வீடியோ விளையாட்டுகள்

 1. Video content

  Video caption: ஸ்க்விட் கேம் தொடரால் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாதாரர்கள் வெகுவாக அதிகரிப்பு

  ஸ்க்விட் கேம் தொடரால் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாதாரர்கள் வெகுவாக அதிகரிப்பு

 2. மைக்ரோசாப்ஃட் விண்டோஸ் 11

  கேமிங் பிரியர்களுக்கு நற்செய்தியாக, சென்ட்ரல் ப்ராசசர்கள் வழியாக இல்லாமல், நேரடியாக ஸ்டோரேஜ் டிரைவர்களை கிராபிக்ஸ் கார்டு அணுகும் வகையில் விண்டோஸ் 11 உள்ளது. இது கேமிங் செயலி வேகமாக திறக்க வழியை ஏற்படுத்தும். ஆனால், எல்லா கணிப்பொறியிலும் இது முடியுமா என கூற முடியாது.

  மேலும் படிக்க
  next
 3. Video content

  Video caption: கொரோனாவில் இருந்து மீண்ட சீனர்களுக்கு உள்ளூரில் கைகொடுக்கும் நீர் சறுக்கல் விளையாட்டு

  கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகளால் சீனாவில் பயண தடை உள்ளது. இந்நிலையில் பொழுதுபோக்கு விளையாட்டாக இருந்த நீர் சறுக்கல் விளையாட்டு ஹைனான் தீவில் சுற்றுலா தொழிலாகியிருக்கிறது.

 4. விஷ்ணுப்ரியா ராஜசேகர்

  பிபிசி தமிழ்

  ஆன்லைன் கேமிங்

  இந்த பொதுமுடக்க காலத்தில் பதின் பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் இடையே அதீதமாக இணைய விளையாட்டில் ஈடுபடுதல் (Binge gaming) என்ற நிலை அதிகரித்துள்ளதாக ஷட் கிளினிக் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 5. தீபிகா குமாரி

  ஜப்பானிலேயே பலத்த எதிர்ப்புக்குப் பிறகு, இந்திய நேரப்படி இன்று (ஜூலை 23) மாலை 4.30 மணிக்கு டோக்யோ ஒலிம்பிக் போட்டி தொடக்க நிகழ்ச்சி நடக்கவுள்ளது.

  மேலும் படிக்க
  next
 6. Video content

  Video caption: பப்ஜி விளையாட்டின்போது சிறார்களுடன் கீழ்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி உரையாடினார் மதன்
 7. யூட்யூப் சேனலில் 20 மணி நேரம் வேலை செய்தே பணம் சம்பாதித்தார் மதன் - மனைவி கிருத்திகா

  PUBG MADHAN

  யூட்யூப் சேனலில் 20 மணி நேரத்திற்கும் மேலாக விளையாடியே தனது கணவர் சம்பாதித்ததாகவும் எந்த பண மோசடியிலும் அவர் ஈடுபடவில்லை என்றும் கூறியிருக்கிறார் "பப்ஜி' மதனின் மனைவி கிருத்திகா. மதன் கைது செய்யப்பட்டுள்ள அதே வழக்கில் கிருத்திகாவும் கைதாகி தற்போது ஜாமீனில் வெளியே இருக்கிறார்.

  இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் 'பப்ஜி' விளையாட்டை யூட்யூப் சேனலில் நேரலையாக ஒளிபரப்பி, ஆபாச வர்ணனைகள் மற்றும் சிறார், பெண்களை கீழ்தரமாக பேசியும் பணம் வசூலித்தார் என்றும் கூறி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கிறார் மதன். இவரது மனைவி கிருத்திகா சென்னையில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

  அப்போது மதன் சட்டவிரோதமாக எந்தச் செயலையும் செய்யவில்லை என்றும் அவர் சொத்துகளை குவித்ததாக கூறப்படுவது பொய் என்றும் தெரிவித்தார்.

  கிருத்திகாவின் பேட்டியின் முழு விவரத்தை அறிய இங்கே சொடுக்கவும்

 8. பப்ஜி மதன்

  மதன் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் 'பப்ஜி' விளையாடுவார். நான்கு மணி நேரம்தான் தூங்குவார். அதன் மூலமாகவும் சூப்பர் சாட் மூலமாகவும்தான் பணம் வந்ததே தவிர, வேறு விதத்தில் பணம் வரவில்லை. இப்போது எங்களுடைய வங்கிக் கணக்கு முடக்கப்பட்டிருக்கிறது. வீட்டுச் சாவி கூட காவல்துறையிடம்தான் இருக்கிறது என்கிறார் கிருத்திகா.

  மேலும் படிக்க
  next
 9. வந்துகொண்டிருக்கும் செய்தியூட்யூப்பர் பப்ஜி மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

  PUBG MADHAN
  Image caption: 'பப்ஜி' மதன்

  யூட்யூப் சமூக வலைதளத்தில் மிகவும் கீழ்தரமான ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி காணொளிகளை வைரலாக்கும் 'பப்ஜி' மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் சென்னை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

  ஆன்லைன் விளையாட்டுகளுக்கு துணுக்குகள் தருவதாகக் கூறி அதற்கென யூட்யூப் சமூக வலைதளத்தில் தனக்கென ஒரு பிரத்யேக பக்கத்தை நிறுவி லட்சக்கணக்கானோரை பின்தொடருவோரை கொண்டிருப்பவர் மதன்.

  இவர் துணுக்குகள் தரும் ஆன்லைன் விளையாட்டான பப்ஜி, சிறார்கள் தரப்பில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், இவரது அடைமொழி 'பப்ஜி' ஆனது.

  ஆன்லைன் விளையாட்டுலகின் சமூக வலைதள பயனர்கள் இடையே பப்ஜி மதன் என அழைக்கப்படும் இவர், மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி தமது பக்கத்தில் பங்கேற்கும் சிறார்கள், பெண்களிடம் பேசுவதாக சர்ச்சை எழுந்தது.

  இதைத்தொடர்ந்து அவருக்கு எதிராக 150க்கும் அதிகமான புகார்கள் சென்னை காவல்துறை இணையதளம் வாயிலாக பதிவு செய்யப்பட்டன. அவற்றின் மீது சென்னை சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

  பல வார தேடுதலுக்குப் பிறகு பப்ஜி மதனை கைது செய்த காவல்துறையினர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவின்பேரில் அவரை நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.

  இந்த வழக்கில் மதனுக்கு உதவியதாக அவரது மனைவி கிருத்திகா எட்டு வயது கைக்குழுந்தையுடன் சென்னை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். பின்னர் குழந்தையின் உடல் நலனை கருத்தில் கொண்டு அவரை ஜாமீனில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

  இதையடுத்து தன்னையும் ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்த மனுக்களை சைதாப்பேட்டை நீதிமன்றம் நிராகரித்தது.

  இதற்கிடையே, ஆதரவற்றோருக்கு உதவுவதாகக் கூறி ஆன்லைனில் பலரிடம் பணம் வசூலித்து மோசடி செய்ததாக மதன் மீது மேலும் சில வழக்குகள் பதிவாகின.

  இந்த நிலையில், அதிக புகார்கள் மற்றும் வழக்குகள் பதிவானதைத் தொடர்ந்து பப்ஜி மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை நகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

 10. மதன்

  மதன் மீது 159 புகார்கள் பதிவாகியுள்ளன. அதில் ஒரு புகாரின் பேரில் பெண்களை அபாசமாகப் பேசுதல், ஆபாசமாகத் திட்டுதல், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், தடைசெய்யப்பட்ட செயலியைப் பயன்படுத்துதல் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 4