தென் ஆப்பிரிக்கா

 1. ஒமிக்ரான்: பயணத் தடையை நீக்க தென்னாப்பிரிக்கா வலியுறுத்தல்

  கொரோனா

  தென்னாப்பிரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகள் மீதான பயணத் தடையை உடனடியாக நீக்க அந்நாட்டு அதிபர் சிரில் ராமபோசா வலியுறுத்தியுள்ளார்.

  "தென்னாப்பிரிக்கா மீது விதிக்கப்பட்டுள்ள இந்த தடை நியாயமற்றது. பாகுபாடானது. இதனால் பெரும் அதிருப்தியடைந்துள்ளோம். பயணத் தடை அறிவியல் ரீதியிலானதல்ல. இந்த தடையினால் தென்னாப்பிரிக்காவின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.

  பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா உள்ளிட்டவை பயணத் தடை விதித்திருக்கும் நாடுகளில் அடங்கும்.

  “அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வரை கொரோனா திரிபு அடைவதை நிறுத்த முடியாது. பயணத் தடையினால் பயன் இல்லை“ என்று ராமபோசா தெரிவித்துள்ளார்.

  திரிபு அடைந்த கொரோனா வைரஸ் ஒமிக்ரான் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டது. இது குறித்து உலக சுகாதார நிறுவனத்திற்கு (WHO) தெரிவிக்கப்பட்டது.

 2. நரேந்திர சிங் தோமர்

  2014ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது, குறைந்தபட்ச ஆதார விலை இரட்டிப்பாகியுள்ளது. முன்பு நெல் மற்றும் கோதுமை மட்டுமே குறைந்தபட்ச ஆதார விலையின் கீழ் கொள்முதல் செய்யப்பட்டன.

  Follow
  next
 3. ஒமிக்ரான் அச்சம்: வெளிநாட்டினருக்கு தடை விதிக்கிறது இஸ்ரேல்

  இஸ்ரேல்

  புதிய கொரோனா திரிபு பரவி வருவதையடுத்து வெளிநாடுகளில் இருந்து வருவோர் நாட்டுக்குள் நுழைவதற்கு இஸ்ரேல் 14 நாள்கள் தடைவிதிக்க இருக்கிறது.

  அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, இன்று நள்ளிரவு முதல் இந்தத் தடை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் திரிபு இஸ்ரேலில் ஒருவருக்கு தொற்றியிருப்பது இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.

  புதிய திரிபு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகள் தென்னாப்பிரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளில் இருந்து வருவோருக்கு பல நாடுகள் தடை விதித்திருக்கின்றன.

  50 பிறழ்வுகளைக் கொண்ட இந்தத் திரிபை "கவலைக்குரிய திரிபு" என உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தியுள்ளது.

 4. ஆண்ட்ரூவ் ஹார்டிங்

  பிபிசி நியூஸ், கேப் டவுன்

  மரம் அறுக்கும் படம்

  தண்ணீரைச் சேமிக்க கட்டாயப்படுத்தப்பட்ட அனுபவம், அல்லது அபராதம் விதித்தல் அல்லது பிற தண்டனைகளை எதிர்கொள்ள வேண்டிய அனுபவம், தெளிவாக பல குடும்பங்களில் நீண்ட காலத்துக்கு ஒரு நெடிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

  மேலும் படிக்க
  next
 5. 8 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி

  தென்னாப்பிரிக்கா

  மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  வெற்றி பெற 144 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 10 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து அந்த அணி இலக்கை எட்டியது.

  மார்க்ரம் 51 ரன்களையும் வான்டர் டஸன் 43 ரன்களையும் எடுத்தனர்.

  முன்னதாக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீசத் தீர்மானித்தது.

  மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் லீவிஸ் 56 ரன்களும், பொலார்ட் 26 ரன்களும் அடித்தனர். 20 ஓவர்களில் அந்த அணி 143 ரன்கள் எடுத்தது.

  தென்னாப்பிரிக்க அணியின் பிரிட்டோரியஸ் 3 விக்கெட்டுகளையும், கேஷவ் மகராஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

  4 ஓவர்களில் 14 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து ரஸ்ஸலின் விக்கெட்டை வீழ்த்திய நோர்க்யா ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

 6. தென்னாப்பிரிக்க அணிக்கு 144 ரன் இலக்கு

  தென்னாப்பிரிக்கா

  மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற 144 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீசத் தீர்மானித்தது.

  மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் லீவிஸ் 56 ரன்களும், பொலார்ட் 26 ரன்களும் அடித்தனர். 20 ஓவர்களில் அந்த அணி 143 ரன்கள் எடுத்தது.

