழங்குமாறு மாகாண மற்றும் மத்திய அரசுகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 4. இந்தோனீசியாவின் ஜகார்த்தா சிறையில் தீ - 41 பேர் பலி

  இந்தோனீசியா

  இந்தோனீசிய தலைநகர் ஜகார்த்தாவின் புறநகர் பகுதியில் உள்ள டாங்கரெங் சிறைச்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ காரணமாக குறைந்தபட்சம் 41 பேர் பலியாகியுள்ளனர்.

  இந்த சம்பவம் புதன்கிழமை அதிகாலையில் நடந்துள்ளது. அப்போது பெரும்பாலான கைதிகள் தூங்கிக் கொண்டிருந்தனர்.

  தீ ஏற்பட்ட சி பிளாக் பகுதியில் 122 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். அந்த சிறை அறைகள், 40 கைதிகளை அடைக்கும் வகையில் கட்டப்பட்டிருந்தது என்றும் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் கைதானவர்கள் அவற்றில் அடைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

  இந்த சம்பவத்தில் சிக்கிய பன்னிரண்டுக்கும் அதிகமானோர் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

  தீ ஏற்பட்டது எப்படி என்பது குறித்து விசாரித்து வருவதாக சிறைத்துறை செய்தித்தொடர்பாளர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

 5. ஆப்கன் தாலிபன்

  தாலிபன்கள் காபூல் நகரை முற்றுகையிட்ட நாளில் இருந்து தங்களது குடிமக்களை வெளியேற்றும் பணியில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. இப்போதைக்கு தாலிபன்களின் பிடியில் இருந்து தப்பிப் பதுங்கியிருப்பதற்கு பஞ்சீர் பிராந்தியம் மட்டும் இருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 6. பாலா அடாமோ இடியோட்டா

  பிபிசி நியூஸ், பிரேசில்

  மில்லென்னியல்ஸ்

  "தோல்வியடைந்தவர்கள்", "சோம்பேறிகள்" என்று மீம்கள் மூலம் அவர்கள் கிண்டலடிக்கப்படுகிறார்கள். அவர்கள் பெற்றோரை அதிகமாக சார்ந்திருப்பது விமர்சிக்கப்படுகிறது. ஆனால் இந்தத் தலைமுறையை இப்படிக் கடந்துவிட முடியாது என்கிறார் ஒரு நிபுணர்.

  மேலும் படிக்க
  next
 7. பிரபுராவ் ஆனந்தன்

  பிபிசி தமிழுக்காக

  இலங்கை அகதிகள்

  இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் பல முறை மனு அளித்த ஒரு அகதியிடம், அவர் சட்டவிரோதமாக கடல் வழியாக வந்தவர் என்பதால் இந்திய குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல பலர் அகதிகள் முகாம்களில் வசித்து வருகின்றனர்.

  மேலும் படிக்க
  next
 8. சிங்கப்பூர் மருத்துவமனை

  பிறக்கும்போது 24 செ.மீ நீளமும் 212 கிராம் எடையும் கொண்ட இந்த பிஞ்சுக்குழந்தை, சராசரியாக 40 வாரங்கள் கருவில் வளர்ந்திருக்க வேண்டிய நிலையில், 25 வாரங்களிலேயே பிறந்திருந்தாள்.

  மேலும் படிக்க
  next
 9. Video content

  Video caption: வீட்டில் குழந்தை போல வளரும் அணில்
 10. பூரியா மஹ்ரூயன்

  பிபிசி பெர்ஷிய மொழி சேவை

  இரான்

  உலக நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகளின் தாக்கமானது, கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் காரணமாக மென்மேலும் மோசமடைந்ததுடன் அது அந்த நாட்டின் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளில் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இரானின் பணவீக்க விகிதம் சமீப காலங்களில் இல்லாத அளவாக 50 சதவீதத்தை எட்டியுள்ளது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 4