தணிக்கை

 1. Video content

  Video caption: அமெரிக்காவை அதிர வைத்த இருட்டுலக ஹேக்கர்கள் - கோடியில் பரிசு அறிவித்த அரசு

  டார்க்சைடு (DarkSide) என்னும் இணையவழித் தாக்குதல் குழுவினர் பற்றிய தரவுகள் தெரிவித்தால் சுமார் ரூ. 74 கோடி சன்மானமாக வழங்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

 2. எம்.ஏ.பரணிதரன்

  பிபிசி தமிழ்

  ஆன்லைன் மோசடிகளில் இருந்து தப்புவது எப்படி

  நுனிநாக்கு ஆங்கிலம் அல்லது காதல் ரசம் சொட்டும் மொழிகளில் பேசி இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் எளிதில் வசப்படக்கூடிய பெண்கள் அல்லது ஆண்களை தங்களுடைய இலக்காக்குகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 3. நரேந்திர மோதி

  இந்தியாவைச் சேர்ந்த துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் நரேந்திர மோடியுடன் மனித உரிமைகள் குறித்து கவலை தெரிவித்ததாக லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் எழுதியுள்ளது. இது டிரம்ப் நிர்வாகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாடு என்று செய்தித்தாள் கூறுகிறது.

  மேலும் படிக்க
  next
 4. ரெஹான் ஃபசல்

  பிபிசி செய்தியாளர்

  ஹைதராபாத் நிஜாம்

  ஹைதராபாதில் ஒரு சடங்கு இருந்தது. வருடத்திற்கு ஒரு முறை உயர்குடிமக்கள் நிஜாமிற்கு ஒரு தங்க நாணயத்தை வழங்குவார்கள். நிஜாம் அதை தொட்டு, அவர்களிடமே திருப்பி அளித்து விடுவார். ஆனால் கடைசி நிஜாம் அந்த நாணயங்களை திருப்பித் தருவதற்குப் பதிலாக தனது சிம்மாசனத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு காகிதப் பையில் வைத்துக் கொண்டிருந்தார்.

  மேலும் படிக்க
  next
 5. முரளிதரன் காசி விஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  freedom of expression india

  பொதுவாக இந்தியா முழுவதும் சிறையில் நடக்கும் கொடுமைகள், கைதிகள் மரணடைவது குறித்து தீவிர விமர்சனங்களையும் முன்வைத்தது. இந்த நிலையில், சேலம் மத்திய சிறைச்சாலையில் ஒரு பயங்கரமான சம்பவம் நடைபெற்றது.

  மேலும் படிக்க
  next
 6. விபிஎன் சேவை

  தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில் இன்டர்நெட் இணைப்பு பெற்ற ஒருவர், முடக்கப்பட்ட இணையதளத்தை பார்க்க விபிஎன் சேவையை பயன்படுத்தும்போது, அவர் வேறு ஏதோ ஒரு நகரிலோ நாட்டிலோ இருப்பதை போல இணைய குறிப்புகளில் பதிவாகும். அதனால், அவரை அடையாளம் காண்பது கடினமாகும்.

  மேலும் படிக்க
  next
 7. ராஜ் குந்த்ரா

  நடுத்தர குடும்பத்தில் பிறந்து ஆடம்பர வாழ்க்கை வாழ பல தொழில்களை செய்து வந்த ராஜ் குந்த்ராவின் தொழில் வளர்ச்சிக்கு உதவிய தொடர்புகள் மற்றும் அவற்றின் பின்புலம் எப்போதும் மர்மமானதாகவே இருந்தது. அதுபோலவே இப்போதும் அவர் சிக்கியிருக்கும் ஆபாச பட தயாரிப்பு விவகாரத்திலும் அவருக்கு நேரடி பங்களிப்பு உள்ளதா என்பதை சட்டத்தின் முன் நிரூபிப்பது மும்பை காவல்துறையினருக்கு சவாலானதாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 8. அமோல் ராஜன்

  ஊடக ஆசிரியர்

  சுந்தர் பிச்சை

  இந்தியாவின் தமிழ்நாட்டில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தார் சுந்தர் பிச்சை. கை விரலில் எண்களை சுழன்று பயன்படுத்தும் தொலைபேசிக்காக வரிசையில் காத்திருந்தது முதல், மாதாந்திர இரவு விருந்துக்காக ஒரே ஸ்கூட்டரில் குடும்பமாக பயணம் செய்தது வரை என பலதையும் அவர் பிபிசியிடம் நினைவுகூர்ந்தார்.

  மேலும் படிக்க
  next
 9. ஆலமரத்தில் ஏறினால்தான் ஆன்லைன் வகுப்பு - நாமக்கல் மாணவர்களின் அவலம்

  நாமக்கல்
  Image caption: ஆல மர கிளைகளில் அமர்ந்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் மாணவர்கள்

  கொரோனா ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடி கிடக்கின்றன. எனவே மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தவிர்க்க முடியாததாக மாறியுள்ளன.

  இந்த நிலையில் செல்பேசி சிக்னல் கிடைக்காததால் ஆலமரத்தில் ஏறி ஆன்லைன் வகுப்புகளைக் கவனிக்கிறார்கள் நாமக்கல் மாவட்டத்தில் பெரியகோம்பை கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள்.

  இங்கு ஒன்றிரண்டு மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்டால் கூட பரவாயில்லை. ஒரே மரத்தில் இருபத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் அமர்ந்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கிறார்கள்.

  இது குறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்

 10. ட்விட்டரின் விளக்கம் அடிப்படையற்றது, அவமதிப்பு: "சட்டத்துக்கு கட்டுப்பட இந்திய அரசு வலியுறுத்தல்

  இந்திய அரசு

  இந்திய அரசின் புதிய டிஜிட்டல் விதிகளுக்கு அடிபணிவது தொடர்பான ட்விட்டர் நிறுவனத்தின் விளக்கம், அடிப்படையற்றது, தவறானது மற்றும் இந்திய அரசை அவமதிப்பது போன்றது என்று இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  இந்த விவகாரத்தில் ட்விட்டர் நிறுவன செய்தித்தொடர்பாளர் விரிவான விளக்கத்தைக் கொடுத்து, அதில் இந்தியாவில் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு சாத்தியமான ஆபத்து நிலவுவதாக கூறியிருந்தார்.

  மேலும், அரசின் புதிய விதிகளுக்கு கட்டுப்பட குறைந்தது மூன்று மாதங்களாவது அவகாசம் தேவை என்றும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ட்விட்டர் நிறுவனம் சுற்றி வளைத்துப் பதில் சொல்லத் தேவையில்லை.

  சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாட்டில் அதன் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுங்கள். இறையாண்மையுள்ள நாட்டில் சட்டத்தை உருவாக்குவதும் கொள்கைகளை வகுப்பதும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமை.

  இந்த விஷயத்தில் ட்விட்டர் நிறுவனம் வெறும் சமூக ஊடக தளம் மட்டுமே. இந்தியாவின் சட்ட கொள்கை வகுப்பு அமைப்புமுறையில் இதை செய்யுங்கள் என்று பேசுவதற்கு அந்நிறுவனத்துக்கு எந்த உரிமையும் இல்லை," என்று கூறப்பட்டுள்ளது.

  View more on twitter
பக்கம் 1 இல் 4