மேற்கு வங்காளம்

 1. தமிழிசை

  டோக்யோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய வீரர் மணீஷ் நர்வால் துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் வென்றார்.

  மேலும் படிக்க
  next
 2. ராகவேந்திர ராவ்

  பிபிசி செய்தியாளர்

  Mamata Banerjee

  ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்தது என்று வைத்துக்கொள்வோம், அதை மாநில அரசு விசாரிக்க முடியுமா? இல்லை, ஏனெனில் இது இந்திய அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்ட பாதுகாப்புடன் தொடர்புடையது.

  மேலும் படிக்க
  next
 3. மமதா பானர்ஜியுடன் கனிமொழி சந்திப்பு

  திமுக கனிமொழி
  Image caption: மேற்து வங்க முதல்வர் மமபா பானர்ஜியை சந்தித்த மக்களவை திமுக எம்.பி கனிமொழி

  மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜியை டெல்லியில் அவர் தங்கியுள்ள பங்களா பவனில் மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி இன்று மாலையில் சந்தித்துப் பேசினார்.

  சுமார் 45 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்தது. பெகாசஸ் விவகாரம், 2024ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல், எதிர்கட்சிகள் ஓரணியில் நாடாளுமன்றத்தில் செயல்படுவது உள்ளிட்டவை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

  இதுகுறித்து கனிமொழி எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில், "மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜியை சந்தித்ததில் மகிழ்ச்சி. மேற்கு வங்க தேர்தலில் அவரது கட்சி அடைந்த மகத்தான வெற்றிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்தேன்.மத்திய அரசின் ஜனநாயக விரோத போக்கு மற்றும் பாசிச சக்திகளுக்கு எதிரான போரில் மொத்த நாடும் ஒன்றுபட வேண்டியதன் அவசியம் குறித்து நாங்கள் பேசினோம் என்று கூறியுள்ளார்.

 4. மோதியை சந்தித்த மம்தா: மாநிலத்தின் பெயரை மாற்றக் கோரிக்கை

  மம்தா பானர்ஜி - நரேந்திர மோதி சந்திப்பு.
  Image caption: மம்தா பானர்ஜி - நரேந்திர மோதி சந்திப்பு.

  டெல்லி வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்தார். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும், இந்த சந்திப்பின்போது மாநிலத்துக்கு அதிக அளவில் கோவிட் தடுப்பூசி, மருந்துகள், வழங்கவேண்டும் என்றும், மாநிலத்தின் பெயரை மாற்றவேண்டும் என்ற பழைய கோரிக்கையை நிறைவேற்றவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்ததாக கூறினார்.

  இந்த கோரிக்கைக்கு, "பார்க்கலாம்" என்று பிரதமர் நரேந்திர மோதி பதில் அளித்ததாக மம்தா கூறினார்.

  பிறகு செய்தியாளர்களிடம் பெகாசஸ் உளவு சர்ச்சை குறித்துப் பேசிய மம்தா பானர்ஜி இந்த விஷயத்தில் பிரதமர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

 5. பசவராஜ் பொம்மை - எடியூரப்பா

  தமிழ்நாடு, இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளை இந்தப் பக்கத்தில் தொடர்ந்து நேரலையாக வழங்குகிறோம்.

  Follow
  next
 6. விவசாயிகளின் துயரத்தை அலட்சியப்படுத்தும் மத்திய அரசு: மமதா பானர்ஜி

  MAMATA BANERJEE

  இந்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் விவசாயிகளின் துயரங்கள் அலட்சியப்படுத்தப்படுவதாக மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

  மேற்கு வஙக்தத்தில் சிங்கூர் நில மறுவாழ்வு மற்றும் மேம்பாட்டு மசோதா கொண்டு வரப்பட்டதன் 10ஆம் ஆண்டு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.

  இதையொட்டி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட இடுகைகள் மூலம் தமது பழைய நிகழ்வுகளை நினைவுகூர்ந்துள்ளார் மமதா பானர்ஜி.

  "நமது சமூகத்தின் முதுகெலும்பு விவசாயிகள்," என்று குறிப்பிட்டுள்ள அவர், "விவசாயிகளின் நீண்ட கால போராட்டத்தின் விளைவாக மேற்கு வங்க மாநிலத்தில் சிங்கூர் நில மறுழாவ்வு மற்றும் மேம்பாட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது. ஒற்றுமையாக நாம் போராடி விவசாயிகளின் உரிமைகளை மீட்டோம். அது அவர்களின் வாழ்வில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தியது. ஆனால், இங்கே விவசாயிகளுக்கு ஆதரவாக நாம் அவர்களின் பிரச்னைகளை தீர்க்க முற்படும் வேளையில், அங்கே மத்திய அரசு அவர்களின் துயரங்களை அலட்சியப்படுத்தி வருகிறது," என்று மமதா பானர்ஜி கூறியுள்ளார்.

  மேற்கு வங்கத்தில் 2006இல் ஆட்சியில் இருந்த இடதுசாரிகள் அரசு, சிங்கூரில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தி டாடா குழுமத்திடம் வழங்கியது.

  ஆனால், பின்னர் ஆட்சிக்கு வந்த மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் அரசு, அந்த நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக சட்டம் இயற்றியது.

  ஆனால், நிலம் கையகப்படுத்தியது சரியே என்று விசாரணை நீதிமன்றமும், அதற்கு எதிராக சட்டமியற்றிய மாநில அரசின் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் உயர் நீதிமன்றம் கூறின.

