காவிரி

  1. காவிரி மேகேதாட்டு தடுப்பணை: பிரதமருக்கு கடிதம் அனுப்ப புதுச்சேரி அரசு முடிவு

    நடராஜன் சுந்தர், புதுச்சேரி

    புதுச்சேரி
    Image caption: காவிரி விவகாரம் தொடர்பாக அமைச்சர்களுடன் புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார்

    காவிரியின் குறுக்கே கர்நாடகா அரசு கட்ட உத்தேசிக்கும் மேகேதாட்டு தடுப்பணைக்கு அனுமதி தரக்கூடாது என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் அனுப்ப புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.

    இதே விவகாரம் தொடர்பாக சமீபத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அதில், மேகேதாட்டு தடுப்பணைக்கு அனுமதி தரக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

    அதை மேற்கோள்காட்டி, புதுச்சேரிக்கும் காவிரி நீர் விவகாரத்தில் தொடர்பிருப்பதால் தமிழக அரசு போல புதுச்சேரி அரசும் அனைத்து கட்சி கூட்டத்தை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் நேற்று சந்தித்து மனு அளித்தார்.

    இந்த நிலையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமையில் அவரது அலுவலகத்தில் காவிரி விவகாரம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் பொதுப்பணித்துறை லட்சுமி நாராயணன், காரைக்கால் பிராந்திய அமைச்சர் சந்திர பிரியங்கா, சட்டமன்ற உறுப்பினர்கள் திருமுருகன், பி.ஆர்.சிவா மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    "காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. அந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டு மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்கு நீர் கிடைக்காத நிலை உருவாகும். இதனால் விவசாயத்தை பிரதான கொண்டுள்ள காவிரி கடைமடைப் பகுதியான புதுச்சேரி பிராந்தியமான காரைக்காலுக்கு‌ பாதிப்பை ஏற்படுத்தும்," என்று கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசினர்.

    முன்னதாக காவிரி நீர் காரைக்கால் வந்தபோது 15 ஹெக்டேர் விவசாயம் செய்தனர். ஆனால் , தற்போது 4 ஆயிரம் ஹெக்டேர் மட்டுமே விவசாயம் செய்கின்றனர். காவிரியிலிருந்து புதுச்சேரிக்கு வர வேண்டிய 7 டி.எம்.சி நீரை கர்நாடகா அரசு வழங்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மற்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு புதுச்சேரி அரசு சார்பில் கடிதம் எழுதுவது என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

  2. மேகேதாட்டு அணை பிரச்னை: புதுச்சேரி அரசும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வலியுறுத்தும் விழுப்புரம் எம்.பி

    CAUVERY TAMIL NADU KARNATAKA
    Image caption: புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணனிடம் மனு அளிக்கும் ரவிக்குமார், எம்.பி

    கர்நாடகா மாநிலத்தில் உள்ள மேகேதாட்டுவில் அணை கட்டும் அந்த மாநில அரசின் முயற்சியை தடுக்க, தமிழக வழியில் புதுச்சேரி அரசும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானம் நினைவேற்ற வேண்டும் என்று அதன் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனிடம் வலியுறுத்தியிருக்கிறார் விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினர் ரவிக்குமார்.

    இது தொடர்பாக அவர் அமைச்சர் லட்சுமி நாராயணனிடம் மனு அளித்துள்ளார். அதன் விவரம்:

    "புதுச்சேரி மாநிலத்தின் பிரத்யேகமான புவியியல் சூழல் இங்கு தண்ணீரை சேமித்து வைக்கும் நீர்த்தேக்கம் எதையும் கட்டுவதற்கு உகந்ததாக இல்லை. இங்குள்ள நிலம் களிமண் நிலமாக இருப்பதால் நெல்லைத்தவிர வேறு பயிர் எதையும் சாகுபடி செய்ய முடியாது.

