சேலம்

 1. எடப்பாடி பழனிசாமி

  மணி எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

  மேலும் படிக்க
  next
 2. சேலம் இடிபாடு

  வணிக எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தி பலகாரம் செய்த போது தான் விபத்து நடந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் வணிக எரிவாயு சிலிண்டர்களை வீடுகளில் வைத்து பலகாரம் செய்வதை கண்காணித்து அதைத் தடுக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று சம்பவ பகுதியை நேரில் பார்த்த அமைச்சர் நேரு தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 3. சேலத்தில் சமையல் சிலிண்டர் வெடித்து 5 பேர் உயிரிழப்பு; 4 வீடுகள் தரைமட்டம்

  சிலிண்டர் வெடிப்பு

  சேலத்தில் வீட்டு கேஸ் சிலிண்டர் வெடித்ததில் நான்கு வீடுகள் தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கிய தீயணைப்பு அலுவலர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். 15 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

  சேலம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் கோவில் தெரு பகுதியில் ஏராளமான தனியார் குடியிருப்புகள் உள்ளன.

  இதில் அதே பகுதியை சேர்ந்த வெங்கட்ராஜன் என்பவரின் கட்டிடத்தில் கணேசன், பத்மநாபன், கோபி மற்றும் முருகன் ஆகிய நான்கு குடும்பங்கள் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர்.

  இந்த நிலையில் கோபி வீட்டில் அவரது மனைவி ராஜலட்சுமி இன்று காலை வழக்கம்போல் சமையல் செய்வதற்காக கேஸ் அடுப்பை பத்த வைத்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்துள்ளது .

  இதனால் அருகில் இருந்த வீடும், மேல்தளத்தில் இருந்த இரண்டு வீடும் என நான்கு வீடுகளும் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது .

  மேலும் வெடித்து சிதறியதில் சாலையில் இருந்த பால்காரர் மற்றும் அருகில் கோலம் போட்டு கொண்டிருந்த தனலட்சுமி என்பவரின் மீது கற்கள் விழுந்ததில் பலத்த காயமடைந்தனர்.

  இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினர், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

  இதில் சுதர்சன், கோபால், சுப்பிரமணி, தனலட்சுமி, நாக சுதா, இந்திராணி, மோகன்ராஜ், கோபி, லோகேஷ், ராஜலட்சுமி , பூஜாஸ்ரீ,வெங்கடராஜன்

  உள்ளிட்ட 12 பேரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

  அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  இதில் 80 வயதான ராஜலட்சுமி என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

  தொடர்ந்து மீட்பு போராட்டத்திற்கு பிறகு முருகன் என்பவரது 10 வயது மகள் பூஜாஸ்ரீ என்ற சிறுமி காயத்துடன் பத்திரமாக மீட்கப்பட்டார்.

  மேலும் தீயணைப்பு துறையில் பணிபுரிந்து வரும் பத்மநாபன் அவரது மனைவி தேவி மற்றும் பூஜாஸ்ரீயின் அண்ணன் கார்த்திக் ராம் ஆகிய மூன்று பேரும் இடிபாடுகளில் சிக்கியிருந்தனர்.

  அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து 6 மணி நேரமாக நடைபெற்று வந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கிய தீயணைப்புத்துறை சிறப்பு அலுவலர் பத்மநாபன் அவரது மனைவி தேவி மற்றும் கார்த்திக் ராம், எல்லம்மாள் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர் .

  மீட்பு பணியில் 55 பேர் ஈடுபட்டு இருப்பதாகவும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை பத்திரமாக மீட்கும் பொருட்டு மிகுந்த எச்சரிக்கையுடன் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்தார்.

  மேலும் அவர் கூறும் போது விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் விசாரணையின் முடிவிலேயே விபத்துக்கான முழு விவரம் தெரியவரும் என்றும் அவர் கூறினார்.

  சிலிண்டர்
 4. நெஞ்சுவலி

  "நெஞ்சு வலியால ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாகச் சொல்லியருக்கிறார்கள். ரொம்ப சீரியஸானா சொல்றோம். அப்ப வந்தா போதும், இல்லாட்டி வர வேணாம்னு சொன்னாங்க. ஆனா நாங்க புறப்பட்டுக்கிட்டிருக்கோம்" என்று கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான தர்மராஜின் மனைவி வெண்ணிலா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 5. Video content

  Video caption: ஏற்காடு ஸ்பெஷல் 'மயோனைஸ் மிளகாய் பஜ்ஜி'

  மிளகாய் பஜ்ஜி கடைக்காரர்கள் பஜ்ஜியை தொட்டு சாப்பிட பிரத்யோகமாக ஒரு வகையான சட்னி தயார் செய்து கொடுக்கின்றனர் அந்த சட்னி பஜ்ஜிக்கு மேலும் சுவை கூட்டுகிறது

 6. Video content

  Video caption: நிலத்தை வாங்கி ஏரியை உருவாக்கிய நாமக்கல் இளைஞர்கள்

  கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள பேளுக்குறிச்சியில் வறட்சியை போக்க ஏரியை உருவாக்கியிருக்கிறார்கள் நாமக்கல் மாவட்ட இளைஞர்கள்.

