இஸ்ரேல்

 1. ஒமிக்ரான் அச்சம்: வெளிநாட்டினருக்கு தடை விதிக்கிறது இஸ்ரேல்

  இஸ்ரேல்

  புதிய கொரோனா திரிபு பரவி வருவதையடுத்து வெளிநாடுகளில் இருந்து வருவோர் நாட்டுக்குள் நுழைவதற்கு இஸ்ரேல் 14 நாள்கள் தடைவிதிக்க இருக்கிறது.

  அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, இன்று நள்ளிரவு முதல் இந்தத் தடை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் திரிபு இஸ்ரேலில் ஒருவருக்கு தொற்றியிருப்பது இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.

  புதிய திரிபு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகள் தென்னாப்பிரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளில் இருந்து வருவோருக்கு பல நாடுகள் தடை விதித்திருக்கின்றன.

  50 பிறழ்வுகளைக் கொண்ட இந்தத் திரிபை "கவலைக்குரிய திரிபு" என உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தியுள்ளது.

 2. Israeli security officials stand behind tape at crime scene

  இஸ்ரேல் - பாலத்தீன மோதலின் மையமாக கிழக்கு ஜெருசலேம் உள்ளது. இந்த பகுதி தங்களுக்குத்தான் சொந்தம் என்று இரு தரப்பினரும் கூறுகின்றனர். 1967ஆம் ஆண்டு நடந்த மத்திய கிழக்கு போருக்குப் பின்பு கிழக்கு ஜெருசலேம் நகரை இஸ்ரேல் ஆக்கிரமித்தது.

  மேலும் படிக்க
  next
 3. கரினே எல்ஹாரர், இஸ்ரேல் எரிசக்தித் துறை அமைச்சர்

  கரினெ எல்ஹாரர் மாநாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை எனில், பருவநிலை மாநாட்டின் செவ்வாய்கிழமை நிகழ்ச்சியில் தானும் கலந்து கொள்ள முடியாது என இஸ்ரேல் பிரதமர் நஃப்டாலி கூறியதாக ஓர் அதிகாரி கூறினார்.

  மேலும் படிக்க
  next
 4. Video content

  Video caption: காணாமல் போகும் சாக்கடல் - பாதிப்புகளை பிரதிபலிக்கும் நோக்கில் ஒரு நிர்வாண புகைப்படம்

  ஸ்பென்சர் டூனிக் என்கிற புகைப்படக் கலைஞர் சாக்கடல் அருகில், 200 பேரை நிர்வாணமாக நிறுத்தி சுற்றுசூழல் பாதிப்புகளை பிரதிபலிக்கும் விதத்தில் ஒரு படத்தை எடுத்துள்ளார்.

 5. காசா ஜாடிகள் சில உடையாமல் நல்ல நிலையில் உள்ளன.

  இந்த இடத்தில் ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் லிட்டர் ஒயின் தயாரிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 6. இஸ்ரேல் தாக்குதலில் 5 பாலத்தீனர்கள் பலி

  மேற்கு கரைப் பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையில் ஐந்து பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

  தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக தாங்கள் நடவடிக்கை மேற்கொண்டதாகவும் அதன்போது இறந்த ஐவரும் ஹமாஸ் அமைப்பின் உறுப்பினர்கள் என்றும் இஸ்ரேலிய ராணுவம் தெரிவிக்கிறது.

  பாலத்தீன தரப்பிலிருந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் தங்கள் நாட்டு ராணுவத்தினர் இருவருக்கும் தீவிர காயம் ஏற்பட்டுள்ளது என்றும் இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது.

  தங்கள் உறுப்பினர்கள் நால்வர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் ஹமாஸ் அமைப்பு பதிலடி கொடுப்பது குறித்து பரிசீலனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

  பர்குய்ன் எனும் பகுதியில் இருவரும் ஜெருசலேம் அருகே உள்ள பித்து எனும் இடத்தில் மூவரும் கொல்லப்பட்டுள்ளதாக பாலத்தீன் சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

  israel palestine
 7. இஸ்ரேல் சிறையில் இருந்து தப்பிய பாலத்தீன கைதிகளில் நால்வர் பிடிபட்டனர்

  இஸ்ரேல் சிறை ஒன்றில் இருந்து இந்த வார தொடக்கத்தில் தப்பிய ஆறு பாலத்தீனர்களில் நான்கு பேர் மீண்டும் பிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய காவல்துறை தெரிவித்துள்ளது.

  அவர்களில் இருவர் சனிக்கிழமை அதிகாலை கார் நிறுத்தம் ஒன்றில் பதுங்கி இருந்த போது பிடிக்கப்பட்டனர் என்றும் மற்ற இருவர் வெள்ளிக்கிழமை அன்று நாசரேத் நகரின் அருகே பிடிக்கப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளது இஸ்ரேல் காவல்துறை.

  மேற்குக் கரையில் உள்ள நகரான ஜெனின் எனும் நகரிலுள் அல்-அக்சா தியாகிகள் படையின் முன்னாள் தளபதி சக்காரியா ஜூபெய்தியும் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவராவார். மீதமுள்ள மூவர் 'இஸ்லாமிய ஜிகாத்' எனும் அமைப்பினர் ஆவர்.

  கடந்த திங்களன்று இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் உள்ள கில்போ சிறைச்சாலையில் இருந்து ஆறு பேர் தப்பிய பின் அவர்களுக்கான தேடுதல் வேட்டை தொடங்கியது.

  வயல் வெளி அருகே தப்பியோடிய கைதிகள் வெளியே வந்த வழி.
  Image caption: வயல் வெளி அருகே தப்பியோடிய கைதிகள் வெளியே வந்த வழி.
 8. இஸ்ரேல் சிறையில் இருந்து தப்பிய பாலத்தீனர்கள். சித்தரிக்கும் படம்.

  தப்பிய சிறைக்கைதிகள் ஆறு பேரும் திங்களன்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:30 மணி அளவில் சிறையிலிருந்து தப்பிச் செல்வதை அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் காட்டுகின்றன.

  மேலும் படிக்க
  next
 9. புஷ்

  உலக வர்த்தக மைய வளாகத்தில் பணியாற்றிய சுமார் 4 ஆயிரம் யூதர்கள் அன்றைய தினம் பணிக்கு வர வேண்டாம் என முன்னரே எச்சரிக்கப்பட்டிருந்ததாகவும் இவர்கள் கூறுகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 10. Video content

  Video caption: பின்தலை ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் - போராடி பிரித்த மருத்துவர்கள்

  இஸ்ரேல் நாட்டில் பின்தலை இணைந்த படி பிறந்த இரட்டைக் குழந்தைகளை, பன்னாட்டு மருத்துவ நிபுணர்கள் இணைந்து அறுவை சிகிச்சை செய்து பிரித்திருக்கிறார்கள்.

பக்கம் 1 இல் 12