சீனா

 1. டேனியல் க்ரேமர்

  பிபிசி செய்திகள்

  அமெரிக்காவில் பொம்மைகள் பற்றாக்குறை

  உலகம் முழுக்க, மக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் காபி முதல் நிலக்கரி வரை பல பொருட்களின் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர் கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட இடையூறுகளே காரணம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் எதார்த்தத்தில் பொருட்கள் பற்றாக்குறைக்கு பல காரணிகள் உள்ளன.

  மேலும் படிக்க
  next
 2. ஹைபர்சோனிக் ஏவுகனை சோதனையை நடத்தவில்லை - மறுக்கும் சீனா

  சீனா

  சீனா ஹைபர்சோனிக் ஏவுகனை சோதனையை நடத்தவில்லை என்று அந்நாட்டு அரசு மறுத்துள்ளது.

  இது தொடர்பாக பிரிட்டிஷ் நாளிதழான ஃபைனான்ஷியல் டைம்ஸில் வெளியான செய்தியை மறுத்த சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ட்செள லிஜியான், "எங்கள் நாடு வழக்கமான விண்கல சோதனையில் ஈடுபட்டது என்றும் அதற்கும் ஏவுகனை சோதனைக்கும் தொடர்பு இல்லை," என்று கூறினார்.

  முன்னதாக, சீனாவின் ஹைபர்சோனிக் ஏவுகனை சோதனை தொடர்பான செய்தி வெளிவந்தவுடன் அமெரிக்காவில் கடும் எதிர்வினையாற்றப்பட்டது.

  அந்த நாட்டின் ஆயுதப்படைகளுக்கான நாடாளுமன்ற குழு உறுப்பினர் மைல் கல்லெகர், "சீனாவின் இதுபோன்ற செயல்களுக்கு அமெரிக்காவும் ஏதாவது செய்ய வேண்டும். இல்லையென்றால் 10 ஆண்டுகளுக்குள்ளாகவே சீனாவுடனான பனிப்போரில் அமெரிக்கா தோற்று விடும்," என்று கூறினார்.

  இதேவிவகாரம் குறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின் கருத்து கூறுகையில், "சீனாவின் ஆயுத திறன்கள் தொடர்பான நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஆனால், இந்த குறிப்பிட்ட தகவல் பற்றி கருத்து வெளியிட முடியாது," என்று தெரிவித்தார்.

 3. வெயி யிப்

  பிபிசி செய்திகள்

  ராணுவ வீரர்

  சமீபத்தில் வெளியாகி உலகத்திலேயே அதிகமாக வசூலைக் குவித்திருக்கும் திரைப்படம் எது தெரியுமா? ஜேம்ஸ் பாண்டின் "நோ டைம் டு டை" அல்லது மார்வெல்லின் ஷாங்-சி, இல்லையென்றால் "லெஜண்ட் ஆப் தி டென் ரிங்ஸ்" என நீங்கள் நினைத்திருந்தால் அது தவறு.

  மேலும் படிக்க
  next
 4. லிங்க்ட் இன்

  சமீபத்தில், லிங்க்ட்இன் நிறுவனம் மெலிசா சான் மற்றும் கிரெக் ப்ரூனோ உட்பட பல பத்திரிகையாளர்களின் கணக்குகளை அதன் சீன வலைத்தளத்திலிருந்து கருப்புப் பட்டியலில் சேர்த்தது.

  மேலும் படிக்க
  next
 5. பூடான்மகிழ்ச்சி

  ஏதோவொரு காலத்தில் எதேச்சையாக கண்டறியப்பட்ட தொல்லியல் தடங்கள் அல்லது கண்டுபிடிப்புகள், கட்டுமானப் பணிகளின்போது கண்டெடுக்கப்பட்ட அகழ்வுப் பொருட்கள் மூலமே பூடானிய வரலாறுக்கு அவ்வப்போது சில கண்டுபிடிப்பாளர்கள் உயிர் கொடுத்தார்கள்.

