சிறுபான்மையின உரிமைகள்

 1. இந்திய சிறுபான்மையினர் ஆணைய தலைவராக இக்பால் சிங் லால்புரா நியமனம்

  இக்பால் சிங் லால்புரா
  Image caption: இக்பால் சிங் லால்புரா

  தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தன் தலைவராக எஸ். இக்பால் சிங் லால்புராவை, இந்திய அரசு முன்மொழிந்துள்ளது. அவர் பதவி ஏற்கும் நாளில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு இந்த பதவியை வகிப்பார் என்றும் சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அரசிதழ் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  பஞ்சாப் காவல்துறையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பாரதிய ஜனதா கட்சியில் தீவிரமாக பணியாற்றி வருபவர் இக்லாப் சிங் லால்புரா. இவர் அந்த கட்சியின் செய்தித்தொடர்பாளராகவும் இருக்கிறார்.

  புதிய பதவியில் தாம் தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு இக்பால் சிங் பிரதமர் நரேந்திர மோதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

  1978ஆம் ஆண்டில் பஞ்சாபில் நிரங்காரி மோதல் நடந்தபோது அந்த சம்பவத்தை விசாரிக்கும் அதிகாரிகள் குழுவில் இடம்பெற்றிருந்தவர் இக்பால் சிங் லால்புரா.

  சீக்கிய சமயத் தலைவர் ஜர்னைல் சிங்கை 1981ஆம் ஆண்டில் கைது செய்த நடவடிக்கையிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

  இந்தியாவில் 2014ஆம் ஆண்டில் சிறுபான்மையினர் பட்டியலில் சமணர்கள் சேர்க்கப்படும்வரை தேசிய சிறுபான்மையினர் ஆணைய சட்டத்தின்படி முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர், பெளத்தர்கள், பார்ஸிகள் ஆகிய ஐந்து சமூகத்தினர் மட்டுமே சிறுபான்மையினராக கருதப்பட்டனர்.

  தேசிய சிறுபான்மையினர் ஆணைய சட்டத்தின்படி முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர், பெளத்தர்கள், பார்ஸிகள் ஆகிய ஐந்து சமூகத்தினர் மட்டுமே சிறுபான்மையினராக கருதப்பட்டனர்.

  அவர்களின் நலன்களைக் காக்க தேசிய அளவில் தனி ஆணையம் அமைக்கப்பட்டது போல மாநிலங்கள் அளவிலும் அத்தகைய மாநில ஆணையம் அமைக்க வேண்டும் என்று சிறுபான்மையினர் ஆணைய சட்டம் கூறியது.

  இதில் தேசிய ஆணையத்தின் தலைவர் பதவிக்கு தகுதிவாய்ந்த ஒருவரை நியமிக்குமாறு மத்திய அரசுக்கு கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் வழக்கு ஒன்றை விசாரித்தபோது அறிவுரை வழங்கியிருந்தது. இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இக்பால் சிங் லால்புராவை மத்திய அரசு நியமித்திருக்கிறது.

  பஞ்சாப் மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், சீக்கியர்கள் பெரும்பான்மையாக வாழும் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவரான இக்பால் சிங் லால்புராவுக்கு தேசிய ஆணையம் ஒன்றின் தலைமை பதவி வழங்கப்பட்டிருப்பது அந்த மாநில அரசியலில் பரவலான கவனத்தை பெற்றிருக்கிறது.

  View more on twitter
 2. ரவி பிரகாஷ்

  பிபிசி இந்திக்காக, ராஞ்சியிலிருந்து

  ஜார்கண்ட்

  "பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 84 வயதான நபரின் ஜாமீனை எதிர்த்ததற்காக என்ஐஏவை ஒருபோதும் மன்னிக்க முடியாது. கடந்த 15-20 ஆண்டுகளாக நான் அவரை அறிவேன். அவர் ஒரு மாவோயிஸ்டு என்று நான் நம்பவில்லை," என்கிறார் பொருளாதார நிபுணரும் சமூக செயல்பாட்டாளருமான ஜீன் ட்ரெஸ் கூறினார்.

