ஐ.நா பாதுகாப்பு சபை

 1. வந்துகொண்டிருக்கும் செய்திஆப்கானிஸ்தானுக்கு உதவ ஐ.நா, சர்வதேச அமைப்புகள் வேண்டுகோள்

  ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான உதவிகள் வழங்க நிதியுதவி செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச நிவாரண உதவிகள் வழங்கும் அமைப்புகளும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

  இது தொடர்பாக அவை கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான உதவிகள் வழங்க தங்களுக்கு 800 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு தட்டுப்பாடு உள்ளது," என கூறப்பட்டுள்ளது.

  ஆப்கானிஸ்தானுக்கான இந்த ஆண்டுக்கான தமது பங்கு நிதியுதவியை இரட்டிப்பாக்கி 286 மில்லியனாக வழங்குவதாக பிரிட்டன் ஏற்கெனவே அறிவித்துள்ளது.

 2. நிக்கோலா கரீம், அஷிதா நாகேஷ்

  பிபிசி செய்திகள், காபூல் மற்றும் லண்டன்

  ஆப்கானிஸ்தான்

  ஆஃப்கானிஸ்தானில் பெரும்பாலான பகுதிகளை தாலிபன்கள் கைப்பற்றி விட்டார்கள். தலைநகர் காபூலை அவர்கள் எந்நேரமும் நெருங்கக் கூடும். இந்த நிலையில், சொந்த மாவட்டங்களில் உயிர் தப்பிக்க நினைத்து காபூலுக்கு நுழைந்தவர்கள் எதிர்பாராத பிரச்னைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் ஆளாகியுள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 3. ஆஃப்கானிஸ்தான் நெருக்கடி: பதவி விலகுவாரா அதிபர்?

  ஆப்கானிஸ்தான்
  Image caption: அஷ்ரஃப் கனி, ஆஃப்கானிஸ்தான் அதிபர்

  ஆப்கானிஸ்தான் அதிபர் பதவியில் இருந்து அஷ்ரஃப் கனி பதவி விலக மாட்டார் என்பது இன்று அவர் விடுத்துள்ள செய்தியில் இருந்து தெளிவாகிறது என்று அங்குள்ள பிபிசி செய்தியாளர் சிக்கந்தர் கெர்மானி.

  சிதறிக்கிடக்கும் பாதுகாப்பு படையினரை ஒருங்கிணைப்பது, தாலிபன்களுக்கு எதிரான தாக்குதலை தொடருவது என்றவாறு தமது திட்டங்களை நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது அதிபர் அஷ்ரஃப் கனி தெளிவுபடுத்தியிருப்பதாக சிக்கந்தர் கெர்மானி தெரிவித்தார்.

  எனினும், தற்போது பல நகரங்களை தாலிபன்கள் கைப்பற்றி வருவதைத் தொடர்ந்து அவர்கள் முன்னேறி வருவது அரசுக்கு ஒருவித நடுக்கத்தையே ஏற்படுத்தியிருக்க வேண்டும் என தாம் கருதுவதாக பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

  அச்சத்தில் பொதுமக்கள்

  தற்போது தலைநகர் காபூலில் தாலிபன்களின் நடவடிக்கைகக்கு ஆதரவாக இல்லாவிட்டால்தான் தங்களுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற அச்சத்தில் உள்ளூர்வாசிகள் இருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

  ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் முன்னேறிய நடவடிக்கைகள் தொடர்பாக சமீபத்தில் மதிப்பிட்டுள்ள அமெரிக்க உளவு அமைப்பு, இதே போக்கில் தாலிபன்கள் முன்னேறி வந்தால், 30 நாட்களில் தலைநகர் காபூலை அவர்கள் கைப்பற்றக்கூடும் என்று கணித்துள்ளது. கடைசியாக நேற்று காபூலில் இருந்து 80 கி.மீ தூரத்தில் உள்ள லோகார் மாகாண தலைநகர் புல் இ ஆலம் என்ற நகரை தாலிபன்கள் கைப்பற்றினார்கள்.

  ஆஃப்கானிஸ்தானின் இரண்டாவது நகரான கந்தஹாரை கைப்பற்றிய பிறகு அந்த நாட்டின் பாதி முக்கிய நகரங்கள் தாலிபன்கள் வசம் வந்துள்ளன. அங்குள்ள நிலைமை கையை மீறிச் செல்வதாகவும் அங்கு மோதல் தொடர்ந்தால், அதற்கு அதிக விலையை கொடுப்பவர்கள் பொதுமக்களாகவே இருப்பர் என்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ கூட்டரெஷ் தெரிவித்துள்ளார்.