 7. Video content

  Video caption: தித்திக்க வைக்கும் சேலம் "ஜிலேபி தெரு"
 8. Video content

  Video caption: 'உணவு சமைக்க கடலெண்ணெய்க்கு திரும்பும் மக்கள்' - சூடு பிடிக்கும் உரல் தொழில்

  மரச் செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய் குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதே போல எண்ணெய் ஆட்டுவதற்காக 'கல் செக்கு' தயாரித்து விற்கிறார் இவர்.

 9. தங்க நகைகளை உருக்கும் திட்டத்தின் மூலம் ஊழல் நடக்க வாய்ப்பு உள்ளது. இந்த திட்டத்தை கைவிடக்கோரி வரும் 26-ல் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்

  ஏ.எம். சுதாகர்

  சேலம்
  Image caption: சேலத்தில் இந்து முன்னணி அமைப்பினர் நடத்திய ஆர்ப்பாட்டம்

  தங்க நகைகளை உருக்கும் திட்டத்தின் மூலம் ஊழல் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதால் அந்த திட்டத்தை கைவிடக் கோரி வரும் 26-ல் தமிழகம் ழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

  இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பராமரிக்கப்படும் நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி இந்து முன்னணி காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் இந்து முன்னணியினர் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் சேலத்தில் இன்று நடைபெற்றது.

  இதையொட்டி சேலம் திருவள்ளுவர் சிலையில் இருந்து பேரணியாக வந்த இந்து முன்னணி அமைப்பினர். சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  பின்னர் தங்களுடைய கோரிக்கை மனுவை கோட்டை மாரியம்மன் பாதத்தில் வைத்து வேண்டிக் கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய காடேஸ்வரா சுப்பிரமணியம், "கோயில்களில் உள்ள நகைகளை உருக்குவதற்கு தமிழக அரசுக்கு எந்தஅதிகாரமும் இல்லை. தமிழகத்தில் கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. அதனை மீட்க ஆர்வம் காட்டாமல், இதுபோன்ற நடவடிக்கைகளில் தமிழக அரசு வீணாக நேரம் செலவழித்து வருகிறது," என்றார்.

  "தங்க நகைகளை உருக்கும் திட்டத்தின் மூலம் ஊழல் நடக்க வாய்ப்பு உள்ளது. பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய நகைகள், கோயில்களுக்குத்தான் பயன்பட வேண்டும். அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும். அதற்காக இந்து முன்னணி இந்த பிரசார யாத்திரையை நடத்தி வருகிறது. இந்த திட்டத்தை கைவிடக்கோரி வரும் 26-ல் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்." என்றார் காடேஸ்வரா சுப்பிரமணியம்.

 10. லக்கிம்பூர் சம்பவம் அரசை எதிர்க்கும் யாரும் கொல்லப்படுவார்கள் என்ற செய்தியை விடுக்கிறது - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்

  ஏ.எம். சுதாகர்

  சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்
  Image caption: சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்

  லக்கிம்பூர் விவசாயிகள் போராட்ட சம்பவம் மூலம் போராடுபவர்கள் யாராக இருந்தாலும் கொல்லப்படுவார்கள் என்பதையே மத்தியில் ஆளும் பாஜக அரசின் நடவடிக்கை உணர்த்துகிறது என்று கூறியிருக்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்.

  சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழக மீனவர்களுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது. இலங்கை அரசு இந்திய அரசுடன் மிகுந்த நட்புடன் பல உதவிகளை செய்து வருகிறது. ஆனாலும் பாதிக்கப்படும் தமிழக மீனவர்கள் குறித்து மத்திய அரசு கவலைப்பட்டதாக தெரியவில்லை," என்றார்.

  "லக்கிம்பூர் விவசாயிகள் போராட்டத்தில் நடந்த வன்முறை தொடர்பாக பிரதமர் குறைபட்சம் அனுதாபம்கூட தெரிவிக்கவில்லை. போராடுபவர்கள் யாராக இருந்தாலும் கொல்லப்படுவார்கள் என்பதையே பிரதமரின் நடவடிக்கை உணர்த்துகிறது," என்று முத்தரசன் கூறினார்.

  "பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை கட்டுக்கடங்காமல் இறக்கை கட்டி பறக்கிறது. எரிபொருட்கள் விலை உயர்வால் தற்போது அனைத்து அத்தியாவசிய பொருட்களும் விலை உயரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு விதிக்கின்ற வரியே விலை உயர்வுக்கு அடிப்படைக் காரணம். மக்கள் பிரச்னைகள் பற்றி கவலை கொள்ளாமல், தங்களை தற்காத்துக் கொள்வதாக எதிர்கட்சி தலைவரின் நடவடிக்கைகள் உள்ளது. விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் வருகின்ற 30ஆம் தேதி சைக்கிள் பேரணி நடத்தப்படும்," என்று முத்தரசன் தெரிவித்தார்.

பக்கம் 1 இல் 7