கியூபா

 1. பல்கேரியா

  மேற்கு பல்கேரியாவின் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் திடீரென்று ஏற்பட்ட தீயில் குறைந்தபட்சம் 45 பேர் பலியாகியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.

  மேலும் படிக்க
  next
 2. ஏவுகனைகள் - மாதிரிப் படம்

  கியூபாவின் மீதமுள்ள ஆயுதங்களை அமெரிக்கா அழித்திருக்கலாம். அமெரிக்காவின் சில நகரங்களும் பதில் தாக்குதல்களை எதிர்கொண்டிருக்கலாம் என்கிற அபாயமும் இருந்தது.

  மேலும் படிக்க
  next
 3. Fidel Castro

  கியூப புரட்சியின் தந்தையும், கியூபாவின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோவின் 93வது பிறந்தநாள் இன்று. அவரது வாழ்க்கை குறித்த 20 முக்கியத் தகவல்களைத் தொகுத்து வழங்குகிறோம்.

  மேலும் படிக்க
  next
 4. கொரோனா பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு நடுவே கடந்த மாதம் கியூபாவில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடந்தன.

  பொருளாதாரம் சீரழிந்துள்ளதாகக் குற்றம் சாட்டி பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டு போராட்டம் நடத்தியதால்தான் இந்தத் திட்டங்களை அரசு முன்னெடுத்துள்ளது என்று கியூப அரசின் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

  மேலும் படிக்க
  next
 5. அமெரிக்க தூதரக ஊழியர்களுக்கு 'ஹவானா சின்ரோம்'

  ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் இருக்கும் அமெரிக்க தூதரக ஊழியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களுக்கு உண்டாகியுள்ள மூளைக் கோளாறு குறித்து அமெரிக்க அரசு விசாரித்து வருகிறது.

  ஜனவரி மாதம் ஜோ பைடன் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பின், 'ஹவானா சின்ரோம்' எனும் மர்மமான மூளைக் கோளாறு போன்ற பாதிப்பு தங்களுக்கும் வந்துள்ளது என்று 20க்கும் மேற்பட்ட அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

  இந்த பாதிப்பு கியூபாவில் 2016-17 காலகட்டத்தில் முதல் முறையாகக் கண்டறியப்பட்டது. கியூபாவின் தலைநகர் ஹவானாவின் பெயரால் இது அழைக்கப்படுகிறது.

  இந்த மர்மமான மூளைக் கோளாறு ஏன் உண்டாகிறது என்று தெளிவாகவில்லை. நுண்ணலைகள் நேரடியாகத் தாக்குவதால் இது உண்டாகலாம் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

 6. கியூபா

  கியூபாவுக்கு உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு வரும் பயணிகளுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படாது எனக் கியூபா அரசு தெரிவித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 7. பாகிஸ்தான்

  விபத்துக்குள்ளான பேருந்தில் ஆறு சீனர்கள், இரண்டு துணை ராணுவப்படை காவலர்கள், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருந்ததாக தெரிய வந்துள்ளது என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

  மேலும் படிக்க
  next
 8. A man is arrested in Cuba

  "எங்களுக்குப் பயமில்லை. எங்களுக்கு மாற்றம் தேவை. சர்வாதிகாரம் இனி எங்களுக்கு வேண்டாம்" என சான் அன்டோனியாவில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற ஒருவர் பிபிசியிடம் கூறினார்.

  மேலும் படிக்க
  next
 9. கியூபாவின் கம்யூனிச அரசுக்கு எதிர்ப்பு: போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது

  கியூபா

  கியூபாவில் நெடுங்காலத்துக்குப் பிறகு கம்யூனிஸ அரசுக்கு எதிராக நடந்த மிகப் பெரிய போராட்டத்தில் பங்கேற்ற பலர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களும் எதிர்க்கட்சியினரும் தெரிவித்துள்ளனர்.

  பொருளாதாரச் சரிவு, உணவு மற்றும் மருந்துகள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு ஆகியவை காரணமாக அரசின் மீது மக்கள் கோபத்தில் இருந்தனர்.

  இப்போது கொரோனாவை கையாண்ட விதமும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கியூபாவில் அரசுக்கு எதிராகப் பேசுவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்பதால் அங்கு நடந்திருக்கும் போராட்டங்கள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன.

  போராட்டங்களுக்கு எதிராகச் சண்டையிடும்படி கியூபாவின் அதிபர் தனது ஆதரவாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். "இங்கு உணவு இல்லை, மருந்து இல்லை, சுதந்திரமும் இல்லை" என போராட்டத்தில் ஈடுபட்ட அலெஜான்ட்ரோ என்பவர் பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார்.

  "சர்வாதிகாரம் ஒழியட்டும்", "விடுதலை வேண்டும்" என்பன போன்ற முழக்கங்கள் ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டத்தின்போது எழுப்பப்பட்டன. "எங்களுக்குப் பயமில்லை. எங்களுக்கு மாற்றம் தேவை. சர்வாதிகாரம் இனி எங்களுக்கு வேண்டாம்" என சான் அன்டோனியாவில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற ஒருவர் பிபிசியிடம் கூறினார்.

  அரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்கற்றவர்களை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அவர்களுக்கு சீரூடையில்லாத அதிகாரிகள் பலர் உதவி செய்தனர் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.

 10. சே குவேரா இந்தியப் பயணம்

  இந்தியாவுக்கு விஜயம் செய்த பின்னர் சே 1959 இல் இந்தியா குறித்த ஒரு அறிக்கையை ஃபிடல் காஸ்ட்ரோவிடம் சமர்ப்பித்தார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2