  மேலும் படிக்க
  next
 3. Video content

  Video caption: அனைவரையும் ஆச்சரியமூட்டிய ஆர்எஸ்எஸ் தலைவரின் ஒற்றுமை உரை
 4. ஹாங்காங்

  ஜனநாயகத்துக்கு ஆதரவான கருத்துகளை பிரசுரிக்கும் பத்திரிகையான ஆப்பிள் டெய்லியின் கடைசி பதிப்பை படமெடுக்க ஆயிரக்கணக்கானோர் ஹாங்காங் நகரில் குவிந்தனர். இந்த பத்திரிகை 26 ஆண்டுகளுக்குப் பிறகு தன் சேவையை நேற்று நிறுத்திக் கொண்டது. இதன் கடைசி பிரதிகள் இன்று வெளியான நிலையில், அவற்றின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியது.

  மேலும் படிக்க
  next
 5. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  சேலம்

  தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் தந்தையும் மகனும் அடித்துக்கொள்ளப்பட்ட சம்பவத்தின் ஒராண்டு நேற்று நிறைவடைந்திருக்கும் நிலையில், சேலத்தில் நிகழ்ந்திருக்கும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

  மேலும் படிக்க
  next
 6. ஷாகுஃப்தா கெளசர் மற்றும் அவரது கணவர் ஷாஃப்கட் இம்மானுவேல்

  "நமது சமூகத்தில் கையறு நிலையில் உள்ள இந்த தம்பதியினர் விடுவிக்கப்பட்டுள்ளது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்." என இந்த தம்பதியினரின் வழக்குரைஞர் மலூக் ஏஎஃப்பி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 7. லட்சத்தீவு

  சமீபத்தில் சீர்திருத்தம் என்ற பெயரில் அவர் அறிவித்துள்ள திட்டங்கள் உள்ளூர் மக்களை கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதனால், கடந்த இரண்டு தினங்களாக அங்கு மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இது பற்றிய தகவல் இணையத்தில் வெள்ளிக்கிழமை பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

  மேலும் படிக்க
  next
 8. லட்சத்தீவு விவகாரம்: பிரதமர் மோதி தலையிட ராகுல் காந்தி வலியுறுத்தல்

  Rahul

  லட்சத்தீவு மேம்பாட்டு ஆணைய ஒழுங்குமுறை வரைவில், அந்த தீவின் புனிதத்தன்மை தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ள நிலையில், அதை சீர்குலைக்கும் வகையில் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நிர்வாகி பிரஃபுல் கோடா படேல் செயல்படுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

  இது தொடர்பாக பிரதமர் மோதிக்கு ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதத்தில், "மக்கள் பிரதிநிதிகளை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக அந்த நிர்வாகி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொண்டவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவது போன்றவை எல்லாம் ஜனநாயக எதிர்ப்பு செயல்பாடு," என்று கூறியுள்ளார்.

  இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக பிரதமர் நரேந்திர மோதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 9. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  ஊழல்

  "நிர்வாகக் குழுவை கவனிக்க வேண்டிய பொறுப்பு, ஒன்றரை லட்சம் சம்பளம் வாங்கும் எம்.டிக்கும் 1 லட்சம் சம்பளம் வாங்கும் ஆடிட்டருக்கும் 4 லட்சம் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கோ இல்லை. ஆனால், 300 ரூபாய் சிட்டிங் கட்டணம் வாங்கும் எங்களை மட்டும் எப்படிப் பொறுப்பாக்க முடியும்?" என்கிறார் கூட்டுறவு சங்க நிர்வாகி.

  மேலும் படிக்க
  next
 10. மயூரேஷ் கோண்ணூர்

  பிபிசி நிருபர்

  பாலியல் கல்வி குறித்த ஒரு வழக்கில் அம்பேத்கர் தோற்ற கதை

  "அம்பேத்கர் தலித் சமூகத்தினர் மற்றும் வஞ்சிக்கப்பட்டோரின் தலைவராகத் தான் இருந்தார் என்றாலும், அவர் ஒட்டுமொத்த சமுதாயத்துக்காகவும் சிந்தித்துக் கொண்டிருந்தார். அனைத்து வகுப்புகளை உள்ளடக்கிய ஒரு நவீன சமூகம் தான் அவருடைய கனவாக இருந்தது. அவர் அந்த திசையில் பயணித்துக் கொண்டிருந்தார்."

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 3