ஜல்லிக்கட்டு

 1. ஜல்லிக்கட்டில் வென்ற காளைக்கு பரிசுத்தொகை தாமதமாவதாக வழக்கு - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

  பிரபுராவ் ஆனந்தன்

  ஜல்லிக்கட்டு

  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்ற தனது காளைக்கு அறிவிக்கப்பட்டிருந்த கார் மற்றும் சான்றிதழை வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆறு வாரங்களுக்குள் பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

  இது தொடர்பாக தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் பாபு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

  அதில், "2019ஆம் ஆண்டு நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில், எனது காளை மூன்றாம் பரிசு பெற்றது. அந்த உத்வேகத்தோடு 2021 ஜனவரி 16-ஆம் தேதி அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் எனது காளை பங்கேற்றது. அதிக புள்ளிகளைப் பெற்ற எனது காளைக்கு முதல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முதல் பரிசு பெற்ற காளைக்கு கார் ஒன்றும், சான்றிதழும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வரை பரிசு வழங்கப்படவில்லை. 2021ஆம் ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்ற எனது காளை கருடனுக்கு கார் மற்றும் சான்றிதழை வழங்கவும் அதுவரை 2022 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

  இந்த மனுவை நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி விசாரித்தார்.

  அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சந்தோஷ் பாபுவின் மனு பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதையடுத்து மனுதாரரின் மனுவை 6 வாரங்களுக்குள்ளாக பரிசீலிக்குமாறும் மனுதாரரின் காளையே முதல் பரிசு பெற்றது என உறுதி செய்யப்பட்டால் அதற்கான பரிசை 2 வாரங்களில் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

 2. ஜல்லிக்கட்டு போட்டிகள்

  ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் மாடுகள் பங்கேற்பதற்கு முன்பாக அந்த மாடுகள் 'நாட்டு மாடுகள்' என்பதை கால்நடை மருத்துவர்கள் உறுதிசெய்ய வேண்டும். எந்த கால்நடை மருத்துவராவது, கலப்பின மாடுகளை 'நாட்டு மாடுகள்' என சான்றளித்தால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரலாம் என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

  மேலும் படிக்க
  next
 3. ஜல்லிக்கட்டு போட்டிகள்: நாட்டு மாடுகளை மட்டும் பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

  முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  ஜல்லிக்கட்டு

  ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் நாட்டு மாடுகள் மட்டுமே பங்கேற்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டு கலப்பின மாடுகளை பயன்படுத்தக்கூடாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

  சென்னை ஒக்கியம் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த சேஷன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

  அந்த மனுவில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ஊர்மாடு, வடமாடு, எருது விடுதல் போன்ற போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே பயன்படுத்த உத்தரவிடவேண்டுமெனக் கோரியிருந்தார்.

  நாட்டு மாடுகள் இதற்காக வளர்க்கப்படாததால், அந்த மாடுகளின் இனமே அழிந்து வருவதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

  இந்த வழக்கை நீதிபதி என். கிருபாகரன், நீதிபதி பி. வேல்முருகன் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

  இந்தத் தீர்ப்பில், ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்போரும் விவசாயிகளும் நாட்டு மாடுகள் வளர்ப்பதை மானியம், ஊக்கத் தொகை போன்றவற்றை அளித்து அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டுமென நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

  கிராமங்களில் வளர்க்கப்படும் நாட்டு மாடுகளின்எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருவதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

  ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் மாடுகள் பங்கேற்பதற்கு முன்பாக அந்த மாடுகள் நாட்டு மாடுகள்தான் என்பதை கால்நடை மருத்துவர்கள் உறுதி செய்ய வேண்டுமென்றும்எந்த கால்நடை மருத்துவராவது, கலப்பின மாடுகளை நாட்டு மாடுகள் என சான்றளித்தால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

  மேலும், மாடுகளுக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பதை முடிந்த அளவு அரசு கைவிட வேண்டுமென்றும் இது 1960ஆம் ஆண்டின் மிருகவதை தடைச் சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்படக்கூடும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

  ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு என 2017ஆம் ஆண்டில் சட்டம் இயற்றப்பட்டதன் காரணமே, புளியங்குளம், உம்பளச்சேரி, மலைமாடு, காங்கேயம் போன்ற நாட்டு மாட்டு இனங்களைக் காப்பதுதான் என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

  வெளிநாட்டு மாடுகளுக்கும் கலப்பின மாடுகளுக்கும் திமில் பெரிதாக இல்லாத காரணத்தால் அவற்றைப் பிடிப்பது கடினமாக இருப்பதாகவும் மனுதாரர் கூறியதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

 4. மக்கள் நீதி மய்யத்தின் இளைஞர்கள், பெண்கள், விளையாட்டுக்கான செயல்திட்டம் - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021

  மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணிக்கு பெயர் வைக்கப்பட்டுவிட்டதா என்று கேட்டபோது, "முழுவதுமாக அவை நிறைந்த பின்னர் பெயர் வைப்போம். கூடுவதுதான் முக்கியம். 'சீரமைப்போம் தமிழகத்தை' என்பதே நல்ல பெயர்தான்" என்றார் கமல்.

  மேலும் படிக்க
  next
 5. Video content

  Video caption: கோவையில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முற்பட்ட 700 மாடுபிடி வீரர்கள்
 6. அலங்காநல்லூரில் சீறிப்பாயும் காளைகள்; அசராமல் எதிர்கொள்ளும் மாடுபிடி வீரர்கள்

  முதல் பரிசாக அதிகமாடுகளை பிடிக்கும் வீரருக்கு தமிழக முதல்வர் சார்பில் பரிசாக கார் ஒன்றும், சிறந்த காளையின் உரிமையாளருக்கு துணை முதல்வர் சார்பில் கார் ஒன்றும் என மொத்தம் இரண்டு கார்கள் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளன.

  மேலும் படிக்க
  next
 7. மு.ஹரிஹரன்

  பிபிசி தமிழுக்காக

  'வீரத் தமிழச்சி விஜி' தன் காளையுடன்.

  ஆண்கள் மட்டுமே பெரும்பாலும் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் வெகுசில பெண்கள் மாட்டின் உரிமையாளர்களாக பங்கேற்கின்றனர். ஆச்சரியமூட்டும் வகையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சில திருநங்கைகளும் பங்கேற்றனர்.

  மேலும் படிக்க
  next
 8. Video content

  Video caption: ஒரு மாத விரதம், கழுத்து மணி, ஐந்தே நிமிடம் - ஜல்லிக்கட்டு குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

  ஒரு மாத விரதம், கழுத்து மணி, ஐந்தே நிமிடம் - ஜல்லிக்கட்டு குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

 9. ஜல்லிக்கட்டு

  எட்டு சுற்றுகளாக நடந்த போட்டியில் தலா 28 காளைகளை அடக்கிய இருவர் சிறந்த வீரர்களாக தேர்வாயினர். அந்த நிகழ்வில் சீறிப்பாய்ந்த காளைகளை தீரத்துடன் அடக்க முயன்ற வீரர்களின் மயிர்க்கூச்செறியும் சிறந்த காட்சிகளின் படங்களின் இந்த பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

  மேலும் படிக்க
  next
 10. ஜல்லிக்கட்டு

  கடும் கட்டுப்பாடுகளோடு நடக்கும் இந்த போட்டியில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்று பரிசுகள் அளித்தனர்.

  மேலும் படிக்க
  next