  ஆனாலும் அந்த தீர்ப்பை எதிர்த்து விவசாயிகள் மேல்முறையீடு செய்ததில், அவர்களுக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

 7. பிரபாகர் மணி திவாரி

  கொல்கத்தாவிலிருந்து, பிபிசி ஹிந்திக்காக

  முகுல் மற்றும் மம்தா

  டிஎம்சி தலைமையகத்தில் முகுலுடன் நடந்த சுமார் ஒரு மணி நேரச் சந்திப்புக்குப் பின்னர், பத்திரிகையாளர்களிடம் பேசிய மம்தா பேனர்ஜி அவர் மீண்டும் கட்சிக்குத் திரும்புவது குறித்த முறையான அறிவிப்பை வெளியிட்டார்.

  மேலும் படிக்க
  next
 8. மேற்கு வங்க மாநில முன்னாள் தலைமை செயலருக்கு மத்திய அரசு நோட்டீஸ்

  Mamata Banerjee

  மேற்கு வங்க மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோதி கடந்த வாரம் பயணம் செய்தபோது அவர் தலைமையில் நடந்த யாஸ் புயல் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கத் தவறியது குறித்து அப்போது தலைமைச் செயலாளர் பதவியில் இருந்த அலப்பன் பந்தோபாத்யாயவிடம் விளக்கம் கேட்டு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

  தற்போது அவர் அரசுப் பதவியில் விலகி மமதா பானர்ஜியின் தலைமை ஆலோசகர் ஆக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

  மாநில அரசின் தலைமைச் செயலாளர் பதவி வகித்த அலப்பன் பந்தோபாத்யாயவின் பதவிக்காலம் மே 31ஆம் தேதி நிறைவடையவிருந்தது. இந்த நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அவருக்கு மத்திய அரசு மூன்று மாத பணி நீட்டிப்பு வழங்கியது.

  மாநிலத்தில் நிலவும் கொரோனா பெருந்தொற்று சூழல் மற்றும் யாஸ் புயல் பாதிப்புக்கு பிந்தைய நிலைமையை ஆய்வு செய்யும் பணிகளை கவனிக்க வசதியாக அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று மாநில முதல்வர் மமதா பானர்ஜி கேட்டுக் கொண்டிருந்தார்.

  அதை ஏற்று மத்திய அரசும் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கியது. இந்த நிலையில், கடந்த வாரம் பிரதமர் மோதி மேற்கு வங்கம் சென்றபோது அவரை வரவேற்க தலைமை செயலாளர் வரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், பிரதமர் தலைமையில் நடைபெற்ற அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை.

  மத்திய அரசு அதிகாரிகள் கொடுத்த அழுத்தத்தின்பேரில் சில நிமிடங்கள் மட்டுமே அவர் முதல்வர் மமதா பானர்ஜியுடன் கூட்டம் நடந்த அறைக்கு வந்து விட்டு பிறகு முதல்வருடனேயே திரும்பச் சென்றார்.

  முன்னதாக, இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் மற்றும் முதல்வர் வருவதற்காக பிரதமர் தலைமையில் அதிகாரிகள் குழு சுமார் 15 நிமிடங்கள் வரை காத்திருந்தது.

  இதைத்தொடர்ந்து மறுநாள் மத்திய அரசிடம் இருந்து மேற்கு வங்க அரசுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், உடனடியாக அலப்பன் பந்தோபாத்யாயவை விடுவித்து மத்திய பணிக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. அவர் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு டெல்லியில் மத்திய பணியாளர் நலத்துறையில் மத்திய பணியில் சேர வேண்டும் என்றும் அழுத்தம் கொடுக்கப்பட்டது.

  ஆனால், யாரும் எதிர்பாராத திடீர் திருப்பமாக திங்கட்கிழமை காலையில் மாநில அரசின் தலைமை செயலாளர் பதவியில் இருந்து அலப்பன் பந்தோபாத்யாய விலகி விட்டதாக முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்தார். அவர், தமது தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதைத்தொடர்ந்து மாநிலத்துக்கு புதிய அரசு தலைமை செயலாளராக ஹெச்.கே. துவிவேதி என்ற ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மமதா பானர்ஜி தெரிவித்தார்.

 9. மேற்கு வங்க அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்கள்

  மேற்கு வங்க மாநிலத்தில் அரசு தலைமைச் செயலாளர் அலபன் பந்தோபாத்யாயவை மத்திய அரசுப் பணிக்காக விடுவிக்க வேண்டும் என்று இந்திய அரசு அழுத்தம் கொடுத்த விவகாரத்தில் புதிய திருப்பமாக, தமது அரசுப் பதவியில் இருந்து அந்த ஐஏஎஸ் உயரதிகாரி விலகியிருக்கிறார். மேலும், அவரை தமது தலைமை ஆலோசகராக நியமித்திருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி.

  இதுகுறித்து விரிவாகப் படிக்க: மேற்கு வங்க தலைமைச் செயலரை பதவி விலகச் செய்து தலைமை ஆலோசகராக்கிய முதல்வர்

 10. மோதி Vs மமதா: மேற்கு வங்க தலைமைச் செயலரை பதவி விலகச் செய்து தலைமை ஆலோசகராக்கிய முதல்வர்

  தமது ஆணைக்கு இணங்காத மாநிலத்தில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரியை மத்திய பணிக்கு அழைத்துக் கொள்ளும் ஆளும் மத்திய அரசின் அதிகாரத்தை செயல்படுத்த முடியாத தடையை மமதா பானர்ஜி ஏற்படுத்தியிருக்கிறார். இந்த நடவடிக்கை, மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் இரு வேறு எதிரெதிர் கட்சிகளின் அரசியல் மற்றும் அதிகார போட்டியின் உச்சமாக பார்க்கப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 7