    புதுச்சேரியில் சாகுபடி செய்யப்படும் மொத்த நிலப்பரப்பான 27 ஆயிரம் ஏக்கர் என்பது நீண்டகாலமாக நிலையானதாக மாறாமல் உள்ளது. இங்குள்ள விவசாயம் பெரிதும் வடகிழக்குப் பருவமழையைத்தான் நம்பியுள்ளது. அதுமட்டுமின்றி கடலோரப் பகுதி முழுவதும் கடல்நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டது. எனவே புதுச்சேரி மாநில விவசாயிகள் காவிரி நீரை மட்டுமே நம்பியுள்ளனர்.

    காவிரிப் பிரச்னை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் நம்பியார், புதுச்சேரிக்கு 9 டிஎம்சி தண்ணீர் வேண்டும் என வாதாடினார். ஆனால் நடுவர் மன்றத்தால் ஒதுக்கப்பட்ட 7 டிஎம்சி தண்ணீரைத்தான் உச்சநீதிமன்றமும் ஒதுக்கியது .

    நடுவர் மன்றம் புதுச்சேரியில் குறுவை மற்றும் சம்பா இணைந்த முதல்போக சாகுபடி 27,145 ஏக்கரில் நடப்பதாகவும், தாளடி என்னும் இரண்டாம் போக சாகுபடி 15,388 ஏக்கரில் நடப்பதாகவும் உறுதிசெய்தது. புதுச்சேரியின் பிரத்யேகமான புவியியல் நிலையை கருத்தில்கொண்டு அங்குள்ள விவசாயிகள் இரண்டு போகம் சாகுபடிசெய்வதற்கான உரிமையை உச்சநீதிமன்றமும் தனது இறுதித் தீர்ப்பில் அங்கீகரித்துள்ளது. அதற்காக ஒதுக்கப்பட்ட 7 டிஎம்சி நீரை தமிழ்நாட்டின் வழியாக நந்தலாறு, நட்டாறு, வஞ்சி ஆறு, நூலாறு, அரசலாறு, திருமலைராஜன் ஆறு, பிரவிடையான் ஆறு ஆகிய 7 ஆறுகளின் மூலம் புதுச்சேரி பெற வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    தற்போது காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்னாடக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. அந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டுக்கான தண்ணீர் கிடைக்காது. அதனால் புதுச்சேரிக்கும் காவிரி நீர் கிடைக்காத நிலை உருவாகும். மேகேதாட்டு அணையைத் தடுப்பதற்காகத் தமிழ்நாடு அரசு சட்ட ரீதியாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பதோடு அரசியல் ரீதியில் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தர 12.07.2021 அன்று சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தியுள்ளது. அதில் 3 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

    புதுச்சேரி அரசும் உடனடியாக இந்தப் பிரச்னையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் காரைக்கால் பகுதியில் நடைபெற்று வரும் விவசாயம் முற்றாக அழியும் நிலை ஏற்படும். எனவே சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் காவிரிநீர் உரிமையை நிலைநாட்ட புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கென அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி தமிழ்நாடு அரசுடன் இணைந்து புதுச்சேரியின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்டத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்,” என ரவிக்குமார் மனுவில் கூறியுள்ளார்.

    இந்த விவகாரத்தில் முதல்வர் ரங்கசாமியுடன் ஆலோசித்து விட்டு முடிவெடுப்பதாக தன்னிடம் அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளதாக ரவிக்குமார் கூறியுள்ளார்.

  3. மேகேதாட்டு விவகாரம்: தமிழக அனுமதி தேவையில்லை - கர்நாடகா காங்கிரஸ் தலைவர்

    காவிரி
    Image caption: டாக்டர் டி.கே. சிவகுமார், கர்நாடகா காங்கிரஸ் தலைவர்

    கர்நாடகா அரசு அமல்படுத்தவிருக்கும் மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார் கர்நாடகா காங்கிரஸ் தலைவர் சிவகுமார்.

    காவிரியில் மேகேதாட்டு அணை திட்டத்தை ரூ. 9000 கோடி மதிப்பில் செயல்படுத்த கர்நாடகா அரசு உத்தேசித்துள்ளது.