  தென்னாப்பிரிக்க அணியின் பிரிட்டோரியஸ் 3 விக்கெட்டுகளையும், கேஷவ் மகராஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

 7. மேற்கு இந்தியத் தீவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு

  தென்னாப்பிரிக்கா

  உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீசத் தீர்மானித்திருக்கிறது.

  தென்னாப்பிரிக்க அணியில் குயின்டன் டி காக் இடம்பெறவில்லை. ரீஸா ஹென்ட்ரிக்ஸ் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார். இதேபோல் மேற்கு இந்தியத் தீவுகள் அணியில் மெக்காய்க்கு பதிலாக ஹேடன் வால்ஷ் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்

 8. நான்சி கசுங்கிரா

  பிபிசி ஆப்பிரிக்கா

  Two engineers with a solar panel

  தொலைதூர தனிமைப்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு சூரிய சக்தி மற்றும் காற்றாலை மூலம் இயங்கும் குறைந்த விலை மற்றும் தூய்மையான சக்தியை வழங்க, குறிப்பிட்ட பகுதிகளுக்கு சேவை செய்யும் மைக்ரோகிரிட்கள் எனப்படும் சுயாதீன எரிசக்தி அமைப்புகளை கானா அரசு பயன்படுத்துகிறது.

  மேலும் படிக்க
  next
 9. வளரும் நாடுகளுக்கு கூடுதலாக 500 மில்லியன் டோஸ் ஃபைசர் தடுப்பூசி மருந்து: ஜோ பைடன்

  கொரோனா தடுப்பூசி

  வளரும் நாடுகளுக்கு அமெரிக்க நிறுவனமான ஃபைசரின் கொரோனா தடுப்பூசி மருந்து வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

  உலக மக்கள்தொகையில் குறைந்தபட்சம் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட 11 பில்லியன் டோஸ்கள் தேவைப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

  இந்த நிலையில், இந்த எண்ணிக்கையில் 40 சதவீத அளவை எட்டுவதை குறைந்தபட்ச இலக்காக உலக சுகாதார அமைப்பு கொண்டுள்ளது.

  ஆனால், அப்போதும் இந்த இலக்கு நிறைவேறுமா என்பது சாத்தியமற்று உள்ளது. உலகின் செல்வந்த நாடுகள் பலவும் அவற்றின் மக்கள்தொகையில் பாதி பேருக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை போட்டு முடித்துள்ளன. குறைந்த வருவாய் கொண்ட நாடுகள் அவற்றின் மக்கள்தொகையில் வெறும் இரண்டு சதவீத அளவில்தான் முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுள்ளதாக ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக தரவு கூறுகிறது.

  வளரும் நாடுகளுக்கு ஏற்கெனவே 580 மில்லியன் டோஸ் தடுப்பூசி மருந்துகளை வழங்குவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது. அதில் 140 மில்லியன் டோஸ்கள் மட்டுமே தற்போது வழங்கப்பட்டுள்ளன என்கிறார் மக்கள்தொகை விவகாரங்களை கவனிக்கும் பிபிசி செய்தியாளர்

 10. தேனீக்கள் கொட்டி இறந்த பென்குயின்கள்- அரிதினும் அரிய நிகழ்வு

  கேப் டௌன் அருகே, அரிதிலும் அரிதாக நடக்கும் நிகழ்வு ஒன்றில் அழியும் நிலையில் உள்ள இனமான ஆப்பிரிக்க பென்குயின்கள் தேனீக் கூட்டம் ஒன்றால் கொல்லப்பட்டுள்ளன.

  மொத்தம் 63 ஆப்பிரிக்கப் பென்குயின்கள் இவ்வாறு இறந்துள்ளன என்று தென்னாப்பிரிக்காவில் உள்ள பறவை இன பாதுகாவலர்கள் கூறுகிறார்கள்.

  சிம்சன்ஸ்டவுன் எனும் ஊரில் உள்ள இரூந்த பென்குயின் காலனி, அங்கிருந்த கடற்கரை ஒன்றில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

  அவற்றின் உடலில் தேனீக்கள் கொட்டியதைத் தவிர வேறு எந்த காயமும் தென்படவில்லை.

  பென்குயின்களின் கண்களைச் சுற்றி தேனீக்கள் கொட்டி இருப்பது தெரியவந்துள்ளதாக உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது.

  Endangered South African penguins killed by swarm of bees near Cape Town
பக்கம் 1 இல் 7