நவ்ஜோத் சிங் சித்து

 1. வந்துகொண்டிருக்கும் செய்திமத்திய இணை அமைச்சரின் மகன் கைது, பிரியங்கா காந்தி விடுதலை - 24 மணி நேரத்தில் நடக்காவிட்டால் லக்கிம்பூர் நோக்கி பேரணி - எச்சரிக்கும் நவ்ஜோத் சித்து

  உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் ஏற்பட்ட வன்முறையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்வது, தடுப்புக்காவலில் உள்ள பிரியங்கா காந்தியை விடுதலை செய்வது ஆகியவற்றை 24 மணி நேரத்துக்குள் செய்யாவிட்டால், பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸார் லக்கிம்பூர் நோக்கி பேரணியாக புறப்படுவார்கள் என்று எச்சரித்திருக்கிறார், பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்து.

  பஞ்சாப் மாநிலத்தில் அமரிந்தர் சிங் தலைமையிலான அமைச்சரவை பதவி விலகியதும், சரண்ஜித் சிங் சன்னி தலைமையில் அரசு அமைந்தது. இதைத்தொடர்ந்து பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சித்து விலகியிருந்தார்.

  இந்த நிலையில், பிரியங்கா காந்தி லக்கிம்பூர் செல்ல முற்பட்டபோது சீதாபூரில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது மாநிலத்தில் அமைதியை குலைக்க முயன்றதாக மாநில காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

  அவரை சந்திக்க பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி உத்தர பிரதேச மாநில எல்லையை நேற்று அடைந்தபோது, மாநில எல்லையிலேயே அவர் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.

  இதேபோல, இன்று சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ்பாகெலும் லக்னெவ் வந்தபோது, அவரையும் விமான நிலையத்தை தாண்டிச் செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதனால் அவர் விமான நிலையத்திலேயே அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டார்.

  View more on twitter
 2. வந்துகொண்டிருக்கும் செய்திஅமித் ஷாவுடன் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் சந்திப்பு

  பஞ்சாப் அரசியல்
  Image caption: இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த அமரிந்தர் சிங்

  பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியில் முதல்வர் பதவியை கடந்த வாரம் ராஜிநாமா செய்த அமரிந்தர் சிங், இன்று டெல்லியில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

  சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அமரிந்தர் சிங், "எந்தவொரு அரசியல் தலைவரையும் சந்திக்க நான் இங்கு வரவில்லை. அமித் ஷாவை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன்," என்று கூறினார்.

  முன்னதாக, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் அமரிந்தர் சிங் சேரலாம் என்றும் அது தொடர்பாக ஆலோசனை நடத்தவே அவர் டெல்லி வந்துள்ளதாகவும் தகவல் பரவியது.

  ஆனால், அந்த தகவலை அமரிந்தர் சிங் உறுதிப்படுத்தவில்லை.

  பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டியில் அதன் மாநில தலைவராக இருந்த நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஆதரவாக அம்மாநிலத்தின் அமைச்சர்கள் சிலர் முதல்வராக இருந்த அமரிந்தர் சிங்குக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர்.

  இந்த நிலையில், அமரிந்தர் சிங் தமது முதல்வர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்தார். இதையடுத்து பஞ்சாப் புதிய முதல்வராக சரண்ஜித் சன்னி சமீபத்தில் பதவியேற்றுக் கொண்டார்.

  அவரது அமைச்சரவையில் பலர் புதிதாக சேர்க்கப்பட்டிருந்தனர். இத்தகைய முன்னேற்றங்கள் பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட நிலையில், திடீரென்று மாநில காங்கிரஸ் தலைவர் பதவயில் இருந்து நவ்ஜோத் சித்து விலகி தமது ராஜிநாமா கடிதத்தை காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி வைத்தார்.

  உண்மைக்காகவும் பஞ்சாப் மாநில மக்களுக்காகவும் குரல் கொடுக்கப்போவதாக அவர் கூறியிருந்தார்.

  சரண்ஜித் சிங் சன்னி அமைச்சரவையில் மாநில தலைவரான தமது ஆதரவில்லாத சிலரை சேர்க்க காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுத்ததால்தான் அதிருப்தியில் நவ்ஜோத் சித்து பதவி விலகியதாக கூறப்பட்டது.

  முன்னதாக, பல ஆண்டுகளாக காங்கிரஸுக்காக உழைத்த தன்னை நம்பாமல் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்சியில் சேர்ந்த நவ்ஜோத் சித்து தலைமையில் காங்கிரஸை வழிநடத்த கட்சி மேலிடம் முடிவெடுத்திருப்பது அழிவுகரமான முடிவு என்று முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் கூறினார்.

  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு நவ்ஜோத் சித்து நெருக்கமானவர் என்றும் அவரது தலைமையில் கட்சியும் அவர் கைகாட்டிய நபர் தலைமையில் ஆட்சி நடைபெறுவதும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

  இத்தகைய சூழலில் அமரிந்தர் சிங் அமித் ஷாவை சந்தித்துப் பேசியிருக்கிறார்.