    பெங்களூர் நகருக்கு சீரான குடிநீர் விநியோகம், 400 மெகா வாட் மின்சாரத்தை உறுதிப்படுத்தும் மின்சார தயாரிப்பு திட்டம் ஆகியவை இந்த மேகேதாட்டு அணை திட்டத்தின் நோக்கம்.

    2017இல் இந்த திட்டத்துக்கு அப்போது ஆட்சியில் இருந்த மாநில அரசு அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கை பெற அங்கு ஆய்வு செய்ய மத்திய அரசை கர்நாடகா அரசு வற்புறுத்தி வருகிறது.

    இந்த நிலையில், க‌டந்த ஜூன் 17-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து, ‘கர்நாடக அரசின் மேகேதாட்டு திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது' என வலியுறுத்தினார். கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்திலும் மேகேதாட்டு அணை திட்டத்துக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

    இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் செவ்வாய்க்கிழமை இந்திய நீர்ப்பானத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை சந்திப்பதற்காக தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி வந்துள்ளார்.

    இந்த நிலையில், கர்நாடகா காங்கிரஸ் தலைவர் சிவகுமார், தமது ட்விட்டர் பக்கத்தில் மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக சில கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

    அதில், நீர் ஆதாரம் கொண்ட மாநிலம், அந்த நதி நீர் பாய்ந்தோடும் மாநிலத்தில், தனது திட்டங்களுக்காக அனுமதி பெறத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு தீர்ப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி கூறியுள்ளது.

    எனவே, கர்நாடகா முதல்வர், தமிழக முதல் அமைச்சரிடம் அனுமதி கோருவது சரியானதல்ல. கர்நாடகா முதல்வரிடம் அரசியல் நலன்கள் தெளிவற்று உள்ளதன் பிரதிபலிப்பே இது என்று அவர் கூறியுள்ளார்.

    முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கர்நாடகா முதல்வர் எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், 400 மெகாவாட் மின்சாரம், 4.75 டிஎம்சி குடிநீர் தேவைக்காகவே கர்நாடக அரசு மேகேதாட்டு கூட்டு குடிநீர் மற்றும் அணை கட்டும் திட்டத்தை நிறைவேற்ற முடிவெடுத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளவாறு பெங்களூரு மாநகரின் குடிநீர் தேவைக்காகவே இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இதனால் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை வழங்குவதில் எவ்வித தடங்கலும் ஏற்படாது. காவிரி நீரை நம்பியுள்ள தமிழக விவசாயிகளுக்கு இந்த திட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. இத் திட்டம் இரு மாநில மக்களுக்கும் நலனையே பயக்கும். ஆனால் தமிழக அரசு இந்த திட்டத்துக்கு எதிராக ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

    கர்நாடக அரசு அதை எதிர் கொண்டு வரும் நிலையில், இந்த திட்டத்துக்கு அனுமதி கோரி மத்திய அரசிடம் திட்ட வரைவு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

    அதே வேளையில் தமிழக அரசு காவிரி படுகையில் குந்தா, சில்லஹள்ளி ஆகிய இடங்களில் மின்சாரம் தயாரிப்பதற்காக இரு நீர் மின் திட்டங்களை நிறைவேற்ற முடிவெடுத்துள்ளது. குந்தா நீர் மின் திட்டத்தை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் கடந்த 12.2.2021 அன்று ஏற்றுக்கொண்டுள்ளது.

    சில்லஹள்ளி நீர் மின் திட்டமானது நிபுணர் குழுவின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இதுதவிர தமிழகஅரசு மேட்டூர் அணையை சுற்றியுள்ள பகுதிகளிலும், இதர காவிரிபடுகை பகுதிகளிலும் மேலும் சிலதிட்டங்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.

    இந்த சூழலில் நான் கர்நாடகாவுக்கும் தமிழகத்துக்கும் இடையே நல்ல‌ உறவை மேம்படுத்த விரும்புகிறேன். இதை தமிழக அரசு நல்ல முறையில் பரிசீலித்து, மேகேதாட்டு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்க வேண்டும். இந்த விவகாரங்களுக்கு தீர்வுகாணும் வகையில் இருமாநில அதிகாரிகளையும் உள்ளடக்கி பேச்சுவார்த்தை மேற்கொள்ளலாம்," என்று எடியூரப்பா கூறியுள்ளார்.

