குஜராத்

 1. அமீர் கான்

  சியட் டயர் உற்பத்தி நிறுவனம், தனது தொழிலை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் ஒரு காணொளி விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. அதில் நடித்துள்ள இந்தி நடிகர் அமீர் கான், பொதுமக்கள் தெருவில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது என்று சொல்லும் காட்சி இடம் பெற்றுள்ளது. இதற்கு கர்நாடகத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி., அனந்தகுமார் ஹெக்டே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 2. Video content

  Video caption: அறிவியல் சாதனை: 70 வயதில் குழந்தை பெற்ற பெண்

  குஜராத் மாநிலம் கட்ச் அருகே உள்ள மோடா என்ற கிராமத்தில் திருமணமாகி 45 ஆண்டுகளுக்குப் பிறகு 70 வயதான ஒரு பெண் தொழில்நுட்பத்தின் உதவியுடன் குழந்தை பெற்றிருக்கிறார்.

 3. காங்கிரஸில் முறைப்படி இணைந்த கனையா குமார், ஜிக்னேஷ் மேக்வானி

  காங்கிரஸ்
  Image caption: கனையா குமார், ஜிக்னேஷ் மேக்வானி

  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவருமான கனையா குமார் மற்றும் தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.

  இவர்கள் இருவரும் செப்டம்பர் 27ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் சேர திட்டமிட்டிருந்தனர். ஆனால், விவசாயிகள் சங்கங்கள் ஒரே நாளில் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததால் இவர்களின் கட்சியில் சேரும் நிகழ்வு ஒரு நாள் தள்ளிவைக்கப்பட்டது.

  முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் கனையா குமார் ராகுல் காந்தியை சந்தித்தார், அவர் கட்சியில் சேருவதாக வதந்திகள் கிளம்பின. அதைத்தொடர்ந்து, குஜராத் சுயேச்சை எம்எல்ஏவான ஜிக்னேஷ் மேவானி கடந்த வாரம் கன்ஹையா குமாருடன் காங்கிரசில் சேரும் அறிவிப்பை வெளியிட்டார். 2017இல் நடந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள வட்கம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஜிக்னேஷ் மேவானி வெற்றி பெற்றார்.

 4. அமிர்தசரஸ் சாகிப், பஞ்சாப்

  நாட்டிலுள்ள சுமார் 10கோடி மக்கள் இந்த குறைந்தபட்ச 15 இடங்களுக்கான பயணத்தை மேற்கொண்டாலும், அது 150கோடி பயணங்களாகும்!

  மேலும் படிக்க
  next
 5. ஃபுளோரா அசோதியா

  காரில் வந்து இறங்கிய ஃபுளோராவுக்கு மாவட்ட காவல்துறை சார்பில் காவலர்கள் அணிவகுத்து மரியாதை செலுத்தினர். அவர்களின் வணக்கத்தை ஏற்றுக் கொண்டதும், மாவட்ட ஆட்சியர் சந்தீப் சாகேல், ஃபுளோராவை ஆட்சியரின் அறைக்கு அழைத்துச் சென்று இருக்கையில் அமரச் செய்தார்.

  மேலும் படிக்க
  next
 6. Video content

  Video caption: ஆமதாபாதின் ஒரு நாள் கலெக்டர் ஆன 11 வயது சிறுமி - நெகிழ்ச்சிக்காணொளி

  குஜராத் மாநிலம் ஆமதாபாதில் உள்ள 11 வயது சிறுமி ஃபுளோரா, மூளைக்கட்டி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது கனவை நனவாக்கியிருக்கிறார் ஆமதாபாத் மாவட்ட ஆட்சியர்.

 7. Video content

  Video caption: அழிந்து வரும் இந்தியாவின் 'நீச்சலடிக்கும் ஒட்டகங்கள்'

  இந்தியாவில் வாழும் இந்த அரிய வகை ஒட்டக இனம் தங்களின் இருப்பிடத்தை இழந்து வருகின்றன. அதன் முக்கிய காரணம் என்ன?

 8. பதவி விலகிய முதல்வர் விஜய் ரூபானியுடன், புதிதாக முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட பூபேந்திர பட்டேல் (இடது).

  குஜராத் அரசியலில் திடீர் திருப்பமாக முதலமைச்சர் விஜய் ரூபானி தனது பதவியில் இருந்து விலகுவதாக சனிக்கிழமை அறிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 9. குஜராத் முதல்வரை தேர்வு செய்ய இந்திய அமைச்சர்கள் இருவர் பயணம்

  குஜராத் மாநில பாஜக முதல்வர் விஜய் ரூபானி தனது பதவி விலகல் கடிதத்தை சனிக்கிழமை ஒப்படைத்துள்ள நிலையில், புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக பாஜக மத்தியப் பார்வையாளர்களாக இரண்டு ஒன்றிய அமைச்சர்கள் குஜராத் பயணம் செய்கிறார்கள்.

  அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி, நரேந்திர சிங் தோமர் ஆகிய இருவரும்தான் மத்தியப் பார்வையாளர்களாக குஜராத் செல்கிறவர்கள்.

  புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான பாஜக சட்டமன்றக் கட்சியின் கூட்டம் இன்று நடக்கிறது.

 10. பூபேந்திர பட்டேல்

  குஜராத் மாநில முதல்வராக இருந்த விஜய் ரூபானி பதவி விலகியதை அடுத்து அந்த பதவிக்கு பூபேந்திர பட்டேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  Follow
  next
பக்கம் 1 இல் 10