 3. வந்துகொண்டிருக்கும் செய்திபஞ்சாப் மக்களுக்காக எதையும் தியாகம் செய்வேன்: நவ்ஜோத் சித்து

  View more on twitter

  பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து இருந்து ராஜிநாமா செய்துள்ள நவ்ஜோத் சிங் சித்து தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சமீபத்திய காணொளியில், 'சத்தியத்துக்கான மோதலில் இறுதி வரை தொடர்ந்து போராடுவேன்' என்று கூறியுள்ளார்.

  அந்த காணொளியில் பஞ்சாபி மொழியில் பேசியுள்ள அவர், “அன்புள்ள பஞ்சாபிகளே, எனது 17 வருட அரசியல் பயணம் ஒரு நோக்கத்துடனேயே முடிவு செய்யப்பட்டுள்ளது. அது பஞ்சாப் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், ஒரு பிரச்னையில் தீர்க்கமான முடிவை எடுப்பதையும் நோக்கமாகக் கொண்டது. அதுவே எனது மதம், அதுவே எனது கடமை. இதுநாள் வரை எந்த விஷயத்திலும் எனக்கு தனிப்பட்ட முறையில் யாருடனும் மோதல் இருந்ததில்லை," என்று கூறியுள்ளார்.

 4. வந்துகொண்டிருக்கும் செய்திபஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சித்து விலகல்

  பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து விலகியிருக்கிறார்.

  அவர் கட்சியில் நீடிப்பார் என்று தெளிவாக கூறியிருந்தாலும். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய இந்த ராஜிநாமா கடிதத்தில், "சமரசம் செய்வதன் மூலம் ஒரு நபரின் மனசாட்சி சரிந்துவிடும். பஞ்சாபின் எதிர்காலம் மற்றும் பஞ்சாப் மக்களின் நலன் குறித்து நான் ஒருபோதும் சமரசம் செய்ய முடியாது. அதனால் தான் நான் பஞ்சாபில் இருக்கிறேன். நான் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை ராஜிநாமா செய்கிறேன். நான் தொடர்ந்து காங்கிரசுக்கு சேவை செய்வேன்" என்று கூறியுள்ளார்.

  முன்னதாக, பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலை பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து மற்றும் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையில் காங்கிரஸ் எதிர்கொள்ளும் என்று அக்கட்சியின் பஞ்சாப் மாநில பொறுப்பாளர் ஹரிஷ் ராவத் தெரிவித்திருந்தார்.

  View more on twitter
 5. அரவிந்த் சாப்ரா

  பிபிசி செய்தியாளர்

  அமரீந்தர்

  "என்னை கட்சியிலிருந்து வெளியேற்றுங்கள், நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை. நான் அவரை (நவஜோத் சித்து) (முதல்வர்) ஆக விடமாட்டேன்" என்று கூறியிருக்கிறார் பஞ்சாபின் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்.

  மேலும் படிக்க
  next
 6. பஞ்சாபின் தலித்' முதல்வராகும் சரண்ஜித் சன்னி - யார் இவர்? சர்ச்சை என்ன?

  பஞ்சாப் அரசியல்
  Image caption: சரண்ஜித் சிங் சன்னி

  பஞ்சாப் மாநில புதிய முதல்வராக சரண்ஜித் சன்னி (49) நாளை பதவியேற்கவிருக்கிறார்.

  அந்த மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் மாநில தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழிலக பயிற்சித்துறை அமைச்சராக இருந்த அவர், இதற்கு முன்பு பஞ்சாப் சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவராக ஓராண்டுக்கு இருந்திருக்கிறார்.

  பஞ்சாப் மாநிலத்தின் ராம்தஸியா சீக்கியர் (பட்டியலினத்தில் உள்ளது) சமூகத்தைச் சேர்ந்தவர் சரண்ஜித் சிங். அங்குள்ள சம்கூர் சாஹிப் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு இவர் தேர்வானார்.

  கேப்டன் அமரிந்தர் சிங் அமைச்சரவையில் 2017ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி சேர்க்கப்பட்ட இவருக்கு தொழில்நுட்ப கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.

  முன்னதாக, பஞ்சாப் மாநில முதல்வர் பதவியில் இருந்து அமரிந்தர் சிங் விலகிய பிறகு அந்த பதவிக்கு ரந்தவா அல்லது சரண்ஜித் சிங் தேர்வாகலாம் என்று கூறப்பட்டது.இது குறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.

 7. விராட் கோஹ்லி

  ஐக்கிய அரபு எமிரேட்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியின் தற்போதைய ஆட்டத்துக்குப் பிறகு ஆர்சிபி அணி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

  Follow
  next
 8. பஞ்சாப் அரசியல்

  பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே மாநில முதல்வர் அமரிந்தர் சிங்குக்கும் கடந்த ஜூலை மாதம் 18ஆம் தேதி காங்கிரஸ் மாநில தலைவராக நியமிக்கப்பட்ட நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே கசப்புணர்வு நிலவி வருகிறது. 2019இல் நடந்த மக்களவை தேர்தலில் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் பிரசார நடவடிக்கைகளை சித்துவே வழிநடத்தினார். அப்போதே முதல்வர் அமரிந்தர் சிங்குக்கு முக்கியத்துவம் குறைந்ததாக கூறப்பட்டது. தேர்தலுக்குப் பிறகு முதல்வரின் செயல்பாடுகளை நவ்ஜோத் சிங் சித்து வெளிப்படையாக விமர்சித்தார்.

  மேலும் படிக்க
  next