    View more on twitter
    View more on twitter
  4. காவிரி: டெல்லியில் நாளை மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்துடன் தமிழக அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு

    துரைமுருகன்

    காவிரியின் குறுக்கே மேகேதாட்டு தடுப்பணை கட்ட அம்மாநிலத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று டெல்லியில் நாளை இந்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை சந்தித்துப் பேசும்போது வலியுறுத்துவேன் என்று தெரிவித்துள்ளார் தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன்.

    இரண்டு நாள் பயணமாக டெல்லிக்கு திங்கட்கிழமை வந்துள்ளார் திரைமுருகன். நாளை அவர் மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார்.

    இது தொடர்பாக இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென் பெண்ணையாற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியில் கர்நாடகா அணை கட்டியது குறித்து மத்திய அமைச்சருடன் பேசவுள்ளேன். மேகேதாட்டுவிலும் அம்மாநில அரசு தடுப்பணை கட்ட அனுமதிக்க கூடாது என வலியுறுத்துவேன் என்று கூறினார்.

  5. அ.தா.பாலசுப்ரமணியன்

    பிபிசி தமிழ்

    தஞ்சாவூர்

    தஞ்சாவூரும், அதை மையமாகக் கொண்டு செழித்த பிற்கால சோழர் பேரரசும், அந்த பேரரசு விட்டுச் சென்ற சமூக, பண்பாட்டு, சமய மரபுகளும் காவிரி பாயும் இந்நிலப் பகுதியை பழங்காலத்தில் இருந்தே தமிழ்நாட்டின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக ஆக்கியிருக்கிறது. எனவே, தமிழ்நாட்டின் நில அமைப்பில் மட்டுமல்ல அரசியலிலும், பண்பாட்டிலும் இன்றும் இதயம் போன்று அமைந்திருக்கிறது காவிரிப் படுகை வட்டாரம்.

    மேலும் படிக்க
    next
  6. நைல் நதியை அலைக்கழிக்கும் ஆற்று நீர் சிக்கல் - அணையை உடைக்கச் சொன்ன டிரம்ப்

    எத்தியோப்பியாவுக்கும் எகிப்துக்கும் இடையில் போரைத் தூண்டும் வகையில் பதவியில் இருக்கும் ஓர் அமெரிக்க அதிபர் செயல்படுவது எத்தியோப்பியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவும் உறவு மற்றும் கேந்திர கூட்டுறவைப் பிரதிபலிப்பதாக இல்லை.

    மேலும் படிக்க
    next
  7. மழை

    "பலர் சேற்றுச்சகதியிலும் பாறைக்கு அடியிலும் சிக்கியுள்ளனர்," என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    மேலும் படிக்க
    next
  8. தமிழக மாணவர்களுக்கு புத்தக சுமை இனி இல்லை, வருகிறது கையடக்க கூட்டணி

    “6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் வகுப்பறைகள் வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதிக்குள் 'ஸ்மார்ட்' வகுப்புகளாக மாற்றப்படும். நம்முடைய கல்வி முறை இந்தியாவிலேயே பெரிய மாற்றத்தை கொண்டு வரும். கல்வி சேனல் மிக விரைவில் முதல்-அமைச்சர் கரங்களால் திறந்து வைக்கப்பட உள்ளது."

    மேலும் படிக்க
    next
  9. கீழடியில் இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு: தோண்ட, தோண்ட தொல்பொருட்கள்

    கீழடியில் முருகேசன் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் நேற்று குழிகளைத் தோண்டியபோது 2 அடி ஆழத்திலேயே நீண்ட சுவர் ஒன்று தென்பட்டது. அதனருகே பாதி அளவுக்கு மற்றொரு சுவரும் இருந்தது.

    மேலும் படிக்க
    next