திமுக

 1. ஆ விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  எம் ஆர் விஜயபாஸ்கர்

  விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள், உறவினர் வீடுகள் என 50 இடங்களில் ரெய்டு நடந்தது. தொடர்ந்து சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

  மேலும் படிக்க
  next
 2. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  ஸ்டாலின்

  இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை டெல்லியில் சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவருக்கு மதுரை குறித்த 'Multiple Facets of My Madurai' என்ற புத்தகத்தை பரிசளித்திருக்கிறார். மனோகர் தேவதாஸின் இந்தப் புத்தகம் எதைப் பற்றியது?

  மேலும் படிக்க
  next
 3. பரணி தரன்

  பிபிசி தமிழ்

  காமராஜ்

  1963ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி காமராஜ் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தபோது, அவருக்கு திராவிடர் கழக தலைவர் ஈ.வெ. ராமசாமி ஒரு தந்தி அனுப்பினார். அதில், காமராஜின் முடிவு அவருக்கு மட்டுமின்றி தமிழக மக்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு ஒப்பானது என்று ஈ.வெ.ரா குறிப்பிட்டார்.

  மேலும் படிக்க
  next
 4. எம்.மணிகண்டன்

  பிபிசி தமிழ்

  வானதி

  வரலாற்றில் கொங்கு நாடு என்ற ஒன்று இருந்ததா, அப்படி இருந்தால் அதை யார் ஆட்சி செய்தார்கள், அந்த நிலப்பரப்பின் முக்கியத்துவம் என்ன, அவற்றுக்கெல்லாம் ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றனவா என்பதை விளக்கும் கட்டுரை இது

  மேலும் படிக்க
  next
 5. "நீட் வேண்டாம்" - தமிழக முதல்வரிடம் ஏ.கே. ராஜன் குழு அறிக்கை

  முரளிதரன் காசி விஸ்வநாதன், பிபிசி தமிழ்

  நீட் தமிழக அரசு

  மருத்துவம், பல் மருத்துவ நுழைவுத்தேர்வுக்காக மத்திய அரசு நடத்தும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தீர்வான நீட் தேவையில்லை என பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக அந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய தமிழக அரசு நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கை அளித்துள்ளது.

  இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் ஏ.கே. ராஜன் குழு இன்று அறிக்கை அளித்துள்ளது.

  இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.கே. ராஜன், குழுவில் உள்ளவர்களின் தனிப்பட்ட கருத்துகளை அறிக்கையில் பிரதிபலிக்கவில்லை என்றும் பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டே தங்களுடைய அறிக்கையை முதல்வரிடம் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். இதில், பெரும்பாலோனோர் நீட் தேர்வு தேவையில்லை என்ற கருத்தையே கொண்டிருந்ததாகவும் ஏ.கே. ராஜன் கூறினார்.

  முன்னதாக, மாநிலத்தில் பின்தங்கிய மற்றும் கிராமப்புற மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேரும் விஷயத்தில், நீட் தேர்வு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா? என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஏ.கே. ராஜன் தலைமையிலான 9 பேர் அடங்கிய குழுவை தமிழக அரசு கடந்த ஜூன் 10ஆம் தேதி கேட்டுக் கொண்டது.இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

  இதைத்தொடர்ந்து பலதரப்பட்ட மக்கள்,மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட தரப்பினரிடம் கருத்துகள் பெறப்பட்டு அதன் அடிப்படையில் 165 பக்க அறிக்கையை நீதிபதி ஏ.கே. ராஜன் குழு இன்று முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் அளித்துள்ளது.

  நீட் தேர்வு குறித்த கருத்துகளைத் தெரிவிக்கலாம் என இந்தக் குழு அறிவித்ததையடுத்து சுமார் 86 ஆயிரம் பேர் இந்தக் குழுவிடம் தமது கருத்துத் தெரிவித்திருந்தார்கள்.

  இதற்கிடையே, இந்தக் குழு அமைக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக்கோரி பா.ஜ.கவின் செயலர் கரு. நாகராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தால் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.

  NEET
  Image caption: கோப்புப்படம்
 6. Thoppu ND venkadacalam

  அ.தி.மு.க ஆட்சியில் சுற்றுச்சூழல், வருவாய்த்துறை ஆகியவற்றில் அமைச்சராகப் பணிபுரிந்த தோப்பு வெங்கடாச்சலத்துக்கு 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. சுயேச்சையாகக் களமிறங்கியவரை, கட்சியில் இருந்து பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் நீக்கினர்.

