அணு சக்தி

 1. ஹைபர்சோனிக் ஏவுகனை சோதனையை நடத்தவில்லை - மறுக்கும் சீனா

  சீனா

  சீனா ஹைபர்சோனிக் ஏவுகனை சோதனையை நடத்தவில்லை என்று அந்நாட்டு அரசு மறுத்துள்ளது.

  இது தொடர்பாக பிரிட்டிஷ் நாளிதழான ஃபைனான்ஷியல் டைம்ஸில் வெளியான செய்தியை மறுத்த சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ட்செள லிஜியான், "எங்கள் நாடு வழக்கமான விண்கல சோதனையில் ஈடுபட்டது என்றும் அதற்கும் ஏவுகனை சோதனைக்கும் தொடர்பு இல்லை," என்று கூறினார்.

  முன்னதாக, சீனாவின் ஹைபர்சோனிக் ஏவுகனை சோதனை தொடர்பான செய்தி வெளிவந்தவுடன் அமெரிக்காவில் கடும் எதிர்வினையாற்றப்பட்டது.

  அந்த நாட்டின் ஆயுதப்படைகளுக்கான நாடாளுமன்ற குழு உறுப்பினர் மைல் கல்லெகர், "சீனாவின் இதுபோன்ற செயல்களுக்கு அமெரிக்காவும் ஏதாவது செய்ய வேண்டும். இல்லையென்றால் 10 ஆண்டுகளுக்குள்ளாகவே சீனாவுடனான பனிப்போரில் அமெரிக்கா தோற்று விடும்," என்று கூறினார்.

  இதேவிவகாரம் குறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின் கருத்து கூறுகையில், "சீனாவின் ஆயுத திறன்கள் தொடர்பான நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஆனால், இந்த குறிப்பிட்ட தகவல் பற்றி கருத்து வெளியிட முடியாது," என்று தெரிவித்தார்.

 2. Video content

  Video caption: பாகிஸ்தான் 'அணு ஆயுத திட்டத்தின் தந்தை' ஏ.க்யூ. கான் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டது ஏன்?

  ஏ.க்யூ. கான் என்று பரவலாக அறியப்பட்ட அப்துல் கதீர் கான் மத்திய பிரதேச தலைநகராக உள்ள போபல் நகரில் பிறந்தவர்.

 3. கிம்

  எந்த நாட்டாலும் வீழ்த்த முடியாத ராணுவத்தை உருவாக்கப் போவதாக வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் கூறியுள்ளார். தென் கொரியாவின் ஆயுதக் குவிப்பும், அமெரிக்காவின் விரோதக் கொள்கைகளுமே வடகொரியாவின் ஆயுத மேம்பாட்டு நடவடிக்கைகளுக்குக் காரணம் என்றும் அந்நாட்டு அவர் தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 4. நீர்மூழ்கி

  சாண்ட்விச், சூயிங் கம் போன்றவற்றில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலின் ரகசியத்தை மறைத்து வைத்து விற்க முயன்றதாக அமெரிக்க கடற்படை அணுசக்திப் பொறியாளர் மற்றும் அவரது மனைவி மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 5. அப்துல் கதீர் கான்

  இந்தியாவில் உள்ள மத்திய பிரதேச தலைநகர் போபாலில் 1935ஆம் ஆண்டு ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர் அப்துல் கதீர் கான். இந்தியா -பாகிஸ்தான் பிரிவினை நடந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 1952ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு இவர் குடிபெயர்ந்தார்.

  மேலும் படிக்க
  next
 6. 'பாகிஸ்தான் அணு ஆயுத திட்டத்தின் தந்தை' அப்துல் கதீர் கான் மரணம்

  பாகிஸ்தான் அணு ஆயுத திட்டத்தின் தந்தை என்று கூறப்பட்ட அப்துல் கதீர் கான் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இஸ்லாமாபாத்தில் காலமானார். அவருக்கு வயது 85.

  ஏ.க்யூ. கான் என்று பரவலாக அறியப்பட்ட அப்துல் கதீர் கான் மத்திய பிரதேச தலைநகராக உள்ள போபல் நகரில் பிறந்தவர்.

  கோவிட் -19 தொற்று காரணமாக ஏ.க்யூ. கான் உயிரிழந்தார் என்று பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

  அணு ஆயுதங்கள் உடைய முதல் இஸ்லாமிய நாடாக பாகிஸ்தானை உருவாக்கியதில் பெரும்பங்கு உடைய அப்துல் கதீர் கான் பாகிஸ்தானில் ஒரு தேசிய நாயகனாகவே பார்க்கப்படுகிறார்.

  ஆனால், தெற்காசியப் பிராந்தியத்தில் அணு ஆயுதப் போட்டிக்கு வித்திட்டவர்களில் ஒருவராகவும் இவர் கருதப்படுகிறார்.

  அப்துல் கதீர் கான் வாழ்க்கை, வீட்டுச் சிறை குறித்து விவரமாக இங்கே படிக்கலாம்

  AD Khan pakistan nuclear scientist death
 7. முரளிதரன் காசி விஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  கூடன்குளம்

  "கூடங்குளம் அணு உலை வளாகத்தின் மொத்தப் பரப்பே 13 சதுர கிலோ மீட்டர்தான். அதற்குள் ஆறு அணு உலைகள், கடல்நீரை நன்னீராக்கும் ஆலை, அணுக் கழிவை மறுசுழற்சி செய்யும் ஆலை ஆகியவை போக, இப்போது அணுக் கழிவு மையத்தையும் அமைப்பது ஆபத்தானது," என்கின்றனர் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள்.

  மேலும் படிக்க
  next
 8. சீனா

  பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இந்த உடன்பாட்டை சீனா கடுமையாக எதிர்த்திருக்கிறது. "சற்றும் பொறுப்பில்லாதது" என்றும், "குறுகிய மனப்பாங்கு" கொண்டது என்றும் சீனா விமர்சித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 9. ஈரான்

  ராஜீய அடிப்படையில் ஈரானிய அணுசக்தி நெருக்கடியை தீர்க்க இயலவில்லை என்றால், அமெரிக்கா "மற்ற வாய்ப்புகளைத் தேர்வு செய்யத் தயாராக உள்ளது" என்று அமெரிக்க அதிபர் பைடன் அண்மையில் கூறியிருந்தார்.

  மேலும் படிக்க
  next
 10. அணு உலையை மீண்டும் இயக்கும் வடகொரியா: ஐ.நா கவலை

  வடகொரிய அரசு அந்த நாட்டில் உள்ள யங்பியன் எனும் இடத்திலுள்ள அணு உலையை மீண்டும் இயக்கத் தொடங்கியுள்ளது போல தெரிகிறது என்று ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அணுசக்தி முகமை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

  அணு ஆயுதங்கள் தயாரிக்க பயன்படும் புளூட்டோனியம் அந்த அணு உலையில் தயாரிக்கப்படுவதாக நம்பப்படுகிறது.

  சர்வதேச அணுசக்தி முகமையின் உறுப்பினராக இருந்த வட கொரிய அரசு 2009ஆம் ஆண்டு நீக்கப்பட்டது.

  எனினும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் வடகொரிய அணு உலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

  UN says North Korea appears to restart nuclear reactor
பக்கம் 1 இல் 5