மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (மதிமுக)

 1. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழ்

  வைகோ

  ``மறுமலர்ச்சி தி.மு.கவின் சட்டவிதிகளின்படி நானே அவருக்கு பொறுப்பு வழங்கியிருக்கலாம். ஆனால், வாக்கெடுப்பு நடத்தி நிர்வாகிகள் அவரைத் தேர்வு செய்துள்ளனர். துரைக்கு பதவி வழங்கப்பட்டது என்பது வாரிசு அரசியல் இல்லை. ஒருவரை திணிப்பதுதான் வாரிசு அரசியல்."

  மேலும் படிக்க
  next
 2. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழ்

  வையாபுரி

  ம.தி.மு.கவின் தலைமைக் கழக செயலாளராக வைகோவின் மகன் துரை வையாபுரி நியமிக்கப்பட்டுள்ளார். ` கூட்டத்தில் பங்கேற்ற 106 பேரில் 104 பேர் வையாபுரிக்கு ஆதரவு தெரிவித்தனர். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த 2 பேர் யார் எனத் தெரியவில்லை' என்கின்றனர் ம.தி.மு.க நிர்வாகிகள். என்ன நடந்தது?

  மேலும் படிக்க
  next
 3. வந்துகொண்டிருக்கும் செய்திமதிமுக கழக செயலாளராக துரை வையாபுரிக்கு தலைமைக்கழக செயலாளர் பதவி

  துரை வைகோ
  Image caption: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் அவரது மகன் துரை வையாபுரி

  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு தலைமைக் கழக செயலாளர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

  இது தொடர்பாக சென்னையில் இன்று நடைபெற்ற மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் துரை வையாபுரிக்கு கழக பொறுப்பு வழங்குவது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

  இதில் பதிவான 106 வாக்குகளில் 104 வாக்குகள் துரை வையாபுரிக்கு கட்சிப் பதவி வழங்க ஆதரவாக கிடைத்தன.

  இது குறித்து இன்று மாலையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "துரை வையாபுரிக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ள பதவி. நியமன பதவிதான். இதை செய்வதற்கு கட்சியின் பொதுச்செயலாளருக்கு அதிகாரம் உள்ளது. கட்சியின் விதிகளில் இதற்கான இடம் உள்ளது," என்று தெரிவித்தார்.

 4. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழ்

  வைகோ மகன் துரை

  "மதிமுகவில் இளைஞரணி செயலாளர் பொறுப்பில் துரை வையாபுரியை அமர்த்த வேண்டும் என்பதில் நிர்வாகிகள் உறுதியாக உள்ளனர். அரசியலுக்கு வந்து சேவை செய்ய வேண்டும் என துரையும் நினைக்கிறார்," என்று கூறுகின்றனர்.

  மேலும் படிக்க
  next
 5. செப்டம்பர் 14ஆம் தேதி நேரலை நிறைவடைகிறது

  பிபிசி நேயர்களுக்கு வணக்கம்,

  இத்துடன் இந்த பக்கத்தில் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம். இந்த பக்கத்தில் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி.

  பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

  பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்

  பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

 6. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  திருமாவளவன்

  பேரவையில் இடங்களை ஒதுக்கீடு செய்யும்போது ம.தி.மு.க, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, புரட்சி பாரதம் என கூடுதலாக 5 கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. இவை '2021' தேர்தலில் அவற்றின் சின்னத்தில் போட்டியிடவில்லை என்கிறார் வழக்கு தொடர்ந்த மனுதாரர்.

  மேலும் படிக்க
  next
 7. நடராஜ் சுந்தர்

  பிபிசி தமிழுக்காக

  என் ஆர் காங்கிரஸ்

  சட்டப்பேரவையில் சபாநாயகர் மூலம் பதவி ஏற்காத நிலையில் மத்தியில் அங்கம் வகித்த தி.மு.க தனது செல்வாக்கை பயன்படுத்தி மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்களை நியமித்து அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்த இந்த நடைமுறையை 1990ஆம் ஆண்டே திமுக அரங்கேற்றியது.

  மேலும் படிக்க
  next
 8. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  கமல்ஹாசன்

  சட்டமன்றத் தேர்தலில் கிடைத்த தோல்வி, நிர்வாகிகள் விலகல் என சோதனையான சூழலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சிக்கித் தவிக்கிறது. ஆனாலும், நிர்வாகிகளுடன் கலந்துரையாடல், கருத்துகளைக் கேட்பது என உற்சாகத்துடன் கமல் வலம் வருகிறார். என்ன நடக்கிறது ம.நீ.மவில்?

  மேலும் படிக்க
  next
 9. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  அதிமுக மாநிலங்களவை

  தமிழகத்தில் 3 ராஜ்யசபா இடங்கள் காலியாக உள்ளதால், விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த மூன்று இடங்களிலும் தி.மு.கவே வெல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. தி.மு.க சார்பில் களமிறங்கப் போகும் வேட்பாளர்கள் யார்.. யார்?

  மேலும் படிக்க
  next
 10. திமுக

  தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அமருக்கும் இருக்கை, வரலாற்றுச் சிறப்புமிக்கது. ஐக்கிய ராஜ்ஜியத்தின் பிரதிநிதிகள் சபையில் உள்ள சபாநாயகரின் இருக்கையைப் போன்றே இந்த இருக்கையும் வடிவமைக்கப்பட்டது. வில்லிங்டன் பிரபு சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்தபோது 1922 மார்ச் 6ஆம் தேதி இந்த நாற்காலியை பரிசளித்தார். பெருங்காவூர் ராஜகோபாலாச்சாரி அவையின் முதல் தலைவராக இந்த நாற்காலியில் அமர்ந்தார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 4