  மீண்டும் ஷரிய சட்டம்: தாலிபன்கள் உறுதி

  இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் தகாத உறவு கொண்டால் கல்லடி தாக்குதல், திருட்டு குற்றத்துக்கு கால்களை முடமாக்குதல், 12 வயதுக்கு பிறகு சிறுமிகள் பள்ளி செல்ல தடை உள்ளிட்ட தமது ஷரிய சட்டங்களை அமல்படுத்துவதில் உறுதியுடன் இருப்பதாக தாலிபன்களின் முன்கள தளபதிகளும் களத்தில் உள்ள வீரர்களும் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

  View more on twitter
 4. தாலிபன் தாக்குதல்: தப்பிச்செல்லும் அகதிகள் - பக்கத்து நாடுகளுக்கு ஐ.நா. வேண்டுகோள்

  ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் அதிவேகமாக முன்னேறி வருவதால் அவர்களுடைய தாக்குதலுக்குப் பயந்து வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகள் அகதிகளை அனுமதிக்கும் வகையில் தங்கள் எல்லைகளைத் திறந்து வைக்கவேண்டும் என்று ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது.

  உள்நாட்டிலேயே இடம் பெயர்கிறவர்கள், தலைநகர் காபூல்தான் பாதுகாப்பான இடம் என்று கருதி அங்கே செல்கிறார்கள். உணவுப் பொருள் பற்றாக்குறை தீவிரமாக இருப்பதாக உலக உணவு நிறுவனம் கூறியுள்ளது. மனிதாபிமான சிக்கல் குறித்தும் அது எச்சரித்துள்ளது.

  குழந்தை
 5. இஸ்ரேல் காசா

  ஹமாஸின் ராக்கெட் தாக்குதலில் 560 க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் காயம் அடைந்துள்ளனர். இருப்பினும், இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்பின் திறமையால் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. ஏனெனில் அந்த அமைப்பு ஹமாஸால் வானத்தில் ஏவப்பட்ட ராக்கெட்டுகளை அழிக்கும் திறனைக் கொண்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 6. தடுப்பூசி

  கோவேக்ஸ் என்னும் திட்டம், பணக்கார நாடுகள், ஏழை நாடுகள் என அனைத்து நாடுகளிலும் தடுப்பூசிகள் நியாயமான முறையில் பகிரப்படுவதை உறுதிசெய்கிறது. இது உலக சுகாதார அமைப்பின் தலைமையில் செயல்படுகிறது. உலகளாவிய தடுப்பூசி கூட்டணி (காவி, gavi) மற்றும் தொற்றுநோய்களுக்கான தயார் நிலைப் புத்தாக்கங்களுக்கான கூட்டணி (செபி, CEPI) ஆகியவற்றை உள்ளடக்கியது.

  மேலும் படிக்க
  next
 7. டாம் ஹீப்

  பிபிசி ரேடியா 4 வழங்கிய புவியைக் காக்கும் 39 வழிகள்

  பருவநிலை மாற்றம்

  இந்த அணியினரை 'கோஸ்ட் பஸ்டர்ஸ்' என்று அழைக்கிறார்கள். அவர்கள் மிகத் தீவிரமாக பசுங்குடில் வாயுக்களைப் பின் தொடர்ந்து, அது நம் வளிமண்டலத்தில் கலந்து பருவநிலை சீர்கேடுகள் ஏற்படுத்துவதற்கு முன் அதை அழிக்கிறார்கள். சில நேரங்களில் அவர்கள் 'சில் ஹண்டர்ஸ்' என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 8. ரஞ்சன் அருண் பிரசாத்

  பிபிசி தமிழுக்காக

  ராஜ்பக்ச

  ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது, இலங்கையின் மனித உரிமையை மேலும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கான யோசனையாகவே காணப்படுகின்றது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் கூறுகிறார்.

  மேலும் படிக்க
  next
 9. Video content

  Video caption: இலங்கைக்கு எதிரான தீர்மானம்: வாக்கெடுப்பை தவிர்த்த இந்தியா, தமிழர்களுக்கு பயன் தருமா
 10. நாடு முழுவதும் போராட்டக்காரர்கள் தடுப்பரண்களை ஏற்படுத்திக் கொண்டனர்.

  பல நகரங்களில் போராட்டக்காரர்கள் மீது எச்சரிக்கைகூட விடுக்காமல் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பாதுகாப்புப் படைகள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2