வியட்நாம்

 1. லேடி ட்ரியூ

  வரலாற்றில் ஒரு சில ஆண்டுகளே வாழ்ந்து மறைந்திருந்தாலும், லேடி ட்ரியூவின் துணிச்சலுக்கு சில வரலாற்றாய்வாளர்கள் புனைக்கதைகளையும் எழுதி அவரது வாழ்க்கைக்கு உயிர் கொடுத்துள்ளனர். நவீன காலத்தில், ட்ரியூவின் வாழ்க்கைக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் சில விடியோகேம் நிறுவனங்கள் லேடி ட்ரியூ பெயரில் சில கதாபாத்திரங்களை உருவாக்கி இளம் தலைமுறையிடையே அவரது பெயரை பிரபலப்படுத்தி வருகின்றன.

  மேலும் படிக்க
  next
 2. Vietnam: Man gets five years in jail for spreading Covid

  லீ வான் த்ரி எனும் அந்த இளைஞர் எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றை பரப்பி உள்ளார் என்று நீதிமன்றம் கண்டுபிடித்துள்ளது. அந்த எட்டுப் பேரில் ஒருவர் உயிரிழந்துவிட்டார்.

  மேலும் படிக்க
  next
 3. எம். மணிகண்டன்

  பிபிசி தமிழ்

  தாலிபன்

  காபூல் நகரை தாலிபன்கள் கைப்பற்றியிருப்பதன் மூலம் அமெரிக்காவுக்கு வியட்நாமில் ஏற்பட்டதைப் போன்ற தோல்வி ஆப்கானிஸ்தானிலும் ஏற்பட்டிருப்பதாக பல பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகிறார்கள். சய்கோன் வீழ்ச்சியுடன் காபூலையும் ஒப்பிடுகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 4. ஜோஷூவா நெவெட்

  பிபிசி நியூஸ்

  டேனியல் எல்ஸ்பெர்க்

  பென்டகன் பேப்பர்ஸ் ஒரு நீடித்த மரபை விட்டுச் சென்றாலும், எல்ஸ்பெர்கின் கைகளில் கிடைத்த ஒரே ரகசிய ஆவணங்கள் அவை மட்டும் அல்ல.

  மேலும் படிக்க
  next
 5. Video content

  Video caption: வியட்நாமை அச்சுறுத்தும் காற்றில் வேகமாக பரவும் புதிய கொரோனா திரிபு
 6. வியட்நாமில் புதிய கொரோனா திரிபு: திரள் பரிசோதனைக்கு நடவடிக்கை

  வியட்நாமில் புதிய கொரோனா திரிபு: திரள் பரிசோதனைக்கு நடவடிக்கை

  வியட்நாமில் புதிய கொரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளதால், அதை சமாளிக்கும் விதமாக மிகப்பெரிய அளவில் பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  இங்குள்ள ஹோ ச்சீ மின் நகரின் மையப்பகுதியில் கிறிஸ்துவ மிஷன் இயங்கி வருகிறது. அங்கு மட்டும் 125க்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அந்த இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில்தான் வைரஸ் பாதிப்பு அதிகமாக காணப்படுவதால், அந்த இடத்தை முழுமையாக பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்கிறது வியட்நாம் அரசு.

  இதன் தொடர்ச்சியாக தினமும் ஒரு லட்சம் பேருக்கு வைரஸ் பரிசோதனை நடத்த அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். அதிக பாதிப்புக்குள்ளானவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்கும் நோக்குடன் இந்த பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

  இது தவிர மே 31 முதல் 15 நாட்களுக்கு வியட்நாமில் புதிய சமூக இடைவெளி வழிகாட்டுதல்களை அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது.

  அதன்படி கடைகள், வழிபாட்டுத்தலங்கள் போன்றவை தற்காலிகமாக மூடப்படும். பொது இடங்களில் 10 பேர் கூட விதிக்கப்பட்ட தடை, ஐந்து பேராக கட்டுப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அங்கு வார இறுதியில் மிகவும் ஆபத்தான ஹைபிரிட் திரிபு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

  இந்த புதிய திரிபு, இந்தியா மற்றும் பிரிட்டனில் கண்டறியப்பட்ட வைரஸ் அம்சங்களின் கலவையாக உள்ளது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

  கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் வியட்நாம் வெற்றி பெற்றிருந்தாலும், அங்கு சமீப நாட்களாக வைரஸ் பாதிப்பு அளவு உயர்ந்து வருகிறது. அந்நாட்டில் இதுவரை 7,000க்கும் அதிகமான பாதிப்புகளும் 47 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. அதில் பாதிக்கும் மேற்பட்ட பாதிப்புகள், புதிய வகை திரிபுவால் ஏற்பட்டுள்ளது அதிகாரிகளை கவலை கொள்ளச் செய்துள்ளது.

  சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்டபோது, துரிதமாக செயல்பட்ட வியட்நாம், உடனடியாக தமது எல்லைகளை மூடியது. மேலும், உள்நாட்டில் இருந்த அனைத்து வெளிநாட்டு பயணிகளையும் வெளியேற்றியது. பிறகு நாட்டுக்குள் வந்த மக்களை தனிமைப்படுத்தி பரிசோதனைக்கு உட்படுத்தியது.

  அதைத்தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கும் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் புதிதாக வைரஸ் திரிபு கண்டறியப்பட்டுள்ளதால் தமது தடுப்பூசி திட்டத்தை வேகப்படுத்த வேண்டிய அழுத்தம் வியட்நாம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு பத்து லட்சம் பேரில் ஒரு சதவீதத்தினர் மட்டுமே முதல் டோஸ் தடுப்பூசி பெற்றுள்ளனர்.

 7. வியட்நாம் அதிரடி: நகரத்திலுள்ள 13 மில்லியன் மக்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய திட்டம்

  வியட்நாம்

  இந்தியாவில் பரவிய கொரோனா திரிபு மற்றும் பிரிட்டனில் பரவிய கொரோனா வைரஸ் திரிபு கலந்த ஒரு புதிய கோவிட் திரிபு வியட்நாமில் பரவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

  இந்த வகை திரிபு காற்றில் வேகமாகப் பரவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  இந்த புதிய திரிபு "மிக ஆபத்தானது" என வியட்நாமின் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

  ஒட்டுமொத்தமாக வியட்நாமில் 7,000 பேர் கொரோனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சமீபத்தைய புதிய கொரோனா திரிபு பரவலால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்த கொரோனா பரவலைத் தடுக்க ஹோ சி மின் நகரத்தில் உள்ள 13 மில்லியன் மக்களையும் பரிசோதனை செய்ய அதிகாரிகள் திட்டமிட்டு வருகிறார்கள்.

  நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தால் கூட, நகரத்தில் உள்ள எல்லோரையும் பரிசோதனை செய்து முடிக்க 4 மாதங்களுக்கு மேல் ஆகலாம் என கூறப்படுகிறது.

  பரிசோதனை மட்டுமின்றி, மே 31ஆம் தேதி முதல் அடுத்த 15 நாட்களுக்கு புதிய சமூக இடைவெளி விதிகளையும் வியட்நாம் அரசு அறிவித்திருக்கிறது.

  கடைகள், உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கின்றன. மதம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

  “10 பேருக்கு மேல் கூடும் அனைத்து பொது நிகழ்வுகளும் நகரத்தில் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் இதை ஐந்தாக குறைக்க ஆலோசித்து வருகிறோம்” என வியட்நாம் அரசு தரப்பு கூறியுள்ளது.

  வியட்நாமின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இதுவரை சுமார் 1 சதவீதம் பேர் (1 மில்லியன் பேர்) மட்டுமே தடுப்பூசியில் ஒரு டோஸையாவது செலுத்திக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட தொடக்க காலத்தில், வியட்நாம் மிக சிறப்பாக செயல்பட்டு கொரோனா தொற்றை கட்டுப்படுத்தியது.

  தங்கள் நாட்டு மக்களைத் தவிர மற்றவர்களுக்கு எல்லைகளை மூடியது. புதிதாக நாட்டுக்குள் வந்தவர்களை பரிசோதித்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தியது. மேலும் அவர்களோடு தொடர்பில் வந்தவர்களை தடமரிந்து அவர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்தியது.

  இதனால் வியட்நாமில் கொரோனா தொற்று பெரிய அளவில் கட்டுப்பாட்டிலேயே இருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.

 8. வியட்நாம்

  இந்த புதிய வகை, பழைய வகை வைரஸ்களை காட்டிலும் வேகமாகப் பரவி வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த வகை காற்றில் வேகமாகப் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 9. Video content

  Video caption: வியட்நாம் போரில் அமெரிக்கா பயன்படுத்திய ஏஜென்ட் ஆரெஞ்ச் வேதி தாக்குதல்

  வியட்நாம் போரில் அமெரிக்கா பயன்படுத்திய ஏஜென்ட் ஆரெஞ்ச் வேதி தாக்குதல்

 10. 1968ல் ஏஜென்ட் ஆரஞ்ச் தாவரக் கொல்லி வேதிப் பொருளை சாய்கோன் என்ற பகுதியில் காடுகளின் மீது தூவியபடியே பறந்து செல்லும் அமெரிக்க விமானப்படை ஜெட் விமானம்.

  பத்து லட்சக் கணக்கான மக்கள் இந்த ஏஜென்ட் ஆரஞ்ச் தாக்குதலில் பாதிக்கப்பட்டதாகவும், 1. 5 லட்சம் குழந்தைகள் மோசமான பிறவிக் குறைபாடுகளோடு பிறந்ததாகவும் வியட்நாம் கூறுகிறது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 3