நீரவ் மோதி

 1. கொரோனா இரண்டாவது அலையில் 594 மருத்துவர்கள் உயிரிழப்பு - ஐஎம்ஏ

  கொரோனா

  கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தால் இந்தியாவில் இதுவரை 594 பேர் உயிரிழந்துள்ளனர் என்று இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) தெரிவித்துள்ளது.

  முன்பு ஒரே நாளில் நான்கு லட்சம் பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், தற்போது அந்த தாக்கம் குறைந்து காணப்படுவதாக கூறிய ஐஎம்ஏ, இரண்டாம் அலையில் மட்டும் 584 மருத்துவர்கள் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

  இதில் அதிகபட்சமாக டெல்லியில் 107, பிகாரில் 96, உத்தர பிரதேசத்தில் 67, ஜார்கண்டில் 39, மேற்கு வங்கத்தில் 25, ஒடிஷாவில் 22, தமிழ்நாட்டில் 21 என்ற அளவில் மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக ஐஎம்ஏ பட்டியல் வெளியிட்டுள்ளது.

 2. பிபிசி தமிழ் நேரலை செய்திகள் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்

  நேயர்களுக்கு வணக்கம். இந்த நேரலை பக்கத்தில் இன்றைய நாளில் உலக அளவிலும் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளின் சுருக்கத்தை தொகுத்து வழங்குகிறோம்.

 3. வைர வியாபாரி மெஹுல் சோக்ஸியை இந்தியா கொண்டு வர நடவடிக்கை: சிபிஐ

  Mehul Choksi

  இந்தியாவின் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,600 கடன் மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் நீரவ் மோதியுடன் சேர்த்து குற்றம்சாட்டப்பட்டுள்ள மெஹுல் சோக்ஸி டொமினிகா நாட்டில் பிடிபட்டதையடுத்து, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும்படி டொமினியா அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய புலனாய்வுத்துறையான சிபிஐ தெரிவித்துள்ளது.

  ஆன்டிகுவா மற்றும் பர்புடா நாட்டில் குடியுரிமை பெற்றுள்ள மெஹுல் சோக்ஸி, 2018ஆம் ஆண்டு முதல் அந்நாட்டில் வசித்து வந்தார்.

  இந்த நிலையில், கியூபா செல்லும் திட்டத்திடன் அங்கிருந்து தப்பித்து டொமினிகா நாட்டுக்கு படகில் சென்றபோது இன்டர்போல் அதிகாரிகளிடம் அவர் பிடிபட்டார்.

  அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு டொனினிகா அரசை மெஹுல் குடியுரிமை பெற்றுள்ள ஆன்டிகுவா நாட்டின் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

  இந்த செய்தியின் முழுமையான தகவலை அறிய இங்கே கிளிக் செய்து படிக்கவும்.

 4. மெகுல் சோக்சி

  ஆன்டிகுவாவில் தனக்கு எதிரான விசாரணை வளையத்தை சிபிஐ விசாரித்து வருவதை அறிந்து மெஹுல் சோக்ஸி, டொமினிகாவுக்கு நேற்று முன்தினம் இரவு தப்பிச் சென்ற போது இன்டர்போல் அதிகாரிகளிடம் அவர் பிடிபட்டுள்ளார். ஆன்டிகுவாவில் இருந்து படகு மூலமாக அவர் டொமினிகாவுக்கு தப்பியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 5. பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு 4 வயது குழந்தை கொலை

  விசாரணையில் அந்த பெண்ணின் வீட்டிற்கு அருகே வசிக்கும் முன்னாள் ராணுவ வீரரான 60 வயதான மீனாட்சி சுந்தரம், நேற்று மாலை வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்தது தெரிய வந்தது.

  மேலும் படிக்க
  next