  மேலும் படிக்க
  next
 7. ஆ விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  தாயுள்ளத்தோடு அரவணைக்கிறார் ஸ்டாலின்' - தி.மு.கவில் இணையும் தோப்பு வெங்கடாச்சலம்

  ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியோடு பல வகையிலும் தோப்பு வெங்கடாச்சலம் முரண்பட்டார். பெருந்துறை தொகுதியில் இவருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் செயல்படுவதாகவும் தகவல் வெளியானது.

  மேலும் படிக்க
  next
 8. ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு 1.5 டன் ஆவின் இனிப்புகள்

  சேலத்தில் அமைச்சர் நாசர் அதிர்ச்சி குற்றச்சாட்டு

  `அ.தி.மு.க ஆட்சியில் அப்போதைய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு 1.5 டன் ஆவின் இனிப்புகள் இலவசமாக அனுப்பப்பட்டுள்ளதற்கு ஆதாரம் உள்ளது' என தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் தெரிவித்துள்ளார்.

  சேலம் மாவட்டத்தில் உள்ள ஆவின் பால் பண்ணையில் நாசர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சேலம் மாநகரில் செயல்பட்டு வரும் பால் விற்பனை மையங்களைப் பார்வையிட்டார். பின்னர், பால் பண்ணை வளாகத்தில் உள்ள பால் பொருள் உற்பத்திப் பிரிவு, கிடங்கு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.

  இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர், `` கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஆவின் நிறுவனத்துக்கு 234 ஊழியர்கள் முறைகேடாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களைப் பணிநீக்கம் செய்வது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இதுதவிர, 636 முதுநிலை மற்றும்இளநிலை ஆலை பணியாளர்களை நியமிப்பதற்காக முறைகேடாகப் பணம் பெற்றுள்ளதாகத் தகவல் வந்துள்ளது. இதையடுத்து அந்த நியமனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு புதிதாக ஊழியர்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

  தொடர்ந்து பேசிய அமைச்சர் நாசர், `` தமிழ்நாட்டில் பால் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது. பால்விலை குறைப்பால் அரசுக்கு 270 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரசின் விலை குறைப்புக்குப் பிறகும் பழைய விலைக்கே பாலை விற்பனைசெய்து வந்த 22 நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 25 பால் கூட்டுறவு ஒன்றியங்களிலும் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்தது. அதிலும், சேலம், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஆவின் பால் பண்ணையில் பெரும் அளவில் ஊழல் நடந்துள்ளது. இதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

  மேலும், "முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு தீபாவளி நேரத்தில் ஒன்றரை டன் அளவுக்கு ஆவின் இனிப்புகள் இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கான ஆதாரம் உள்ளது. இதன்பேரில் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார் நாசர்.

 9. Video content

  Video caption: கொங்கு மண்டலம்: அதிமுக-வை பலவீனப்படுத்த திமுக-வின் வியூகம் என்ன?

  கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.கவை பலவீனப்படுத்தும் பணிகளில் தி.மு.க ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

 10. தடுப்பூசி மையத்தில் 'மோடிக்கு நன்றி' பேனர்: திமுக - பாஜக வாக்குவாதம்

  கொரோனா தடுப்பூசி மையத்துக்கு எதிரே பிரதமர் நரேந்திர மோதிக்கு நன்றி தெரிவித்து பாஜகவினர் வைத்த பேனர்.
  Image caption: கொரோனா தடுப்பூசி மையத்துக்கு எதிரே பிரதமர் நரேந்திர மோதிக்கு நன்றி தெரிவித்து பாஜகவினர் வைத்த பேனர்.

  கோவை ராஜவீதியில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்துவதற்கான மையம் செயல்படுகிறது.இன்று காலை தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் இங்கு செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் பள்ளி முகப்பில், உக்கடம் பாஜக உறுப்பினர்கள் சார்பில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பேனர் வைக்கப்பட்டிருந்தது.தடுப்பூசி மையத்திற்கு வந்த திமுகவினர் பேனரை அகற்றக் கோரி பாஜக தொண்டர்களிடம் வலியுறுத்தினர். இதனையடுத்து, இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரிய கடைவீதி காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால், தடுப்பூசி செலுத்தும் பணிகள் சிறிது நேரம் தடைபட்டது.பின்னர், காவல்துறையினரின் பாதுகாப்போடு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. பேனரை அகற்றக் கோரி திமுகவினர் காவல்துறையினரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

பக்கம் 1 இல் 51