கிரிக்கெட்

 1. கவுதம் கம்பீருக்கு ஒரே வாரத்தில் மூன்றாவது கொலை மிரட்டல்: காவல்துறை

  கம்பீர்

  முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக தலைவருமான கெளதம் கம்பீருக்கு கடந்த 6 நாட்களில் மூன்றாவது முறையாக 'ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்' அமைப்பிடம் இருந்து கொலை மிரட்டல் வந்ததாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்தனர்.

  நள்ளிரவு 1.37 மணிக்கு வந்த அந்த மின்னஞ்சலில், "எங்கள் உளவாளிகள் டெல்லி காவல்துறையில் உள்ளனர். உங்களைப் பற்றிய அனைத்து தகவல்களும் பெறப்படுகின்றன." என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.

  முன்னதாக கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் கம்பீருக்கு கொலை மிரட்டல் வந்தது.

  இந்த மின்னஞ்சல் தொடர்பான தகவல்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும், அது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் டெல்லி காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

  "கௌதம் கம்பீருக்கு செவ்வாய்க்கிழமை காலை 9.32 மணிக்கு அவரது அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் கணக்கில் முதல் கொலை மிரட்டல் வந்தது. உன்னையும் உன் குடும்பத்தையும் கொல்வோம் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது" என்று கம்பீர் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

  இதைத் தொடர்ந்து கம்பீருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 2. ஷாருக்கான்

  ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் விளையாடிய ஷாருக்கான் 153 ரன்களை குவித்தார். உடற்பயிற்சியில் அதிகளவில் ஈடுபாடு காட்டுவதும் போட்டியை எளிமையாக அணுகுவதே ஷாருக்கின் பாணி.

  மேலும் படிக்க
  next
 3. ரோஹித் சர்மா & ராகுல் டிராவிட்

  யுவேந்திர சாஹல் வீசிய 10.3ஆவது பந்தில் சூர்யகுமாரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் மார்டின் குப்டில். அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், ஆடம் மில்னே, இஷ் சோதி என அனைவரும் ஒற்றை இலக்கத்தில் பெவிலியன் திரும்பினர்.

  மேலும் படிக்க
  next
 4. "சென்னை அணியின் தலைவராக தோனியே தொடர வேண்டும்": மு.க. ஸ்டாலின்

  எத்தனை சீஸன்கள் வந்தாலும் தோனியே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராகத் தொடர வேண்டுமென முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். தனது கடைசி ஐ.பி.எல். போட்டி சென்னையில்தான் இருக்குமென சென்னை அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி தெரிவித்திருக்கிறார்.

  2021ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கான பாராட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் சென்னை அணியின் உரிமையாளர் ஸ்ரீநிவாஸன், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா, ஐபிஎல்லின் தலைவரான பிரிஜேஷ் பட்டேல், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  chennai super kings
 5. ஐ.பி.எல் 2021 வெற்றிக் கோப்பையுடன் மகேந்திர சிங் தோனி, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன்.

  2021ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கான பாராட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை நடைபெற்றது.

  மேலும் படிக்க
  next
 6. அஸீம் ரஃபீக்

  ரஃபீக் "இனரீதியிலான துன்புறுத்தல் மற்றும் கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்" என்பதை ஏற்றுக் கொள்வதாக யார்க்ஷயர் கூறியது. மேலும் ரஃபீக் கூறிய 43 குற்றச்சாட்டுகளில் ஏழு குற்றச்சாட்டுகளை சுயேச்சையான விசாரணைக் குழு உறுதி செய்தது.

  மேலும் படிக்க
  next
 7. ரோஹித் மற்றும் டிராவிட்

  ராகுல் டிராவிட் - ரோஹித் சர்மா இணை அதிவிரைவாக ஓரணியாக ஒருங்கிணைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 8. விவேக் ஆனந்த்

  பிபிசி தமிழ்

  2021 டி20 உலகக் கோப்பை சாம்பியனான ஆஸ்திரேலியா

  ஆஸ்திரேலிய அணிக்கு பந்துவீச்சில் எப்படி நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சனை தவிர வேறுயாரும் குடைச்சல் கொடுக்கவில்லையோ, அதேபோல ஆஸ்திரேலியாவின் பேட்டிங்கின்போதும் டிரென்ட் போல்ட்டை தவிர வேறுயாரும் ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தவில்லை.