  மேலும் படிக்க
  next
 6. சீனாவில் குரான் செயலியை நீக்கிய ஆப்பிள்

  குரான் மஜீத் செயலி
  Image caption: குரான் மஜீத் செயலி.

  உலகின் மிகப் பிரபலமான குரான் செயலிகளில் ஒன்றான 'குரான் மஜீத் (Quran Majeed)' என்கிற தன் செயலியை சீனாவில் உள்ள பயர்னர்களுக்கான ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது ஆப்பிள்.

  செயலியை சீனாவில் சுமார் 10 லட்சம் பயனர்கள் பயன்படுத்தியதாக அச்செயலியை உருவாக்கிய பி டி எம் எஸ் நிறுவனம் கூறியுள்ளது.

  அந்த செயலியில் உள்ள சில உள்ளடக்கங்களுக்கு சீன அரசில் கூடுதல் ஆவணப்படுத்தல்கள் தேவைப்பட்டதால் செயலி நீக்கப்பட்டதாக ஆப்பிள் கூறியிருக்கிறது என்று பி டி எம் எஸ் நிறுவனம் தன் செய்தியறிக்கையில் கூறியுள்ளது. சட்டவிரோதமான மதம் சார்ந்த எழுத்துகள் இடம் பெற்றிருந்ததால் இந்த செயலி நீக்கப்பட்டதாக பிபிசிக்கு தெரியவருகிறது.

  இது குறித்து பிபிசி கருத்து கேட்டபோது சீன அரசிடம் இருந்து பதில் ஏதும் வரவில்லை.

  ஆப்பிள் நிறுவனமும் இப்பிரச்சனை தொடர்பாக எந்த வித நேரடி பதிலையும் கொடுக்காமல், தன் மனித உரிமை கொள்கைகள் பக்கத்தைச் சுட்டிக் காட்டுகிறது. அதில், ஆப்பிள் நிறுவனம் அந்தந்த நாட்டு சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். ஆனால், சில நேரங்களில் சில சிக்கலான விஷயங்களில் அரசுகளின் கருத்தில் தங்களுக்கு மாறுபாடு இருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 7. சோனியா

  "நான் முழுநேரமும் செயல்படும் காங்கிரஸ் தலைவர்தான்" என்று சோனியா பேசியிருப்பது காங்கிரஸ் கட்சியில் உள்ள விமர்சகர்களுக்கு சொல்லும் பதிலாகப் பார்க்கப்படுகிறது. அதே நேரம் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பற்றியும் அவர் பேசியுள்ளார்.

  Follow
  next
 8. விக்டோரியா கில்

  அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூஸ்

  மின்னணு பொருடகள்

  2021ம் ஆண்டில் சேர்ந்த பழைய மொபைல் போன், டிவி போன்ற எலக்ட்ரானிக் கழிவுகள் 57 மில்லியன் டன் அளவுக்கு குவிந்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 9. டேவிட் பிரௌன்

  பிபிசி நியூஸ்

  சீனா

  "சீனா கார்பன் அளவை குறைக்காவிட்டால் நம்மால் பருவநிலை மாற்றத்தை வெல்ல முடியாது," என்கிறார் லேன்செஸ்டர் சுற்றுச்சூழல் மையத்தை சேர்ந்த பேராசிரியர் டேவிட் டைஃபீல்டு.

  மேலும் படிக்க
  next
 10. चीन

  அடல் பிஹாரி வாஜ்பாய் அரசில் வெளியுறவு செயலராக இருந்த கன்வல் சிபல், சீனாவின் எதிர்ப்புக்கு இந்தியா அளித்த பதிலை மறு ட்வீட் செய்து, "சீன வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை சவாலான மொழியில் உள்ளது. நமது பதில் மிகவும் மென்மையாக உள்ளது. சர்ச்சையில் சிக்காமல் இருக்க நல்ல காரணங்கள் இருக்கலாம். எனவே நாம் அச்சுறுத்தும் மொழியைப் பயன்படுத்தவில்லை. ஆனால் நாம் இன்னும் வலுவாக பதிலளிக்க முடியும்."

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 100