இலங்கை சுதந்திரக் கட்சி

 1. யூ.எல். மப்றூக்

  பிபிசி தமிழுக்காக

  இலங்கை

  "தற்போது இலங்கை விவகாரத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவை கையில் எடுத்துள்ளது. அடுத்த மார்ச் மாதம் ஆணையர் அறிக்கையொன்றை சமர்ப்பிப்பார். அதேவேளை அவர்களின் பொறிமுறையும் செயற்பட்டுக்கொண்டே இருக்கும்," என்று அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 2. இலங்கை முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்

  இலங்கை
  Image caption: மங்கள சமரவீர, இலங்கை முன்னாள் அமைச்சர்

  இலங்கையின் மூத்த அரசியல்வாதியான முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர (65) இன்று காலமானார்.

  கோவிட் தொற்று காரணமாக கடந்த 13ம் தேதி கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மங்கள சமரவீர, தீவிர சிகிச்சை பிரிவில் பின்னர் சேர்க்கப்பட்டிருந்தார்.

  இந்த நிலையில் அவர் இன்று அதிகாலை காலமானதாக மருத்துவமனை தகவல்கள் உறுதிப்படுத்தின.

  இலங்கையின் தென் பகுதியான மாத்தறை மாவட்டத்தில் 1956ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி மங்கள சமரவீர பிறந்தார்.

  1983ம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடாக, தனது அரசியல் வாழ்க்கையை மங்கள சமரவீர ஆரம்பித்திருந்தார். அதனைத் தொடர்ந்து,

  1989ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்றார்.

  1994ம் ஆண்டு சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவின் தலைமையில் ஆட்சி அமைத்த அரசாங்கத்தில் தபால் மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சராக மங்கள சமரவீர நியமிக்கப்பட்டிருந்தார்.

  2004ம் ஆண்டு துறைமுகம், விமான சேவைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சராகவும் அவர் கடமையாற்றியிருந்தார்.

  2005ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரையான காலப் பகுதியிலும், 2015ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையான காலப் பகுதியிலும் மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சராக கடமையாற்றியிருந்தார்.

  2017ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை இலங்கையின் நிதி அமைச்சராக, மங்கள சமரவீர செயற்பட்டிருந்தார். சுமார் 35 வருடங்களுக்கு மேல் அரசியல் அனுபவத்தை கொண்ட மங்கள சமரவீர, 2019ம் ஆண்டு அரசியலிலிருந்து ஓய்வு பெற்ற நிலையிலும், சில அரசியல் செயற்பாடுகளை இறுதித் தருணங்களில் முன்னெடுத்து வந்திருந்தார்.

  இவ்வாறான நிலையிலேயே, கோவிட் தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மங்கள சமரவீர, இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

 3. இலங்கை அரசின் முக்கிய இணையதளங்களில் ஊடுருவல்

  இலங்கை

  இலங்கை அரசுக்கு சொந்தமான முக்கிய மூன்று இணையத்தளங்கள் ஊடுருவப்பட்டுள்ளன.சீனாவிற்கான இலங்கை தூதரகம், ரஜரட்ட பல்கலைக்கழகம், சுகாதார அமைச்சு ஆகியவற்றின் இணையத்தளங்கள் ஊடுருவலை சந்தித்துள்ளதாக இலங்கை கணிணி அவசர பிரிவு தெரிவித்துள்ளது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.யுத்தம் மெளனிக்கப்பட்டு இன்றுடன் 12 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையிலேயே, இந்த இணையத்தள ஊடுருவல் நடந்துள்ளது. கடந்த காலங்களிலும் மே 18ஆம் தேதி விடுதலைப்புலி ஆதரவாளர்கள் என கூறுவோரால் பல இணையதளங்கள் ஊடுருவப்பட்டிருந்தன. தற்போது அந்த இணையதளங்கள் மீட்கப்பட்டு இயல்புநிலைக்கு திரும்பியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 4. ராஜபக்ஷ

  கோட்டாபய ராஜபக்ஷ ஹிட்லராக மாறுவார் என ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்திருந்தமைக்கு பௌத்த விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 5. சரத் வீரசேகர

  தேசிய கல்விக் கொள்கைக்கு முரணாக, மதம் மற்றும் மொழிகளை மாத்திரம் கற்பிக்கும் மதரஸா பாடசாலைகளையே தாம் தடை செய்யப் போவதாகவும், முஸ்லிம் சமூகம் மற்றும் முஸ்லிம் அமைப்புகளிடமிருந்து தமக்கு அதற்கான அனுமதி கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் சரத் வீரசேகர கூறினார்.

  மேலும் படிக்க
  next
 6. Video content

  Video caption: இலங்கைக்கு எதிரான தீர்மானம்: வாக்கெடுப்பை தவிர்த்த இந்தியா, தமிழர்களுக்கு பயன் தருமா
 7. இலங்கை

  இலங்கை அரசாங்கம் அண்மை காலமாக முன்னெடுத்த அடக்குமுறைகள், மனித உரிமை பேரவையில் ஒரு வலுவான தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதற்கான முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 8. இலங்கை

  ஜெனிவா மனித உரிமை பேரவை அமர்வுகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, மக்களை தூண்டி விடுதல் மற்றும் கொரோனா பரவல் ஆகிய காரணங்களை முன்னிலைப்படுத்தி நீதிமன்ற உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

  மேலும் படிக்க
  next
 9. மனோ கணேசன்

  சிறுபான்மை சமூகத்தினரின் உரிமை சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 3ஆம் தேதி, கிழக்கு மாகாணத்தின் பொத்துவில் பிரதேசத்திலிருந்து ஆரம்பித்த நடை பயணப் போராட்டம், ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 7) பொலிகண்டியில் நிறைவடைந்தது. வழிநெடுகிலும் தனது செயல்பாடுகள் பதிவுக்கு உட்படுத்தப்பட்டதாக மனோ கணேசன் கூறுகிறார்.

  மேலும் படிக்க
  next
 10. ரஞ்சன் அருண் பிரசாத்

  பிபிசி தமிழுக்காக

  இலங்கை சுதந்திர தினம்

  இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். நாட்டின் ஏனைய பகுதிகளில் சிங்கள மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட போதிலும், தமிழ் மொழிக்கும் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 7