  மேலும் படிக்க
  next
 9. டி20 உலக கோப்பையை ஆஸ்திரேலியா வென்றது - 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வீழ்ந்தது

  டி20 உலக கோப்பை

  ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வந்த டி20 உலக கோப்பை போட்டியில் இறுதியாக களத்தில் மோதிய நியூசிலாந்து அணியை ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது.

  இது ஆஸ்திரேலியா அணி டி20 உலக கோப்பை வரலாற்றிலேயே முதல் முறையாக பெறும் வெற்றியாகும்.

  முன்னதாக, ஒதுக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை நியூசிலாந்து அணி எடுத்திருந்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி வெற்றி இலக்கு ரன்களை இரண்டு விக்கெடுகளை இழந்த நிலையில், 19ஆவது ஓவரில் எட்டி வெற்றிக் கோப்பையை பெற்றது.

  இத்தனைக்கும் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணி எதிர்பார்த்தபடி சிறப்பாக தனது ஆட்டத்தை தொடங்கவில்லை. ஆரோன் ஃபிஞ்ச் வெறும் ஐந்து ரன்கள் எடுத்த நிலையில், அவுட் ஆனார்.

  ஆனால், மிட்செல் மார்ஷ், தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னருடன் கூட்டு சேர்ந்து 92 ரன்களை தங்களின் அணி குவிக்கும் வரை ஆடினார். 38 பந்துகள் கடந்தபோது வார்னர் 53 ரன்கள் அடித்தார். அப்போது, ஆஸ்திரேலிய அணி 107 ரன்களை எடுத்திருந்தது. இதன் மூலம் இந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு கைகூடி வரும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியது.

  இந்த அணியில் கடைசி வரை ஆட்டமிழக்காத வீரராக மிட்செல் மார்ஷ் 77 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

  முன்னதாக, டாஸில் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் செய்யுமாறு நியூசிலாந்தை கேட்டுக் கொண்டது.

  இதைத்தொடர்ந்து துபை சர்வதேச விளையாட்டரங்களில் இரவு 7.30 மணியளவில் தொடங்கிய ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வந்தது.

  ஆட்டம் தொடங்கிபோது நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 47 பந்துகளில் 85 ரன்களை எடுத்தார். அவர் ஹேசல்வுட்டின் பந்தில் அவுட் ஆனார்.

  பிறகு மார்டின் குப்டில் 35 பந்துகளில் 28 ரன்களை எடுத்தார். டரில் மிட்செல் 8 பந்துகளில் 11 ரன்களையும் கிளென் ஃபிலிப்ஸ் 17 பந்துகளில் 18 ரன்களையும் எடுத்திருந்தார். இந்த இன்னிங்சில் மிட்செல், வில்லியம்சன், ஃபிலிப்ஸ் ஆகியோரை வீழ்த்தினார் ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேசல்வுட்.

  ஒருபுறம் ஒரு நாள் சர்வதேச போட்டியில் உலக கோப்பையை ஐந்து முறை வென்ற பெருமையை பெற்றுள்ள ஆஸ்திரேலியா, இப்போது டி20 உலக கோப்பையையும் கைப்பற்றி தமது சாதனை திறனை கிரிக்கெட் உலகில் நிரூபித்திருக்கிறது.

  ஆனால், டி20 உலக கோப்பையில் கடைசிவரை களத்தில் இருந்து ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் அளவுக்கு நியூசிலாந்து அணி வந்ததுதான் கிரிக்கெட் ரசிகர்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய அந்த அணியின் முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

  டி20 உலக கோப்பை
  View more on twitter
 10. Video content

  Video caption: நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்பட்ட ஹசன் அலி - இந்திய மனைவி, ஷியா மதப் பிரிவு சர்ச்சை

  டி20 உலக கோப்பை போட்டியில் கேட்ச்சை தவற விட்ட பாகிஸ்தான் வீரர் ஹசன் அலியை சமூக ஊடகங்களில் ரசிகர்கள் வசைமாறி பொழிந்து விமர்சித்து வருகின்றனர்.

பக்கம் 1 இல் 59